அடேய், என் மகனை ஃபாலோ செய்தது நீயா? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய Elon Musk! மாட்டிய நபர் யார் தெரியுமா?

|

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 26 மைல் தொலைவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்ததில் மஸ்க்கின் பாதுகாப்பு குழுவிற்கும் மர்ம நபர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அடேய், என் மகனை ஃபாலோ செய்தது நீயா? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய Elon Musk!

ட்விட்டரை வாங்கிய நாளில் இருந்து தினசரி ஏதாவது ஒரு தகவலில் பேசு பொருளாக இருந்து வரும் Elon Musk, சமீப காலமாக இதுபோன்ற ஃபாலோ செய்பவர்களை சமாளிக்க வேண்டிய சூழலை சந்தித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் மஸ்க்கை பின்தொடர்ந்ததாகக் கூறப்படும் நபர் உபர் ஈட்ஸ் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

ட்விட்டரை வாங்கியதில் இருந்து ஏதாவது ஒரு விஷயத்தை செய்து தினசரி பேசு பொருளாக இருந்து வரும் எலான் மஸ்க், சமீபகாலமாக தன்னை பின் தொடர்ந்து வரும் ஸ்டாக்கர்களை சமாளிக்க வேண்டி இருந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 26 மைல் தொலைவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் மஸ்கின் பாதுகாப்புக் குழுவிற்கும் ஸ்டாக்கர் ஒருவருக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மஸ்க்கை பின்தொடர்ந்ததாக கூறப்படும் அந்த நபர் உபர் ஈட்ஸ் தொழிலாளி என்பது தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. மஸ்க் இதுகுறித்த வீடியோவை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முதலில் அந்த வீடியோவில் உள்ள தகவலை பார்க்கலாம்.

எலான் மஸ்க் இன் மகன் லில் எக்ஸ் சென்ற காரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து இருக்கிறார். இதுகுறித்த வீடியோவை தான் மஸ்க் ட்விட்டரில் நேரடியாக பகிர்ந்து இவர் யார் என்று தெரியுமா எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். முகமூடியுடன் பின்தொடர்ந்த நபர் யார், மஸ்க்கின் மகனை தொடரக் காரணம் என்ன என இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

தான் அந்த காரில் இருந்ததாக நினைத்து அந்த நபர் என் மகன் சென்ற காரை பின் தொடர்ந்து இருப்பதாக மஸ்க் அந்த வீடியோவில் குறிப்பிட்டார். இந்த நபர் அல்லது காரை யாருக்கேனும் தெரியுமா என எனவும் மஸ்க் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி காரில் அமர்ந்திருக்கிறார், வீடியோவில் அந்த நபர் முகமூடி அணிந்தபடியே மொபைல எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்குகிறார். தொடர்ந்து காரின் நம்பர் பிளேட் காட்டப்படுகிறது. அதில் CJ82G38 என கார் எண் பதிவிடப்பட்டிருக்கிறது.

வீடியோவுடன் மஸ்க் பதிவிட்ட கருத்துகள் குறித்து பார்க்கையில், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் என் மகன் லில் எக்ஸ் சென்ற காரை ஒருவன் பின்தொடர்ந்தான். அது நான் என நினைத்து. தொடர்ந்து காரை தடுத்து நிறுத்தினான். என் குடும்பத்திற்கு தீங்கி விளைவிக்க உதவும் ஸ்வீனி மற்றும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மஸ்க் குறிப்பிட்டார்.

எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் இருக்கும் இடங்களை வீடியோவாக வெளியிட்டு வந்தவர் ஜாக் ஸ்வீனி ஆவார். இவரின் ஆதரவுடன் தான் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது என கருதி மஸ்க் இந்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து ஜாக் ஸ்வீனி ட்விட்டர் பக்கம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. மஸ்க் பதிவிட்ட இந்த வீடியோ ட்விட்டரில் பேசு பொருளாக மாறியது.

வீடியோவில் முகமூடி அணிந்தபடி மஸ்க்கின் காரை பின் தொடர்ந்த நபர் உபர் ஈட்ஸ் இல் பணிபுரிகிறார் என்பது அவர் பெயர் கொலாடோ என்பதும் தெரிய வந்திருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட்டில் இதுகுறித்து வெளியான தகவலை பார்க்கையில், கொலாடோ உபர் ஈட்ஸ் தளத்தில் பணி புரிகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Finally Elon Musk found his stalker! Do you know who he is? How he do this?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X