வயிற்றில் பாலை வார்த்த Twitter.. இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்.. நீண்ட கால காத்திருப்பு!

|

சமூகவலைதளங்களில் பிரதான ஒன்றாக இருக்கும் Twitter நிறுவனம், பயனர்களின் தேவையறிந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் பயனர்கள் அதிருப்தி நிலையில் தொய்வுடனே இருந்தனர். இது எல்லாம் சரி, நாங்க கேட்ட அந்த அம்சம் எங்கே என பயனர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அந்த அம்சத்தை இறுதியாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tweet Edit Button ஆப்ஷன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tweet Edit Button ஆப்ஷன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் முதல் அடிமட்ட உறுப்பினர்கள் வரை ஒவ்வொருவரும் ட்விட்டரில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் "Tweet Edit Button" ஆகும்.

தற்போது நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை நிபந்தனைகளுடன் அறிவித்திருக்கிறது.

ட்வீட் எடிட் பட்டன் யாருக்கெல்லாம் கிடைக்கும், அது என்ன நிபந்தனை என்று பார்க்கலாம்.

30 நிமிட அவகாசம்

30 நிமிட அவகாசம்

ட்வீட் எடிட் பட்டன் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு வரும் வாரங்களிலேயே கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்விட்டரின் எடிட் பட்டன் 30 நிமிட காலத்திற்குள் ட்வீட்களை எடிட் செய்ய பயனர்களை அனுமதிக்கும் எனவும் ட்வீட்டில் உள்ள பிழையை திருத்தவோ அல்லது விடுபட்ட ஹேஷ்டேக்குகளை இணைக்கவோ எடிட் பட்டன் உதவும் என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.

அரை மணி நேரத்திற்குள் எடிட் செய்யலாம்

ட்வீட் எடிட் பட்டன் வரும் வாரங்களில் தேர்ந்தெடுத்த ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு மட்டும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த அம்சமானது பயனர்கள் ட்வீட்களை பதிவிட்ட பிறகும் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அதை எடிட் செய்ய அனுமதிக்கும்.

இதன்மூலம் பயனர்கள் ட்வீட்களை எடிட் செய்யவும், தேவையான ஹேஷ்டேக்களை இணைக்கவும் முடியும்.

திருத்தப்பட்ட ட்வீட்களின் கீழ் அது எடிட் செய்யப்பட்டதாக காட்டப்படும். இதை கிளிக் செய்தால் பயனர்கள் அசல் ட்வீட்டையும், அடுத்தடுத்த மாற்றங்களையும் பார்க்கலாம்.

ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டும்

ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டும்

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரின் அறிக்கைப்படி, எடிட் பட்டன் தற்போது உள்நாட்டில் சோதிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து வரும் வாரங்களில் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும். இந்த அம்சம் பிற பிராந்தியங்களில் அறிமுகம் செய்வதற்கு முன்பு சொந்த நாட்டில் சோதனை செய்யப்பட இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் ப்ளூ பயன்பாடு என்றால் என்ன?

ட்விட்டர் ப்ளூ பயன்பாடு என்றால் என்ன?

ட்விட்டர் ப்ளூ பயன்பாடு என்றால் என்னவென்று கேள்வி வரலாம், ட்விட்டர் ப்ளூ என்பது நிறுவனத்தின் ப்ரீமியம் சந்தா சேவையாகும். ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு நிறுவனம் கூடுதல் செயல்பாடு மற்றும் வரவிருக்கும் அம்சங்களுக்கான அணுகலை வழங்குகிறது.

எழுத்துப் பிழை அல்லது ஹேஷ்டேக்குகளை சரி செய்யலாம்

எழுத்துப் பிழை அல்லது ஹேஷ்டேக்குகளை சரி செய்யலாம்

முன்னதாகவே குறிப்பிட்டபடி, எடிட் பட்டன் ஆனது பயனர்கள் தங்களது ட்வீட்களை 30 நிமிடத்திற்குள் திருத்தம் செய்ய அனுமதிக்கும். எடிட் ஆப்ஷன் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த காலக்கெடுவுக்குள் பயனர்கள் எழுத்துப் பிழைகளை விரைவாக சரி செய்து கொள்ளலாம் அல்லது விடுபட்ட ஹேஷ்டேக்குகளை இணைத்துக் கொள்ளலாம்.

முழு தகவலையும் அறிந்து கொள்ளலாம்

முழு தகவலையும் அறிந்து கொள்ளலாம்

ட்விட்டர் வெளியிட்ட தகவலின்படி, ட்வீட்கள் திருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் Last Edit என்ற முத்திரை ட்வீட் கீழே காட்டப்படும்.

இதை கிளிக் செய்யும் பட்சத்தில் திருத்தப்பட்ட ட்வீட்கள், நேரம் உள்ளிட்டவைகள் தெளிவாகக் காட்டப்படும்.

பயனர் Last Edit விருப்பத்தை கிளிக் செய்யும் பட்சத்தில், ட்வீட் Edit History தகவலும் விரிவாகக் காட்டப்படும்.

இதன்மூலம் முன்னதாக செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்பது குறித்த தகவலை அறிந்துக் கொள்ளலாம். ஆனால் பதிவிட்ட 30 நிமிடத்திற்குள் எடிட் செய்ய வேண்டியிருக்கும் என நிபந்தனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தயக்கம் காட்டிய  ட்விட்டர்

தயக்கம் காட்டிய ட்விட்டர்

ட்விட்டர் பயனர்கள் பல ஆண்டுகளாக ட்வீட்களை திருத்தும் ஆப்ஷன் குறித்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் எடிட் ஆப்ஷன் வேண்டுமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பையும் நடத்தியது.

இந்த அம்சம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள காரணத்தால் ட்விட்டர் இதை அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில், தற்போது ட்விட்டர் சிறிய எண்ணிக்கையிலான பயனர்கள் மூலம் இந்த அம்சத்தை சோதனை செய்ய தொடங்குகிறது.

சோதனையின் முடிவு மிக அவசியம்

சோதனையின் முடிவு மிக அவசியம்

இந்த சோதனையின் மூலம் பயனர்கள் எந்த நோக்கத்துடன் எடிட் ஆப்ஷனை பயன்படுத்துகிறார்கள். மக்களுக்கு ட்வீட்களை படிக்கும் நம்பகத்தன்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நிறுவனம் அறிந்துக் கொள்ள இருக்கிறது. இந்த சோதனையின் முடிவை வைத்தே நிறுவனம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடரும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் எடிட் ஆப்ஷன் எப்போது?

இந்தியாவில் எடிட் ஆப்ஷன் எப்போது?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே Twitter Blue கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்திய பயனர்கள் எடிட் பட்டனை அணுகுவதற்கு சிறது காலம் காத்திருக்க வேண்டும். காரணம் ட்விட்டர் இன்னும் இந்தியாவில் Twitter Blue என்ற சந்தா சேவையை தொடங்கவில்லை.

Best Mobiles in India

English summary
Finally Announced: Twitter Edit Button Will Launch For Twitter Blue Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X