Home
News

மார்ச் 31 கடைசி சான்ஸ்.. பான் கார்டுக்கு புது ரூல்ஸ்.. உடனே இந்த வேலையை முடிங்க.. ஏன்?

இந்திய மக்களுக்கு ஒரு மிகப் பெரிய மாற்றம் வரப்போகிறது. அதாவது வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பான் கார்டுக்கு (PAN Card) விண்ணப்பிக்கும்போதும் ஆதார் கார்டு (Aadhaar) மட்டுமே போதுமானதாக இருக்காது. அதாவது இனிமேல் பிறந்த தேதிக்கான சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பான் கார்டில் உள்ள பெயர், ஆதார் கார்டில் உள்ள பெயருடன் சரியாகப் பொருந்த வேண்டும். மேலும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டு வாங்குவதுதான் கடைசி வாய்ப்பு. இல்லையென்றால் நீங்கள் புதிய படிவத்தை நிரப்பி, கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31 கடைசி சான்ஸ்.. பான் கார்டுக்கு புது ரூல்ஸ்..

பான் கார்டு விண்ணப்பத்திற்குத் தேவைப்படும் ஆவணங்கள்:
அதாவது பான் கார்டுக்கு விண்ணப்பத்திற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும்? ஏப்ரல் 1 முதல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது பிறந்த தேதி சான்றாக எந்தெந்த ஆவணங்களைக் கொடுக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

பிறப்பு சான்றிதழ்,

10-ம் வகுப்பு சான்றிதழ்,

ஓட்டுநர் உரிமம்,

வாக்காளர் அட்டை,

பாஸ்போர்ட்,

மாஜிஸ்திரேட் வழங்கிய பிரமாணப் பத்திரம்,

மற்றும் பிற அரசு ஆவணங்கள்.

குறிப்பாக பான் கார்டில் உள்ள பெயர் இனி ஆதார் கார்டில் உள்ளபடியே இருக்கும். மேலும் பழைய விண்ணப்பப் படிவங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு செல்லாது.

மார்ச் 31-க்கு முன்பு இதை செய்யுங்கள்
வரும் மார்ச் 31 2026-க்குள் பான் கார்டுக்கு விண்ணப்பித்து விடுங்கள். இப்போது ஆதார் கார்டை மட்டுமே பயன்படுத்த முடியும். வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு விண்ணப்பித்தால் பிறந்த தேதி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரும் ஏப்ரல் மாதம் பான் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு சில முக்கிய விதிகள் அமலுக்கு வருகிறது. அது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

புதிய விதிகள்

புதிய விதிகளின்படி, வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் பணம் டெபாசிட் செய்யும்போது அல்லது எடுக்கும்போது பான் எண்ணை மேற்கொள் காட்டுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக ரூ.50,000-க்கு மேல் பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயமாக இருந்தது. இப்போது, ​​ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரையிலான ரொக்க பரிவர்த்தனைகளுக்கு பான் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ரூ.10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள் அல்லது ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது.

ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவைப்படும். முன்பு இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது.

மார்ச் 31 கடைசி சான்ஸ்.. பான் கார்டுக்கு புது ரூல்ஸ்..

ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் ஆகும். இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு காப்பீட்டுக் கொள்கையையும் வாங்குவதற்கு இனி PAN அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பெரிய தொகை பாலிசிகளுக்கு மட்டுமே PAN தேவைப்பட்டது. இனி அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இது கட்டாயமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Final days to get your PAN card: simple Aadhaar application closes March 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X