Apple-இன் சினிமா கேமரா.. இனி ஃபிலிம் மேக்கிங் ஈஸி.. ஃபைனல் கட் கேமரா 2.0 அறிமுகம்.. iPhone 17 Pro சீரிஸ் மாஸ்!
ஆப்பிள் (Apple) நிறுவனமானது, ப்ரொபஷனல் லெவல் ஃபிலிம் மேக்கிங் அவுட்புட் கொடுக்கும்படியான பீச்சர்களுடன் ஃபைனல் கட் கேமரா 2.0 (Final Cut Camera 2.0) ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மாடல்களின் கேமரா பீச்சர்களுக்கு ஏற்ப மொபைல் ஃபிலிம் மேக்கிங் கான்செப்ட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது. இந்த ஃபைனல் கட் கேமரா 2.0 குறித்த முழு விவரங்கள் இதோ.
நீங்கள் ப்ரொபஷனல் ஃபிலிம் மேக்கர்களாக இருந்தாலும் சரி, கன்டென்ட் கிரியேட்டர்களாக இருந்தாலும் சரி, ஜர்னலிஸ்ட்டாக இருந்தாலும் சரி இந்த ஃபைனல் கட் கேமரா 2.0 ஆப் மிரள வைத்துவிடும். இதுவரையில் இல்லாதபடி சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் லெவலில் அப்கிரேட் செய்யப்பட்ட கேமரா சிஸ்டம் ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

இதை பார்த்த ஆப்பிள் பிரியர்கள், இந்த மாடல்களை வைத்து ஒரு திரைப்படத்தையே எடுக்கலாம் என்று சொல்ல தொடங்கிவிட்டனர். இதை மேலும் அழுத்தி செல்லும்படி ஃபைனல் கட் கேமரா 2.0 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மூலம் சினிமாடிக் தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய உங்களுக்கு வழிவகை செய்கிறது.
ஐபோன் 17 சீரிஸ் கேமரா சிஸ்டம்:
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக 48 எம்பி ஃப்யூஷன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கிறது. போகல் லென்த், டெலிபோட்டோ, ஆப்டிகல் ஜூமிங் என்று ஒட்டுமொத்தமாக அப்கிரேட் செய்துள்ளது. அதேபோல ப்ரன்ட் கேமராவிலும் சென்டர் ஸ்டேஜ் ஷூட்டரை கொடுத்துள்ளது. இந்த பில்ட் வீடியோ ரெக்கார்டிங்குக்கு ஏற்ப இருக்கிறது.
* 48 எம்பி ப்யூஷன் மெயின் கேமரா
* 48 எம்பி ப்யூஷன் அல்ட்ரா வைடு கேமரா
* 48 எம்பி ப்யூஷன் டெலிபோட்டோ கேமரா
* 18 எம்பி சென்டர் ஸ்டேஜ் ப்ரன்ட் கேமரா

ப்யூஷன் மெயின் கேமரா:
24 எம்எம் மற்றும் 48 எம்எம் போகல் லென்த் கொடுக்கிறது. 2ஆவது ஜெனரேஷன் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 12 எம்பி ஆப்டிகல் குவாலிட்டி மற்றும் 2X டெலிபோட்டோ ஷாட் கிடைக்கிறது. போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), ட்ரூடோன் ஃபிளாஸ் (True Tone Flash) உள்ளது
ப்யூஷன் அல்ட்ரா வைடு கேமரா:
13 எம்எம் போகல் லென்த் கொடுக்கிறது. 120 டிகிரியில் பீல்டு வியூ கிடைக்கிறது. ƒ/2.2 அபெர்ச்சர் மற்றும் மேக்ரோ போட்டோகிராபி (Macro Photography) சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, வைடு ஷாட்களுக்கு அவுட்புட் சினிமாடிக் தரத்தில் இருக்கும். அதேபோல வீடியோ ரெக்கார்டிங் கேமரா லெவலுக்கு இருக்கும்.
டெலிபோட்டோ கேமரா:
100/200 எம்எம் போகல் லென்த் கிடைக்கிகது. ஆகவே, 4X ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் மற்றும் 8X ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் பெற்று கொள்ளலாம். இதுபோக. 40X டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. 120fps 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இது எந்த ஆப்பிள் மாடல்களிலும் இல்லாத ரெக்கார்டிங்காகும். டால்பி விஷனும் கிடைக்கிறது.

சென்டர் ஸ்டேஜ் ப்ரன்ட் கேமரா:
வீடியோ ரெக்கார்டிங்கில் வைடர் ரேஞ்ச் கொடுக்க சென்டர் ஸ்டேஜ் (Center Stage) ப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. டூயல் கேப்ச்சர் வீடியோ, அல்ட்ரா-ஸ்டெபிலைஸ்டு வீடியோ போன்ற அவுட்புட்களை கொடுக்க இந்த சென்டர் ஸ்டேஜ் ப்ரன்ட் கேமரா வருகிறது. ரோட்டேட், சென்சார் ஜூமிங் இதிலும் கிடைக்கிறது.
ஃபைனல் கட் கேமரா 2.0:
இந்த ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மூலம் ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோக்கள் போஸ்ட் புரொடெக்சனின் போது, பிரீமியம் குவாலிட்டி கொடுக்கப்பதற்காக ஃபைனல் கட் கேமரா 2.0 களமிறக்கப்பட்டுள்ளது. ப்ரோரெஸ் ராவ் (ProRes RAW), ஓப்பன் கேட் ரெக்கார்டிங் (Open Gate Recording), டிசிஐ 4K (DCI 4K) உள்ளிட்டவை இருக்கின்றன.
* ப்ரோரெஸ் ராவ் (ProRes RAW)
* ஆப்பிள் லாக் 2 (Apple Log 2)
* டைம்கோட் (Timecode)
* ஜென்லாக் (Genlock)
ப்ரோரெஸ் ராவ்: ஹை-ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. ஃபிலிம்மேக்கிங்கில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ராவ் பூட்டேஜை கொடுக்கிறது. இதற்காக பிரத்யேக மீடியா என்ஜின் (Media Engine) கிடைக்கிறது. இதில் எக்ஸ்போசர் அட்ஜட்ஸ்மெண்ட், கலர் டெம்ப்ரேச்சர், டீமோசைஸ்சிங் போன்றவற்றை எளிதாக செய்து கொள்ளலாம்.
ஆப்பிள் லாக் 2: ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராக்களில் ப்ரொரெஸ் அல்லது எச்இவிசி (HEVC) ஆகியவற்றில் ரெக்கார்ட் செய்யும்போது வைடர் கலர் காமட் கொடுக்க இது கிடைக்கிறது. இதுபோல மல்டி கேம் போன்ற பல்வேறு பீச்சர்களை ஃபைனல் கட் கேமரா 2.0 கொடுக்கிறது.

டைம்கோட்: ஃபிலிம் மேக்கிங்கின் போது, வழக்கமாக பயன்படுத்தப்படும் தேதி, நேரம் மற்றும் ரெக்கார்ட் ரன் அல்லது எக்ஸ்டர்னல் டைம்கோட் போன்றவற்றை எளிதாக ஃபூட்டேஜில் மார்க் செய்யவதற்காக இந்த பீச்சரை ஃபைனல் கட் கேமரா 2.0 ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இது போஸ்ட்புரொடெக்சனின் போது மிகுந்த உதவியாக இருக்கும்.
ஜென்லாக்: புதிய பிளாக் மேஜிக் கேமரா ப்ரோடாக் (Blackmagic Camera ProDock) மற்றும் சூப்பர்-பிரிசைஸ் வீடியோ சின்க்ரோனைசேஷன் (Super-precise Video Synchronisation) கிடைக்கிறது. ஹாலிவுட்டில் இதுபோன்ற வீடியோ ரெக்கார்டிங் புரொடெக்சன் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த மாத இறுதியில் இந்த ஆப் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








