யூடியூப்-ல் அதிகம் சம்பாதிக்க நினைந்து இந்த காரியத்தை செய்தவருக்கு கிடைத்தது சிறை தண்டனை.!.!
குறிப்பாக கங்குவா ரென்னுககு சொந்தமான சமூக வலைதளங்களை அடுத்த 5 ஆண்டுகள் முடக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் பொதுவாக அனைவரும் விரும்பு தளமாக இருக்கிறது, இதன் மூலம் அதிக மக்கள் வருமானம் பெருகின்றனர் என்று தான் கூறவேண்டும். அதன்படி யூடியூப்-ல் அதிமாக சம்பாதிக்க நினைந்து தேவையில்லாத காரியத்தை செய்து கைது
செய்யப்பட்டுள்ளார், சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
News Source- BBC

கங்குவா ரென்
ஸ்பெயினை சேர்ந்த கங்குவா ரென் என்ற இளைஞர் (21) பிராங்க் ஷோ செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஆதரவற்ற ஒருவரிடம் கங்குவா செய்த
பிராங்க் ஷோ கடுமையான கண்டனத்துக்கு ஆளானது.

க்ரீம் பிஸ்கட்டுகளை கொடுத்துள்ளார்
குறிப்பாக சூப்பர் மார்க்கெட் அருகே அமர்ந்திருந்த ஆதரறவற்ற ஒருவரிடம் கங்குவா க்ரீம் பிஸ்கட்டுகளை கொடுத்துள்ளார், ஆனால் க்ரீமுக்க பதிலாக அதில் பல் துலக்கப் பயன்படும் பற்பசையை தடவி கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட அந்த ஆதரவற்ற நபர் வந்தஎடுத்து உடல் நிலைபாதிக்கப்பட்டார்.

கண்டன குரல்களை பதிவு செய்தனர்
இதனை வீடியோவாக கங்குவா ரென் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார், பின்பு இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, கங்குவாவின் மனிதாபிமனமற்ற செயலுக்கு பலரும் கண்டன குரல்களை பதிவு செய்தனர்.

15மாத சிறைத்தண்டனை
பின்னர் கங்குவா மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது,தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்சமயம் கங்குவா ரென்னுக்கு 20ஆயிரம்யூரோக்கள் அபராதமும், 15மாத சிறைத்தண்டனையும் வதித்து பார்சிலோனோ நீதிமன்றம் தற்போது உத்திரவிட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகள்
குறிப்பாக கங்குவா ரென்னுககு சொந்தமான சமூக வலைதளங்களை அடுத்த 5 ஆண்டுகள் முடக்கவேண்டும் என்று
நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications