ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய போகிறீர்களா? அப்ப இதை கண்டிப்பாக படியுங்கள்.!

வருமான வரித்துறையின் இணையதளம் கடந்த ஒரு ஆண்டில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

|

வருமான வரித்துறையின் இணையதளம் கடந்த ஒரு ஆண்டில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பு இருக்கலாம். இந்த மாற்றங்களை வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்த மாற்றங்களை தெரிந்து கொண்டால்தான் இணையதளம் மூலம் கணக்கு தாக்கல் செய்பவர்கள் எந்தவித தவறும் இன்றி தாக்கல் செய்ய முடியும்.

எனவே இந்த மாற்றங்களை தெரிந்து கொண்டு காலதாமதம் இன்றி வருமான வரி தாக்கல் செய்து அபாரத்தொகையை தவிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த வருமான வரி இணையதளத்தில் உள்ள ஆறு முக்கிய மாற்றங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

1. வருமான வரி தாக்கல் செய்யும்போது இனிமேல் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன்னர் நீங்கள் வருமான வரி இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும் என்றால் கூட பிறந்த தேதி அவசியமாக இருந்தது. ஆனால் இனிமேல் அதுதேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. பாஸ்வேர்டு இல்லாமல் ஐடிஆர் டாக்குமெண்ட்டுகளை பார்க்கலாம்:

2. பாஸ்வேர்டு இல்லாமல் ஐடிஆர் டாக்குமெண்ட்டுகளை பார்க்கலாம்:

வருமான தாக்கல் செய்யும் ஒருசில விண்ணப்பங்கள் குறிப்பாக 26ஏஎஸ் மற்றும் ஐடிஆர்-வி ஆகிய விண்ணப்பங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த விண்ணப்பங்கள் பாஸ்வேர்டு வைத்து பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இதற்கு பாஸ்வேர்டு தேவையில்லை என்று டேக்ஸ்டுவின் என்ற இணையதளத்தின் சி.இ.ஓ அபிஷேக் சோனி என்பவர் தெரிவித்துள்ளார்

3. 26ஏஎஸ் விண்ணப்பம் டவுன்லோடு செய்வதிலும் மாற்றம்:

3. 26ஏஎஸ் விண்ணப்பம் டவுன்லோடு செய்வதிலும் மாற்றம்:

26ஏஎஸ் விண்ணப்பம் டவுண்லோடு செய்வதிலும் ஒருசில மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நீங்கள் இந்த 26ஏஎஸ் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யும்போது இந்த விண்ணப்பம் பிடிஎஃப் வடிவத்தில் அல்லது எச்.டி.எம்.எல் வடிவத்தில் வேண்டுமா? என்று கேட்கும். பிடிஎஃப் வடிவத்தில் மிக எளிதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் இந்த ஆண்டு முதல் முதலில் நீங்கள் எச்.டி.எம்.எல் வடிவத்தில் வியூ செய்துவிட்டு அதன் பின்னர் பிடிஎஃப் வடிவத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

4. வெரிபிகேஷன் ஆப்சன் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது:

4. வெரிபிகேஷன் ஆப்சன் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது:

இந்த ஆண்டு முதல் புதியதாக வெரிபிகேஷன் ஆப்சன் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதற்கு முன்னர் வருமான வரி தாக்கல் செய்யும்போது வெரிபிகேஷன் ஆப்சன் இல்லை. ஆனால் இந்த முறை வெரிபிகேஷன் ஆப்சன் புதியதாக உள்ளது. இதன்மூலம் நீங்கள் தாக்கல் செய்யப்பட்ட கணக்கில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இந்த ஆப்சனை பயன்படுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அபிஷேக் கூறியுள்ளார். ஆப்லைன் முறையின் மூலம் நீங்கள் ஏற்கனவே உங்கள் கணக்கை தாக்கல் செய்துவிட்டாலும், இன்னொரு முறையான எலக்ட்ரானிக் முறையின் மூலம் ஆதார் அட்டையை பயன்படுத்தி அதில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அப்போது உங்களுக்கு இந்த வெரிபிகேஷன் ஆப்சன் தேவைப்படும். இதற்கு முன்னர் இந்த வெரிபிகேஷன் முறை இல்லாத நிலையில் தற்போது இந்த வசதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் ஐடிஆர், ஓடிபி அவர்களுடைய இமெயில் அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டு வெரிபை செய்யப்படும். இந்த வசதி இதற்கு முன்னர் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு அவர்களுடைய மொபைல் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கப்பட்டவர்களுக்கு இருந்தது.

5. ஐடிஆர் ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட விவரங்களைத் தேர்வு செய்து கொள்வது:

5. ஐடிஆர் ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட விவரங்களைத் தேர்வு செய்து கொள்வது:

2017-18ஆம் ஆண்டுகான வருமான வரி தாக்கல் செய்பவராக நீங்கள் இருந்தால் நீங்கள் 'பிரிப்பேர் மற்றும் சப்மிட் ஆன்லைன்' என்ற ஆப்சன் மூலம் தாக்கல் செய்யலாம். ஒருசில விபரங்கள் முன்கூட்டியே தானாக ஃபில் செய்யும் வகையில் புதிய ஆப்சன் தற்போது உள்ளது. கடந்த ஆண்டு நீங்கள் தாக்கல் செய்ததில் இருந்து ஒருசில முக்கிய விபரங்கள் தானாக எடுத்து கொள்ளப்படும். நீங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஆட்டோ பாப்புலேட் என்ற ஆப்சனை கிளிக் செய்துவிட்டால் உங்களுடைய அடிப்படை விபரங்களை நீங்கள் மறுபடியும் பதிவு செய்ய தேவையில்லை. அதுவாகவே பூர்த்தி செய்துவிடும். அதாவது உங்களின் பணி, வங்கி விபரங்கள், சம்பளம் ஆகியவை தானாகவே ஃபில் ஆகிவிடும்

6. 26ஏஎஸ் விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது டிடிஎஸ்-ஐ சரிபார்த்து கொள்ளுங்கள்:

6. 26ஏஎஸ் விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது டிடிஎஸ்-ஐ சரிபார்த்து கொள்ளுங்கள்:

தானாகவே சில விபரங்கள் பூர்த்தி செய்து கொள்ளும் புதிய ஆப்சனின் ஒரு முக்கிய நன்மை என்னவெனில் நம்முடைய பெயர், முகவரி, பான் எண் மற்றும் வரி விபரங்கள் ஆகியவை தானாகவே அப்டேட் ஆகிவிடும். ஆனால் அதே நேரத்தில் டிடிஎஸ் விபரங்களும் தானாகவே அப்டேட் ஆகிவிடும் என்றாலும் அது சரியாக இருக்க சிலசமயம் வாய்ப்பு இல்லாமல் போகலாம். எனவே தானாவே அப்டேட் செய்யப்படும் டிடிஎஸ் விபரங்கள் சரியாக இல்லை என்றால் உங்களது வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும். எனவே டிடிஎஸ் விபரங்கல் தானாக அப்டேட் ஆகியிருந்தால் அதனை சரிபார்த்து அதில் தவறு இருந்தால் நீங்களே சரி செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Filing ITR online 6 things you must know: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X