Just In
- 58 min ago
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
- 16 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 16 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 16 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
Don't Miss
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Movies
யார் அந்த தொழிலதிபர்.. டிடி 2வது திருமணம் குறித்து ரகசியம் பகிர்ந்த சகோதரி!
- News
அதற்கெல்லாம் அவசியமே இல்லைங்க! எல்லாம் கரெக்டாக நடக்குது! விவசாயிகளிடம் நீர்வளத்துறை திட்டவட்டம்!
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Finance
Budget 2023: பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்.. கவனிக்க வேண்டியது என்ன?
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்...இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
FIFA உலகக் கோப்பை 2022: கத்தாருக்கு ஸ்கெட்ச் போட்ட Vodafone Idea! அறிமுகமான புதிய ரீசார்ஜ் திட்டங்கள்..
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு இருப்பவர்கள் ரசிகர்கள் என்றால் கால்பந்துப் போட்டிக்கு இருப்பவர்கள் வெறியர்கள் என்றே கூறலாம். FIFA உலகக் கோப்பை 2022 கத்தாரில் நடந்து வருகிறது. கால்பந்து போட்டி காணுவதற்கு என தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வோடபோன் ஐடியா புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் ஐடியா (VI)
வோடபோன் ஐடியா (VI) கத்தாருக்கு செல்லும் ஃபிஃபா ரசிகர்களுக்கு சிறப்பு IR ரோமிங் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டங்களானது வரம்பற்ற இன்கம்மிங் அழைப்புகள், டேட்டா, எஸ்எம்எஸ் நன்மைகள் என பல நன்மைகளை வழங்குகிறது. FIFA உலகக் கோப்பைக்கான Vi IR பேக்குகளானது ரூ.2,999 முதல் தொடங்குகின்றன.

FIFA உலகக் கோப்பை 2022
வோடபோன் ஐடியா (VI) உலகளாவிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக இருக்கும் வோடபோன் மூலம் ரோமிங் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. FIFA உலகக் கோப்பை 2022க்கான சில பிரத்யேக சர்வதேச ரோமிங் பேக்குகளை VI அறிமுகப்படுத்தியுள்ளது. IR பேக்குகளானது ரூ.2999 முதல் தொடங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டமானது 7 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை செல்லுபடியாகிறது. அதேபோல் இந்த ஐஆர் திட்டங்களானது அதிவேக டேட்டாவை வழங்குகின்றன.

அவுட் கோயிங் டூ இந்தியா
புதிய ஐஆர் ரீசார்ஜ் திட்டங்களானது வரம்பற்ற இன்கமிங் அழைப்பு, அவுட் கோயிங் டூ இந்தியா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலவகை இலவச நன்மைகளை வழங்குகிறது. நேரடியாக போட்டியை காண கத்தாருக்கு செல்லும் ரசிகர்கள், போட்டிகளை நேரலையில் ஸ்ட்ரீம் செய்து சமூகவலைதளங்களில் தங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். FIFA உலகக் கோப்பை 2022 காண கத்தாருக்கு செல்லும் பயனர்களுக்கான திட்டமாக இது இருக்கிறது.

ரூ.2999 முதல் ரீசார்ஜ் திட்டங்கள்
விளையாட்டு மற்றும் விடுமுறைக்காக கத்தாருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்காக Vi வழங்கும் பிரத்யேக IR பேக்குகளின் பட்டியலை விரிவாக பார்க்கலாம். நான்கு ரீசார்ஜ் திட்டங்களை வோடபோன் ஐடியா (VI) அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டங்களானது ரூ.2999 முதல் தொடங்கி ரூ.5999 முதல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Vi ரூ.2999 ஐஆர் திட்டம்
Vi ரூ.2999 ஐஆர் திட்டமானது 7 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த சர்வதேச ரோமிங் திட்டமானது 2 ஜிபி டேட்டாவுடன் 200 நிமிட உள்ளூர் மற்றும் வெளிநாடு அழைப்புகளை வழங்குகிறது. 25 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் பிற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டால் நிமிடத்திற்கு ரூ.35 வசூலிக்கப்படும்.

Vi ரூ.3,999 ஐஆர் திட்டம்
Vi ரூ.3,999 ஐஆர் திட்டமானது 10 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ஐஆர் திட்டமானது 3 ஜிபி டேட்டா மற்றும் 300 நிமிடங்கள் இந்தியாவிற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அழைப்புகளை வழங்குகிறது. 50 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. பிற நாடுகளுக்கு உள் மற்றும் வெளி அழைப்புகளுக்கு ரூ.35 வசூலிக்கப்படும்.

Vi ரூ.4,499 ஐஆர் திட்டம்
Vi ரூ.4,499 ஐஆர் திட்டமானது பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா, இலவசமாக 500 நிமிட உள்ளூர் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை வழங்குகிறது. 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. பிற நாடுகளுக்கான அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.35 வசூலிக்கப்படும். இந்த திட்டங்களானது 14 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Vi ரூ.5,999 ஐஆர் திட்டம்
Vi ரூ.5,999 ஐஆர் திட்டமானது 5ஜிபி டேட்டா, 500 நிமிட உள்ளூர் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை வழங்குகிறது. 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் வழங்கப்படுகிறது. பிற நாடுகளுக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.35 வசூலிக்கப்படும். இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470