இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. Jio-வை கழுவி ஊற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள்! ஏன்?
உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுகளில் முதன்மையானது கால்பந்து. இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நேற்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர்..
குறிப்பாக நடிகர் மோர்கன் ஃப்ரீமேன், பி.டி.எஸ் பாடகர் ஜங் குக், உள்ளிட்டோர் அரங்கேற்றிய கலை நிகழ்ச்சிகளைக் கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனர். அதேபோல் இந்த பிரமாண்டமான தொடக்க விழாவைக் கண்டுகளிக்க இந்திய ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர்.

ஆனால் இந்தியாவில் வழக்கம்போல் விளையாட்டுப் போட்டிகளைக் காண்பிக்கும் ஸ்டார் ஸ்போர்ட், சோனி நெட்வொர்க், டிடி ஸ்போர்ட்ஸ் போன்ற எதிலும் உலகக் கோப்பை போட்டி ஒளிபரப்பு ஆகவில்லை. அதாவது ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஒளிபரப்பானது.

ஜியோ சினிமா
மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம்,போன்ற எந்த முன்னணி ஓடிடி தளத்திலும் ஃபிஃபா உலகக் கோப்பை நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக ஜியோ சினிமா தளத்தில் தான் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சரியாக இயங்கவில்லை
ஆனால் தொடக்க விழா நிகழ்ச்சியை ஜியோ சினிமாவில் காண இருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது இதற்குக் காரணம் என்னவென்றால் ஜியோ சினிமா சரியாக இயங்கவில்லை.

டிரெண்ட் ஆனது..
குறிப்பாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஜியோ சினிமா மிகவும் ஸ்லோவாக இயங்கியது. இதனால் அந்த நிகழ்ச்சியைச் சரியாக பார்க்க முடியவில்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜியோ சினிமா ஸ்லோவாக இயங்கியது மூலம் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

இதைதொடர்ந்து அந்த செயலியை அப்டேட் செய்து கொள்ளும்படி ஜியோ சினிமா ட்விட் செய்தது. ஆனால் அப்டேட் செய்தபிறகும் கூட பழைய படி ஆப் மெதுவாக இருந்ததாகப் பயனர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றிக்கொண்டே தான் இருந்தது
அதேபோல் தொடக்க விழா மட்டுமின்றி கத்தார்-ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டமும் சுற்றிக்கொண்டே தான் இருந்தது. குறிப்பாக உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு போட்டியைத் தங்கு தடையின்றி பார்க்க முடியாதபடி ஜியோ சினிமா செய்துவிட்டதாக பல்வேறு மக்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதாவது சிலர் ஜியோ சினிமா தளத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும், இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். என்றும் பல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சமீபத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்ட தகவல் என்னவென்றால், 4ஜி பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் சராசரி வேகத்திலுமே கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதாவது கடந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் விநாடிக்குச் சராசரியாக 20.3 எம்பிபிஎஸ் என்ற வேகத்தைப் பதிவு செய்தது. இதன் மூலம் பதிவிறக்க வேகத்தில் தனது முன்னிலையை ஜியோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அதேசமயம் பதிவிறக்க வேகத்தில் 15எம்பிபிஎஸ் வேகத்துடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 4.5எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications