பிபா 2018 உலக கோப்பை: டெலிகாம் நிறுவனங்களின் சிறந்த ஆஃபர்கள்.!
பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது, இதில் போட்டிகளை ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவியில் இலவசமாக பார்க்க முடியும்.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தெரவித்தது என்னவென்றால், பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ஏர்டெல் டிவி சேவையானது பல்வேறு உள்ளூர் மொழிகளில் பயனாளர்களுக்கு கிடைக்கக்கூடிய ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஒளிபரப்பு செய்யும் எனத்
தெரிவித்துள்ளது.

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த சேவை அப்டேட் செய்ப்பட்ட ஏர்டெல் டிவியில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் ஏர்டெல் சேவை கிடைக்கும். மேலும் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஜியோ
ரஷ்யாவில் நடைபெற இருக்கும் பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ஜியோடிவி பயன்பாட்டில் ஒளிபரப்பு செய்வதாக அறிவித்துள்ளார் அம்பானி, மேலும் ஜியோ நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூன்
பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது, இதில் போட்டிகளை ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவியில் இலவசமாக பார்க்க முடியும். குறிப்பாக சிறந்த இணைய வேகத்தை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.

வோடபோன்
இதற்கிடையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் அதன் பயனர்களுக்கு ஐபாட் மினி ஒன்றை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மை வோடபோன் ஆப் பயன்பாட்டில் பரிவர்த்தனை செய்வதன் மூலம் பயனர்கள் ஐபாட்
வெல்ல முடியும். மை வோடபோன் செயலியில் Recharge and/or Pay Bills மூலம் குறிப்பிட்ட புள்ளிகளை பெற்று ஐபாட் பெற முடியும்.

பிஎஸ்என்எல் :
2018 ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான ரூ.149/- என்கிற விளம்பர திட்டத்தை, பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் நன்மைகள் என்ன.? இது எப்படி ஜியோவுடன் போட்டியிடுகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம். நிகழப்போகும் புதிய பிபா உலகக் கோப்பை ஸ்பெஷல் டேட்டா பேக் ஆன ரூ.149/- ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான தரவு நன்மையை வழங்கும். இந்த திட்டமானது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.


Click it and Unblock the Notifications