சும்மாவே கம்மி விலைதான்., இப்போ சலுகை வேற- ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகையோடு டெக்னோ ஸ்பார்க் கோ 2021!

|

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டெக்னோ அதன் ஸ்பார்க் சீரிஸ் தொடரில் ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனை அற்புதமான ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகை

ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகை

ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சலுகையின் ஒரு பகுதியாக, நுகர்வோர் அதிவேக டேட்டா இணைப்பை அனுபவிக்க முடியும். இந்த சலுகையானது புதிய மற்றும் தற்போதைய ஜியோ சந்தாதாரர்கள் இருவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ எக்ஸ் க்ளூசிவ் சலுகையாக ஜியோ பயனர்கள் ரூ.584 ஆதரவை உடனடியாக அனுபவிக்க முடியும்.

டெக்னோ ஸ்பார்க் உடன் ஜியோ சலுகை

டெக்னோ ஸ்பார்க் உடன் ஜியோ சலுகை

கூடுதலாக MakeMyTrip, Oyo, Pharmeasy, myntra ஆகிய பயனர்களுக்கு ரூ.4000 கூப்பன் நன்மைகள் கிடைக்கும். ரூ.249-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இந்திய தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜித் தளபத்ரா இதுகுறித்து கூறுகையில், இந்தியா முழுவதும் தங்கள் 11 மில்லியன்+ வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய, டெக்னோ இந்தாண்டு பண்டிகை காலத்திற்கு சில அற்புதமான ஜியோ எக்ஸ் க்ளூசிவ் சலுகைகளை வழங்க தயாராகி வருகிறது.

மிகச் சிறந்த செயல்திறன் கேமரா

மிகச் சிறந்த செயல்திறன் கேமரா

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான உண்மையான மதிப்பை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை நிலைநாட்டும் வகையில், டெக்னோ ஸ்பார்க் கோ 2021 புதிய பயனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த செயல்திறன் கேமரா, பெரிய பேட்டரி மற்றும் குறைந்த விலை அணுகலோடு வருகிறது.

6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், டெக்னோவின் ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் (720 × 1,600 பிக்சல்கள்) டாட் நாட்ச் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. 20:9 விகித உச்ச பிரகாசத்தோடு இந்த சாதனம் வருகிறது. மேலும் 480 நிட்ஸ் பிரகாசத்தோடு வருகிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

13 மெகாபிக்சல் இரட்டை கேமரா

13 மெகாபிக்சல் இரட்டை கேமரா

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன் மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா அமைப்போடு வருகிறது. முதன்மை சென்சார் f/1.8 துளை உடன் வருகிறது. இரண்டாவது சென்சார் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2021-ன் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி4.2 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. மேலும் இது மெலிதான பெசல்களுடன் வருகிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ப்ளூ, ஹரிஜான் ஆரஞ்ச் மற்றும் மால்தீவ்ஸ் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

ஒற்றை ரேம் மற்றும் உள்சேமிப்பு வசதி

ஒற்றை ரேம் மற்றும் உள்சேமிப்பு வசதி

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 சாதனமானது நுழைவு நிலை ஸ்மார்ட்போன் பிரிவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஒற்றை ரேம் மற்றும் உள்சேமிப்பு வசதியோடு வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பு ஆதரவோடு இயங்குகிறது. மேலும் இது மெலிதான பெசல்களுடன் வருகிறது. இது பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கத்தில் செல்பி கேமரா அமைப்பு இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Festive Season Offers: You Can Buy Tecno Spark GO 2021 Smartphone With Jio Exclusive Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X