2018 இல் நிறைய பேரை பேஸ்புக்குல இணைச்ச காரியங்கள்!

பாதுகாப்பு அறியும் கருவி, லைவ், பேக் உருவாக்கம், நிதியுதவி பெறுதல் போன்ற அம்சங்கள் மூலம் தங்களுக்கு அன்பானவர்களின் தொடர்பை பெறவும், அவரிடம் உதவியை பெற மற்றும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்தது

|

இந்தாண்டு (2018) இல் பேஸ்புக் மூலம் பெரும்பாலான பயனர்களை இணைய வைப்பதில் அடிப்படையாக பண்டிகைகள், கேரளா வெள்ளம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை அமைந்துள்ளன என்று சமூக வளையதள நிறுவனமான பேஸ்புக் தெரிவித்துள்ளது.

2018 இல் நிறைய பேரை பேஸ்புக்குல இணைச்ச காரியங்கள்!

இந்த நிறுவனத்தின் 2018 ஆண்டிற்கான மதிப்பீட்டு அறிக்கையில், இந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டாடப்பட்ட பண்டிகைகளான ஜென்மாஷ்டமி, மிலாடி நபி, பொங்கல் மற்றும் நவ ராத்திரி ஆகிய நேரங்களில், அதிக சம்பாஷணைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா

கேரளா

அதே போல கேரளாவில் தாக்கிய வெள்ளத்தில் ஏற்பட்ட அழிவிற்கு, தங்களால் முடிந்த உதவிகளை அளிக்க பலரும் சமூக வளைய தளமான பேஸ்புக்கை பெரும்பாலானோர் பயன்படுத்த, எல்லோரையும் ஒருமுகப்படுத்தியது.

பாதுகாப்பு அறியும் கருவி, லைவ், பேக் உருவாக்கம், நிதியுதவி பெறுதல் போன்ற அம்சங்கள் மூலம் தங்களுக்கு அன்பானவர்களின் தொடர்பை பெறவும், அவரிடம் உதவியை பெற மற்றும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்தது.


மற்றொருபுறம் வழக்கம் போல இந்திய விளையாட்டு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து இழப்பதில் கிரிக்கெட் தொடர்ந்து நிலைநிற்க, பேஸ்புக் உதவியது. இந்த தளத்தில் பிரபலமாக இருந்த காரியங்களில் இதுவும் ஒன்று.

ஃபிபா கால்பந்து உலக கோப்பை 2018

ஃபிபா கால்பந்து உலக கோப்பை 2018

பேஸ்புக் மேலும் கூறுகையில், ஃபிபா கால்பந்து உலக கோப்பை 2018 நடந்த போது, தங்களுக்கு விருப்பமான அணிகளை ஆதரிப்பதில் லட்சக்கணக்கான இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களை பேஸ்புக் இணைத்தது.

அடல் பிஹாரி வாஜ்பாயின் இறப்பு

அடல் பிஹாரி வாஜ்பாயின் இறப்பு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் இறப்பு, அவரது தலைமை எந்த மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவுப்படுத்தவும், பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து கொள்ளவும் பேஸ்புக் உதவியது.

சர்வதேச அளவில் சர்வதேச பெண்கள் நாள், மார்ச் ஃபார் அவர் லிவ்ஸ் மற்றும் ராயல் வெட்டிங் போன்ற தலைப்புகள் அதிக அளவில் விவாதிக்கப்பட்டவையாக 2018 ஆம் ஆண்டு இருந்தன.

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக் ஆராய்ச்சி நிர்வாகி ஷிய்டா நிமான் கூறுகையில், "தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சர்வதேச பெண்கள் தினம், இந்த ஆண்டு அதிக பேசப்பட்டதில் முதலிடத்தை பெற்றது. ஆனால் 2018 ஆம் ஆண்டு, IWD கருத்து பரிமாற்றம் என்பது ஒரு நாளுக்கு அதிகமாகவே இருந்தது" என்றார்.

 இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி

அதிகமாக கலந்து கொண்ட சம்பவமாக, கடந்த மே 18 ஆம் தேதி நடைபெற்ற இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிள் திருமணம் இருந்தது. அதன்மூலம் 42 மில்லியன் மக்கள் பேஸ்புக் வழியாக இணைந்து, புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்கள்.

ஜூலை 18

ஜூலை 18

ஜூலை 18 ஆம் தேதி கருப்பின பிரச்சனையை நீக்க பாடுபட்ட நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்தநாள் என்பதால், பேஸ்புக் தளத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மனித இனத்திற்காக அவரது அர்ப்பணம் மற்றும் சமுதாய நீதி ஆகியவை குறித்து விவாதம் நடைபெற்றது.

Best Mobiles in India

English summary
Festivals, Kerala floods connected most Indians on Facebook in 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X