ஐபோன் புதுசு தான், ஆனா சமாச்சாரம் பழசு.!!

Written By:

ஆப்பிள் நிறுவனம் நம்ம ஊர் நடிகர்களை போல உலகம் முழுக்க கோடி கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கின்றது. அதிக பிரபலம் என்றால் அதிக பிரச்சனை தான். ஆப்பிள் நிறுவனம் என்றால் எதையும் செய்யும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தால் ஆப்பிள் என்றால் குற்றம் சொல்லவும் ஒரு கூட்டம் இருக்க தான் செய்கின்றது.

இத்தகைய சூழ்நிலையில் அந்நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட கருவி தான் ஐபோன் SE. முந்தைய கருவிகளை விட குறைந்த விலையில் தருவதாக அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட கருவி இது என்றும் கூற முடியும். எல்லாம் சுபம் என்றவாரு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஆப்பிள் ஐபோன் SE கருவியின் தயாரிப்பு விலை குறித்த தகவல் இந்தியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தயாரிப்பு விலை சார்ந்த குழப்பம் தீர்வதற்குள் மற்றும் ஓர் குழப்பம் ஐபோன் ப்ரியர்களை சூழ்ந்திருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முடிவு

முடிவு

ஆப்பிள் நிறுவனம் தடாலடி முடிவுகளை மேற்கொண்டு புதிய கருவியை குறைந்த விலையில் வழங்குகின்றது.

அம்சங்கள்

அம்சங்கள்

அதன் படி புதிய ஐபோன் SE கருவியில் முந்தைய ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்ட சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. என்னென்ன அம்சங்கள் எந்தெந்த கருவிகளில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை தொடர்ந்து பாருங்கள்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஐபோன் SE கருவியானது பார்க்க ஐபோன் 5எஸ் போன்றே காட்சியளிக்கின்றது. 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவியின் வடிவமைப்பு புதிய கருவியில் வழங்கப்பட்டுள்ளது.

திரை

திரை

ஐபோன் 5 கருவியில் வழங்கப்பட்ட திரை அளவு, மற்றும் ரெசல்யூஷன் ஐபோன் SE கருவியில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹார்டுவேர் அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்டெனா

ஆன்டெனா

ஐபோன் SE கருவியில் ஐபோன் 6 கருவியில் வழங்கப்பட்ட அதே எல்டிஇ ஆன்டெனா வழங்கப்பட்டுள்ளது.

ப்ரைமரி கேமரா

ப்ரைமரி கேமரா

ஐபோன் 6எஸ் கருவியில் வழங்கப்பட்ட 12 எம்பி ஐசைட் கேமரா தான் ஐபோன் SE கருவியிலும் வழங்கப்பட்டுள்ளது. இவைகளை கொண்டு UHD 4k வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

பிராசஸர்

பிராசஸர்

ஐபோன் 6எஸ் கருவியில் வழங்கப்பட்ட ஏ9 பிராசஸர் கொண்டு தான் ஐபோன் SE சக்தியூட்டப்படுகின்றது. எனினும் இந்த பிராசஸர் செயலி மற்றும் கேம் என பல்வித பயன்பாடுகளையும் எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த வழி செய்யும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

 

English summary
Features iPhone SE borrowed from older iPhones Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot