காப்பியடித்த கில்லி ஆப்பிள் : ஐஓஎஸ் 10 அச்சடிக்கப்பட்ட அம்சங்கள்.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சந்தையில் ஆப்பிள் மற்றும் ஆண்டராய்டு நிறுவனங்களுக்கிடையே இருக்கும் போட்டி உலகம் அறிந்த ஒன்று தான். கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உலகம் முழுக்கப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கிடையே பஞ்சாயத்து இல்லாமல் இல்லை.

அடிக்கடி நடக்கும் பஞ்சாயத்துகளில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வியைச் சந்தித்தாலும் இரு நிறுவனங்களும் கல்லா கட்டத் தவறவில்லை என்பது மட்டும் தான் உண்மை. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐஓஎஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

ஐஓஎஸ் 10 என அழைக்கப்படும் புதிய பதிப்பு வெளியானதில் இருந்து ஐஓஎஸ் 10 குறித்துப் பல்வேறு தகவல்கள் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றது. அவற்றில் சில ஸ்லைடர்களில்..!

01

01

ஐஎஸ் 10 இயங்குதளத்தில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கிய அம்சங்கள் புதிய கோணத்தில் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

02

02

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளத்தில் வழங்கிய இன்டாரக்டிவ் வகை நோட்டிபிகேஷன் அம்சம் ஐஎஸ் 10 பதிப்பில் ஆப்பிள் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

03

03

ஐஓஎஸ் 10 பதிப்பில் ஆப்பிள் நிறுவனம் தனது வரைப்பட சேவையில் சில அம்சங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் வாகன நெரிசல், மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பு போன்றவைளை ஆப்பிள் பயனர்கள் அனுபவிக்க முடியும், இவை ஏற்கனவே கூகுள் மேப்ஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

04

04

ஆப்பிள் போட்டோஸ் செயலியும் புதிய மாற்றத்தை ஆப்பிள் பயனர்களுக்கு வழங்கியுள்ளது. இதுவும் கூகுள் போட்டோஸ் செயலியை போன்று புகைப்படம், வீடியோக்களை செயற்கை நுண்ணறிவு முறையை பயன்படுத்தி பெயர், முகம் மற்றும் இடம் அடிப்படையில் காண்பிக்கின்றது.

05

05

கூகுள் கீப் நோட் செயலியில் வழங்கப்பட்டு வரும் கோலாபரேஷன் அம்சம் ஐஓஎஸ் 10 பதிப்பில் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.

06

06

'Rise to wake up' என்ற அம்சம் பயன்படுத்தி கருவியின் திரையை தொடாமலேயே திரையில் இருக்கும் நோட்டிபிகேஷன்களை பார்க்கும் அம்சம் ஐஓஎஸ் 10 பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

07

07

ஆப்பிள் நிறுவனத்தின் விர்ச்சுவல் உதவியாள் போன்ற சேவையான சிரி மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுக்கும் API மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நௌ சில காலமாக வழங்கி வருகின்றது.

08

08

இது போல் பல்வேறு அம்சங்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் கருவிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியானதுண்டு.

Best Mobiles in India

English summary
Features Apple’s iOS 10 took from Android Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X