FC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்!

|

டிசிஎஸ்ஸின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியான எஃப்சி கோலி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர். ஃபாகிர் சந்த் கோலிக்கு வயது 96. நவம்பர் 26 ஆம் தேதி இவர் காலமானார்.

டிசிஎஸ்ஸை உருவாக்கி வழிநடத்தியவர்

டிசிஎஸ்ஸை உருவாக்கி வழிநடத்தியவர்

எஃப்சி கோலி டிசிஎஸ்ஸை உருவாக்கி வழிநடத்தியவர். தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பகுதிகளில் கோலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது எனவும் எஃப்சி கோலி மிகவும் கருணையுள்ளவர், அனைவருக்கும் உதவக் கூடியவர் என டாடா குழுமத் தலைவரும் தலைவருமான ரத்தன் டாடா கூறினார்.

சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்

சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்

அதேபோல் கோலி சிறந்த தொழில்நுட்ப வல்லுநராக இருந்தவர், பல்வேறு நலன்களை கொண்ட வணிகத் தலைவராக இருந்தவர் எனவும் தேசத்தின் வளர்ச்சியிலும் இளைஞர்கள் மீதும் அதிக அக்கறை காட்டுபவர் என முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் டிசிஎஸ் துணை தலைவருமான எஸ்.ராமடோராய் தெரிவித்தார்.

டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்

டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்

டாடா குழுமத்தின் மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் டிசிஎஸ்ஸை நிறுவியவர் எஃப்சி கோலி. டிசிஎஸ் நிறுவனத்தை உலகளவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உயர்த்தியவர் அவர்.

பல்வேறு நிறுவனங்களின் போர்டு இயக்குநர்

பல்வேறு நிறுவனங்களின் போர்டு இயக்குநர்

டாடா குழுமத்தின் முக்கிய புள்ளியாக இருக்கும் எஃப்சி கோலி, டாடா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா எலெக்ட்ரிக் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களின் போர்டு இயக்குநராக இருந்தவர்.

வயது முதிர்வு காரணமாக காலமானார்

வயது முதிர்வு காரணமாக காலமானார்

1942 ஆம் ஆண்டு பிறந்த எஃப்சி கோலி, ஐடி துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை என்று அழைக்கப்படும் அவர் 96 வயதான நிலையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

Best Mobiles in India

English summary
FC Kohli: Father of IT Industry (India) and TCS First CEO Dies at 96

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X