Home
News

ஃபேக்ஸ் மிஷினில் இருந்து தகவல்களை திருடும் ஹேக்கர்கள்.!

பல நிறுவனங்கள் அதன் ஃபேக்ஸ் மிஷின்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்திருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

By Siva Lingam

ஊசி நுழைய முடியாத இடத்திலும் ஹேக்கர்கள் நுழைந்து விடுவார்கள் என்பது புதுமொழியாக இருந்து வரும் நிலையில் உங்கள் அலுவலகத்தின் ஃபேக்ஸ் மிஷினில் இருந்தும் ஹேக்கர்கள் நுழைந்து விடுவார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஃபேக்ஸ் மிஷினில் இருந்து தகவல்களை திருடும் ஹேக்கர்கள்.!

கடந்த ஞாயிறு அன்று இஸ்ரேல் நாட்டின் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தினர் ஃபேக்ஸ் மிஷினில் இருந்து மில்லியன் கணக்கான பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்துள்ளனர்.

சாப்ட்வேர்

சாப்ட்வேர்

ஒரு போனில் இருந்து ஒரு மேஜ் ஃபைல் அல்லது ஒரு இமேஜ் ஃபைல் ஃபேக்ஸ் மிஷினில் இருந்து அனுப்பும்போது ஒரு கோட் உருவாகிறது. இந்த கோட்-ஐ கண்டுபிடிக்க ஹேக்கர்கள் ஒருசில சாப்ட்வேர்களை கண்டுபிடித்துள்ளனர். ஒரு இமேஜ் பைல் அனுப்பப்படும்போது அதன் கோட், அந்த ஃபேக்ஸ் மினிஷின் பிரிண்டரில் பதிவாகி இருக்கும். ஹேக்கர்கள் ஃபேக்ஸ் மிஷினில் இருந்து அந்த கோட்-ஐ ஹேக் செய்து அதன் பின்னர் அனுப்பப்பட்ட இமேஜ் பைலை வெகு எளிதில் கைப்பற்றிவிடுகின்றனர்.

 யானிவ் பால்மாஸ்

யானிவ் பால்மாஸ்

பல நிறுவனங்கள் அதன் ஃபேக்ஸ் மிஷின்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்திருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஃபேக்ஸ் மிஷினில் அலுவலகத்தின் பல முக்கிய விஷயங்கள் ஒளிந்திருக்கும் என்பதே உண்மை என செக் பாயிண்ட் என்ற செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனேஜர் யானிவ் பால்மாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஹியூலெட் பாக்கர்ட்

ஹியூலெட் பாக்கர்ட்

எனவே தற்போது இதுகுறித்த ஆராய்ச்சியாளர்கள் ஃபேக்ஸ் மிஷின் பிரிண்டர் தயாரிப்பாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்டி வருகின்றனர். உலகின் முன்னணி பேக்ஸ் மிஷின் தயாரிப்பு நிறுவனமான ஹியூலெட் பாக்கர்ட் என்ற நிறுவனம் இந்த குறையை சரிசெய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனாலும் இன்னும் பல நிறுவனங்களின் ஃபேக்ஸ் மிஷின்களில் இந்த குறைபாடு தென்படுகிறது. இதில் மேனான் மற்றும் எப்சன் நிறுவனங்களும் அடங்கும். பல மிஷின்கள் இன்னும் அப்டேட் செய்யப்படாமல் பழையனவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம். எனவே முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ரகசியங்களை பாதுகாத்து கொள்வது என்பது இனிமேல் ஒரு மிகப்பெரிய சவால்தன்

அமெரிக்கா

அமெரிக்கா

உலக அளவில் ஃபேக்ஸ் மிஷின்களின் பயன்பாடு என்பது சுமார் 45 மில்லியனை தாண்டிவிட்டது. குறிப்பாக ஹெல்த்கேர், வங்கிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஃபேக்ஸ் மிஷினை நம்பியே உள்ளனர். அமெரிக்காவில் 75% மருத்துவ துறையினர் ஃபேக்ஸ் மிஷின்களை தொடர்புகளுக்கு பயன்படுத்துகின்றன்ர.

எனவே ஃபேக்ஸ் மிஷின்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாக தங்கள் பேக்ஸ் மிஷின்களை அப்டேட் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி நெட்வொர்க்களின் பாதுகாப்பு தன்மைகளை ஆராய்ந்து பேக்ஸ் மிஷின்கள் மூலம் ஹேக்கிங் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்

Best Mobiles in India

English summary
Fax machines at your office may be the new target for hackers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X