களமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது?- எளிய வழிமுறைகள்!
கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட FAUG விளையாட்டுகுடியரசு தினமான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் மற்றும் வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட FAUG விளையாட்டு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட FAUG விளையாட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான மொபைல் பயனர்கள் இந்த விளையாட்டை அணுகுகின்றனர். FAUG விளையாட்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது என கூறப்படுகிறது.
பப்ஜிக்கு இணை மாற்றான விளையாட்டு
கடந்தாண்டு இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதற்கு இணைமாற்றாக FAUG விளையாட்டு அறிமுகமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும் இருவிளையாட்டும் விளையாடுவதற்கு வித்தியாசமானவையாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் FAUG விளையாட்டு நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்கோர் கேம்ஸால் உருவாக்கப்பட்ட விளையாட்டு
FAUG விளையாட்டை பெங்களூருவை தளமாகக் கொண்ட என்கோர் கேம்ஸால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் மூலம் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு கிடைக்கும் FAUG
FAUG விளையாட்டு இப்போது ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த லிங்க்கை கிளிக் செய்து FAUG விளையாட்டை பதிவிறக்கம் செய்யலாம். FAUG விளையாட்டு பதிவிறக்கம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த விளையாட்டு கிடைக்கிறது.
சுவாரஸ்யமாக இருக்கும் காட்சிகள்
FAUG விளையாட்டு ஆரம்பத்தில் கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் நடந்த நிஜ நிகழ்வின் பின்னணியில் தொடங்குகிறது. ஒற்றை வீரர் விளையாட்டாக இருக்கிறது. ஆரம்பத்தில் மல்டிபிளேயர் மற்றும் போர் விளையாட்டு முறைகள் கிடைக்காது என கூறப்படுகிறது. பயன்பாட்டை ஓபன் செய்ததும் சிறது நேரம் விளையாட்டை எவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பது காண்பிக்கப்படுகிறது. இதை பார்ப்பதற்கு சுவரஸ்மாக உள்ளது என கூறப்படுகிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம்
முன்பே முன்பதிவு செய்தவர்கள் விளையாட்டை இப்போதே பதிவிறக்கம் செய்து விளையாடலாம் எனவும் முன்பதிவு செய்யாதவர்கள் இப்போதே கூகுள் ப்ளே ஸ்டோரில் விளையாட்டை முன்பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

FAUG விளையாட்டு பதிவிறக்க அளவு
ஆண்ட்ராய்டு 8.0 மற்றும் அதற்கு மேம்பட்ட சாதனங்களில் FAUG அணுகக் கிடைக்கிறது. விளையாட்டின் பதிவிறக்க அளவு சாதனத்தை பொறுத்து மாறுபடுகிறது. ஆனால் தோராயமாக 500Mp வரை விளையாட்டு பதிவிறக்கம் கிடைக்கும். FAUG விளையாட்டு இலவசம் என்றாலும் அதன் மேம்பாட்டு பயன்முறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
Source: 91mobiles.com


Click it and Unblock the Notifications