Home
News

ஹாலிவுட் படத்தை மிஞ்சும் டிரைலர்: FauG வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பப்ஜிக்கு இணை மாற்றாக இருக்கும் விளையாட்டான FauG ஜனவரி 26 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. FauG விளையாட்டின் டிரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் FauG

ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் FauG

FauG விளையாட்டு குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இதன் முதல் டிரைலரை வெளியிட்டுள்ளார். இது முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டாகும். இதன் டிரைலரில் பனி நிரம்பிய இடங்களில் நடைபெறும் சண்டை நடக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

FauG டிரைலர் வெளியீடு

FauG டிரைலர் வெளியீடு

FauG டிரைலர் 1 நிமிடம் 30 விநாடிகள் இருக்கிறது. இந்த டிரைலர் பேஸ்புக், யூடியூப் மற்றும் டுவிட்டரில் இருக்கிறது. இந்த விளையாட்டில் அவதாரங்கள் இந்திய ராணுவ சீருடையில் இடம்பெற்றுள்ளனர். எதிரிகளுடன் போரில் இடம்பெறுவது போல் காட்சிகள் இருக்கிறது.

விளையாட்டின் மையக்கரு

விளையாட்டின் மையக்கரு

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்கள் இந்த விளையாட்டின் கருவாக இருக்கிறது. இதுகுறித்து விளையாட்டு தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி கால்வான் பள்ளத்தாக்கில் நடக்கும் சம்பவத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள்

டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின்படி இந்த விளையாட்டு துப்பாகிகள் மற்றும் கைகளால் சண்டைபோடும் விதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் கைகளால் சண்டைபோடும் விதமாக இந்த விளையாட்டு இருக்கும் எனவும் அடுத்தடுத்தக்கட்டத்தில் துப்பாக்கி, வெடிபொருள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒற்றை வீரர் மற்றும் மல்டிபிளேயர் முறை

ஒற்றை வீரர் மற்றும் மல்டிபிளேயர் முறை

FauG விளையாட்டு ஒற்றை வீரர் மற்றும் மல்டிபிளேயர் முறைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. FauG என்றால் அச்சமற்ற மற்றும் யுனைடெட் காவலர்கள் என்று அர்த்தம். கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த விளையாட்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதற்கட்டமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
FauG Official Trailer: FauG India Release Date Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X