ஸ்மார்ட்போன் வீரர்களே நீங்கள் தயாரா?- FAU-G vs PUBG: எது விளையாட நல்லா இருக்கும்?
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அதற்கு இணையான மாற்று விளையாட்டை தேடி அதன் ரசிகர்கள் அலைமோதினர். பப்ஜிக்கு பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகிறது FAU-G விளையாட்டு.

FAU-G விளையாட்டு அம்சங்கள்
FAU-G விளையாட்டு பப்ஜி கேமுக்கு இணைமாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. என் கோர் கேம்ஸ் FAU-G விளையாட்டை அறிமுகப்படுத்துகிறது. FAU-G என்பது அச்சமற்ற மற்றும் யுனைடெட் பாதுகாவலர்கள் என்பதின் சுருக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வார்த்தைகக்கு சிப்பாய் என்றொரு பொருள் உள்ளது.

ஆத்மனிர்பார் பாரத் இயக்கத்திற்கு ஆதரவு
மத்திய அரசின் ஆத்மனிர்பார் பாரத் இயக்கத்தின் ஆதரவாக இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது. FAU-G விளையாட்டுக்கும் பப்ஜி விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒப்பீடுகள் குறித்து பார்க்கலாம்.

பேட்டில் ராயல் கேமாக பப்ஜி
பப்ஜி விளையாட்டு பேட்டில் ராயல் கேமாகவும், FAU-G விளையாட்டு அதிரடி விளையாட்டாகவும் இதில் இந்த இரண்டு விளையாட்டுகளும் மாறுபடுகிறது. FAU-G விளையாட்டு டீசர் குறிப்பிட்டது போல் இது கால்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை பிரதபலிக்கும் விதமாக இருக்கிறது.

கால்வான் பள்ளத்தாக்கு சம்பவம்
FAU-G விளையாட்டு கால்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு இருக்கிறது. இதன்மூலம் பார்க்கையில் FAU-G விளையாட்டு உண்மையை பிரதபலிக்கும் விதமாக இருக்கிறது, பப்ஜி கற்பனையின் பிரதிபலிப்பாகும்.

FAU-G டீசர் வெளிப்படுத்தும் அம்சம்
FAU-G டீசர் வைத்து பார்க்கையில் இது கைகளின் மூலம் தாக்கப்படும் விளையாட்டாகும், பப்ஜி விளையாட்டு ஆயுதங்கள் மூலம் தாக்கப்படும் விளையாட்டாகும். FAU-G ஆயுதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. பப்ஜி மொபைல் இந்தியா என பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட இருந்தாலும் FAU-G நேரடி இந்திய தயாரிப்பாகும்.

பப்ஜி மொபைல் இந்தியா
பப்ஜி மொபைல் கேம் மேம்படுத்தல் முறையில் பப்ஜி மொபைல் இந்தியா என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது. சீனாவுடனான தொடர்பை துண்டித்து இந்திய பயனர்களின் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளின் மேம்படுத்தலோடு பப்ஜி மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யஉள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications