குடியரசு தினத்தன்று தயாராக இருங்கள்-4 மில்லியன் முன்பதிவுகளை கடந்த FAU-G விளையாட்டு: முன்பதிவு செய்வது எப்படி?

|

FAU-G விளையாட்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில் இந்த விளையாட்டுக்கான முன்பதிவு 4 மில்லியனை கடந்துவிட்டது. FAU-G விளையாட்டு முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம்

ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம்

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு, பப்ஜி மொபைல் இந்தியா என்ற மறுபெயரிட்ட பதிப்பாக விரைவில் வெளியாகும் என தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பப்ஜிக்கு இணை மாற்றாக இருக்கும் என்று கருதப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட FAU-G விளையாட்டு ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FAU-G விளையாட்டு

FAU-G விளையாட்டு

FAU-G விளையாட்டு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து என்கோர் விளையாட்டுகளால் முதலில் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் போஸ்டர் வெளியான முதலே ரசிகர்களிடம் இந்த விளையாட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. காரணம் இந்த விளையாட்டு இந்திய ராணுவ வீரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று அறிமுகம்

குடியரசு தினத்தன்று அறிமுகம்

இந்திய ராணுவ வீரர்களை கதாபாத்திரமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டை அறிமுகம் செய்வதற்கு குடியரசு தினத்தைவிட சிறந்த நாளில்லை. எனவே இந்த விளையாட்டு ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.

பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!

FAU-G விளையாட்டு முன்பதிவு

FAU-G விளையாட்டு அறிமுக தேதி நெருங்கி வருவதால் இதை விளையாட வீரர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த மாதம் நிறுவனம் கூகுள் ப்ளே ஸ்டோரில் விளையாட்டுக்கான முன்பதிவுகளை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திலேயே விளையாட்டுக்கான 1 மில்லியன் முன்பதிவுகள் செய்யப்பட்டன.

நான்கு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகள்

இந்த நிலையில் தற்போது FAU-G விளையாட்டு நான்கு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. என்கோர் கேம்ஸின் இணை நிறுவனரும் தலைவருமான விஷால் கோண்டல் தனியார் தளத்துக்கு அளித்த பேட்டியில், இந்த விளையாட்டு குறைந்த விலை சாதனங்களில் பதிவு செய்ய அனுமதிக்காது என தெரிவித்துள்ளார். அதோடு குறைந்தது ஐந்து மில்லியன் முன்பதிவுகளை கடப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்பதிவு செய்யும் வழிமுறை

முன்பதிவு செய்யும் வழிமுறை

FAU-G விளையாட்டை FAU-G முன்பதிவு இந்த லிங்க்கை கிளிக் செய்து முன்பதிவு செய்யலாம். FAU-G விளையாட்டு மல்டிப்ளேயர் அம்சம் கொண்டிருக்கும் எனவும் இளைஞர்களுக்கு இந்திய வீரர்களின் தியாகங்கள் குறித்து சொல்லும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்த விளையாட்டில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் நடக்கும் சம்பவம்

கால்வான் பள்ளத்தாக்கில் நடக்கும் சம்பவம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்கள் இந்த விளையாட்டின் கருவாக இருக்கிறது. இதுகுறித்து விளையாட்டு தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி கால்வான் பள்ளத்தாக்கில் நடக்கும் சம்பவத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டிரைலர் காட்சிகள்

டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின்படி இந்த விளையாட்டு துப்பாகிகள் மற்றும் கைகளால் சண்டைபோடும் விதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் கைகளால் சண்டைபோடும் விதமாக இந்த விளையாட்டு இருக்கும் எனவும் அடுத்தடுத்தக்கட்டத்தில் துப்பாக்கி, வெடிபொருள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
FAU-G Set to Launch in India on January 26: Here's Pre Registration Link and What to Expect

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X