நவம்பரில் வெளியாகும் FAU-G: தத்ரூபமான டீசர் உள்ளே!
பிரபல கேமிங் பயன்பாடுகளில் ஒன்றான பப்ஜி, பப்ஜி லைட் உள்ளிட்ட பல சீன பயன்பாடுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பப்ஜிக்கு இணை மாற்றாக FAU-G விளையாட்டு அறிவிக்கப்பட்டது.

FAU-G ஸ்மார்ட்போன் விளையாட்டு
என்-கோர் கேம்ஸ் FAU-G ஸ்மார்ட்போன் விளையாட்டை அறிமுகப்படுத்துகிறது. FAU-G என்பது அச்சமற்ற மற்றும் யுனைடெட் பாதுகாவலர்களின் சுருக்கமாகும். இந்த வார்த்தைக்கு இந்தியில் சிப்பாய் என்றும் பொருள். மத்திய அரசின் ஆத்மனிர்பார் பாரத் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

FAU-G டீசர்
FAU-G விளையாட்டு நவம்பரில் தொடங்கப்போவதாக என்கோர் கேம்ஸ் அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் இந்த விளையாட்டின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வெளியாகியுள்ள டீஸரில் பயன்படுத்தப்படும் காட்சிகள் அசல் விளையாட்டிலிருந்து வந்ததா அல்லது டீஸருக்காக உருவாக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

டீசரில் காட்டப்படும் கால்வன் பள்ளத்தாக்கு
பப்ஜி தடை அறிவித்து சிறிது காலத்திலேயே FAU-G விளையாட்டு குறித்து அறிவிப்பு வெளியானது. டீஸர் FAU-G விளையாட்டு குறித்த தெளிவான விளக்கத்தை தெரிவிக்கவில்லை. கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையிலான மோதலை இந்த டீசரில் காட்டப்படுகிறது. FAU-G விளையாட்டின் டீஸரின்படி இந்த விளையாட்டு ஆயுதங்கள் இல்லாமல் கைகளால் மட்டுமே எதிரியை எதிர்த்துப் போராடுவது போன்று காட்டுகிறது.
சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதல்
ஜூன் மாதம் கால்வன் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதல் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியை மையமாக வைத்தே இந்த விளையாட்டு இருக்கிறது. Fau-G கேம் டீஸர் யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. இது பிசி மற்றும் கேமிங் கன்சோல்களுக்கான பயன்பாடு கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்திய வீரர்களின் தியாகங்கள்
இந்தியாவின் முன்னணி கேமிங் தொழில்முனைவோர்களில் ஒருவரான விஷால் கோண்டல் என்கோர் விளையாட்டு தளத்தில் பணியாற்றி வருகிறார். FAU-G விளையாட்டு மல்டிப்ளேயர் அம்சம் கொண்டிருக்கும் எனவும் இளைஞர்களுக்கு இந்திய வீரர்களின் தியாகங்கள் குறித்து சொல்லும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்த விளையாட்டில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications