4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.!

|

கூகுள் மேப்ஸ் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் மிகவும் உதிவியாய் இருக்கிறது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை அதிகமாய் பயன்படுத்துகின்றனர்.

4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.!

விரைவில் கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் வசதியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது, அப்படி புதிய அம்சம் வந்தால் மிகவும் எளிமையான முறையில் இந்த கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்த முடியும்.

ரிக்ஷா ஓட்நர்

ரிக்ஷா ஓட்நர்

இந்நிலையில் மேற்கு டெல்லியில் உள்ள கிர்ட்டி நகர் பர்னிச்சர் மார்க்கெட்டில் 12வயது சிறுமி ஒருவர் ரிக்ஷா ஒன்றில் ஏறியுள்ளார், அந்த சிறுமியிடம் ரிக்ஷா ஓட்நர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அந்த சிறுமி எந்த பதிலும் அளிக்கமால் முழித்துள்ளார். பின்பு இந்த ஓட்டுநர் சிறுமியை கிர்ட்டி நகர் காவல்நிலையத்தில்

ஒப்படைத்துள்ளார்.

காவலதுறையினர் விசாரணை நடத்தினர்

காவலதுறையினர் விசாரணை நடத்தினர்

இந்தச் சம்பவம் சரியாக ஹோலிப் பண்டிகையான மார்ச் மாதம் 21-ம் தேதி நடந்துள்ளது, பின்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் 'குர்ஜா" கிராமத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் ஜீடன் என்று சிறுமி கூறியுள்ளார்

அதன்பிறகு குர்ஜா என்ற பெயரையொட்டிய டெல்லியில் உள்ள கிஜீரிகாஸ், கௌரஜி உள்ளிட்ட பகுதிகளில் காவலதுறையினர் விசாரணை நடத்தினர், அதில் சிறுமி காணவில்லை என்பது போன்ற எந்த புகாரும் பாதிவாகவில்லை.

ஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா?ஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா?

சிறுமியை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை

சிறுமியை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை

பின்பு அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கும் அழைத்துசென்றும் அந்த சிறுமியை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, மேலும் சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அவர் மாமா பின்டு என்பவருடன் டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது சிறுமியை வாஷ்ரூமுக்கு அழைத்து சென்வர், ஆடைகளை களைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

உடனே அந்த சிறுமி சத்தமாக அழத்தொடங்கியதும் அங்கேயே விட்டுச்சென்று ஒடிவிட்டார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்பு மார்ச் 22-ம் தேதி சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் துன்புறுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதன்பின்பு ஐ.பி.சி 354 ஏ போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?ஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?

 தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது

தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது

தொடர்ந்து நிர்மல் சாயா என்ற தொண்டு நிறுவனத்திடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட போதும் விசாரணை நடைபெற்று வர உத்திரப்பிரதேசம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா கிராமத்துக்கு சிறுமியை காவல்துறையினர்

அழைத்துசென்றனர், ஆனால் எந்த முன்னேற்றம் இல்லாததால் தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

சிறுமியை அடையாளம் காட்டமுடியவில்லை

சிறுமியை அடையாளம் காட்டமுடியவில்லை

மேலும் காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தை தேடிக்கொண்டிருந்தனர் ஆனாலும் சிறுமிக்கு அவளது கிரமாத்தின் பெயரை சரியான முறையில் சொல்லத் தெரியவில்லை. பின்பு பலமுறை குர்ஜா பகுதிக்கு சிறுமியை அழைத்துசென்றும் அங்கிருக்கிறவர்களால் சிறுமியை அடையாளம் காட்டமுடியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 சான்பார்சா குர்ஜா

சான்பார்சா குர்ஜா

மீண்டும் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சாகபல் என்ற பெயரைக் கூறியுள்ளார், இதையடுத்து கூகுள் மேப்ஸ் உதவியுடன் உத்தரப்பிரதேசத்தில் சித்தார்த் நகர் மாவட்டத்தில் சாகபர், சான்பார்சா குர்ஜா உள்ளிட்ட கிராமங்கள்

அங்கிருப்பது கண்டறியப்பட்டது.

 வழக்கை காவல் துறையினர் கைவிட்டனர்

வழக்கை காவல் துறையினர் கைவிட்டனர்

அதன்பின்பு காவல்துறையினர் சிறுமியின் குடும்பத்தை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளனர், ஆகஸ்ட் 1-ம் தேதி சிறுமியன் தந்தை ஜீடன், டெல்லி வந்து சிறுமியை மீட்டுள்ளார். மேலும் பிண்டு என்ற எந்த அங்கிளும் இல்லை என்ற சிறுமியின் தந்தை கூறியதும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை காவல்

துறையினர் கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
This Father Reunites With His Daughter After Four Months! All Thanks To Google Maps : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X