ஆன்லைன் வகுப்பு: மகளுக்காக பாசக்கார தந்தை செய்த அட்டகாசமான ஐடியா.!
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா. உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாதநிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது.

இருப்பினும் ஏணைய பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது. அதற்கேற்ப தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி வருகிறது. வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆன்லைனில் படிக்கும் மகளுக்காக தந்தை ஒருவரின் பிரத்யேக ஏற்பாடு இணையதளங்களில் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,அதைப் பற்றி விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

அந்த தந்தை தன் செல்ல மகளுக்காக ஒரு பள்ளிக்கூட வகுப்பறையின் மாதிரியை வீட்டு அறைக்குள் தயார் செய்துள்ளார். அதாவது அமர்ந்து எழுத டேபிள், எதிரே போர்ட் என வசதி செயத்துள்ளார். ஆனால் ஆசரியர் வேண்டுமே? அதற்கும் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார் அந்த அசத்தல் தந்தை.

அதாவது ஒரு ஆசிரியரின் உருவத்தை தயார் செய்து அதன் முன்பகுதியில் மட்டும் ஆசிரியரின் நேரடி படத்தை டேப்லெட் மூலம் இணைந்துவிட்டார். பின்பு பார்ப்பதற்கு ஆசரியை நின்றுகொண்டு பாடம் எடுப்பது போலவே உள்ளது.
அந்த ஆன்லைன் வகுப்பு பள்ளி வகுப்பறை போலவே ஏற்பாடு செய்துள்ள தந்தைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவும் தற்சமயம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications