9 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய 'திகில்கப்பல்'! ஏதோ தப்பா இருக்கே?

சாம் ரதுலங்கி பிபி1600 என்ற மிகப்பெரிய துருப்பிடித்த வெற்று சரக்கு கப்பலை மியான்மரின் வர்த்தக தலைநகரை சேர்ந்த மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர்The large, empty and rusty container vessel, Sam Ratulangi PB

|

யாங்கூன் பிராந்தியத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான திகிலூட்டும் பேய் கப்பல் பற்றி விசாரித்து வந்த மியான்மர் அதிகாரிகள், அதன் விடையை இந்த வாரம் கண்டறிந்துள்ளனர்.

9 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய 'திகில்கப்பல்'! ஏதோ தப்பா இருக்கே?

சாம் ரதுலங்கி பிபி1600 என்ற மிகப்பெரிய துருப்பிடித்த வெற்று சரக்கு கப்பலை மியான்மரின் வர்த்தக தலைநகரை சேர்ந்த மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
177மீட்டர் நீளமுள்ள சாம் ரதுலங்கி பிபி 1600 கப்பல் 2001ல் கட்டமைக்கப்பட்டது. பங்களாதேஷில் உள்ள கப்பல் உடைக்கும் தொழிற்சாலைக்கு இந்த திகிலூட்டம் கப்பல் இழுவை படகு மூலம் இழுத்துவரப்பட்டதாகவும், எனினும் மோசமான வானிலை காரணமாக அக்குழு கப்பலை தொலைத்துவிட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

சாம் ரதுலாங்கி

சாம் ரதுலாங்கி

அதிகாரிகளும், கடற்படை வீரர்களும் கடந்த வியாழக்கிழமை அன்று கடற்கரைக்கு அருகில் இருந்த சாம் ரதுலாங்கி பிபி 1600 கப்பலில் நுழைந்தனர்.எப்படி இவ்வளவு பெரிய கப்பல் மாலுமி மற்றும் எந்தவொரு பொருட்களும் இல்லாமல் மியான்மரில் கரை ஒழுங்கியது என போலீசாரும், பார்வையாளர்களும் குழும்பி வருகின்றனர்.

உலகம் முழுவதும் பயணம்

உலகம் முழுவதும் பயணம்

இந்த சரக்குகப்பல் செயல்படும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 177 நீளம்கொண்ட இந்த சரக்குகப்பல் 2001ல் கட்டமைக்கப்பட்டதாகவும், உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் மெரைன் டிராபிக் இணையதளம் கூறுகிறது. கடைசியாக 2009ல் தய்வானில் இந்த கப்பல் பயணம் செய்துள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மாயமான கப்பல் மியான்மர் கடல்பகுதியில் காணப்படுவதாகவும் ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கப்பல் உடைக்கும் தொழிற்சாலை

கப்பல் உடைக்கும் தொழிற்சாலை

இந்த கப்பலில் இரண்டு கேபிள் இணைக்கப்பட்டிருப்பதால், வேறொரு கப்பல் இதனை இழுத்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடந்த சனிக்கிழமை மியான்மர் கடற்படை கூறியுள்ளது. பின்னர் இன்டிபென்டன்ஸ் என அழைக்கப்படும் இழுவை கப்பலை மியான்மர் கடற்பகுதியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலிருந்த 13 இந்தோனேசியர்களை விசாரிக்கையில், ஆகஸ்ட் 13லிருந்து இந்த இழுவை படகு அந்த கப்பலை இழுத்து வருவதாகவும், பங்காளதேஷில் உள்ள கப்பல் உடைக்கும் தொழிற்சாலைக்கு இழுத்து சென்றதாகவும் தெரிந்துகொண்டனர்.

மோசமான வானிலை

மோசமான வானிலை காரணமாக கப்பலில் இணைக்கப்பட்ட கேபிள்கள் அறுந்துவிட்டதால், அதை அப்படியே கைவிட முடிவுசெய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அதிகாரிகள் இது தொடர்பாக மேலும் விசாரித்துவருகின்றனர். இந்த இழுவை படகின் உரிமையாளர் மலேசியாவை சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. பங்களாதேஷில் உள்ள மிகப்பெரிய கப்பல் உடைக்கும் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான பழைய வர்த்தக கப்பல் ஒவ்வொரு ஆண்டும் உடைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Fastrack Reflex Wav review A decent gesture-controlled smart band: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X