இணைய வேகம்- அண்டை நாடுகளில் எது சிறப்பு, எது மோசம்- இந்தியாவின் வேகம் என்ன?

|

சார்க் நாடுகளுக்கு இடையேயான இணைய வேகத்தை ஒப்பிடும் ஆய்வு அறிக்கையை ஊக்லா வெளியிட்டுள்ளது. மாலத்தீவு, வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் மொபைல் இணைய வேகத்தை பொறுத்தவரையில் இந்தியா பின்தங்கி இருப்பதாகவே ஊக்லா அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா 131-வது இடம்

உலகின் மொத்த நாடுகளுடனான இணைய வேகத்தை பொறுத்தவரையில் இந்தியா 131-வது இடத்தை பிடித்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஸ்பீடெஸ்ட்டை பயன்படுத்தி மில்லியன் கணக்கில் சோதனை நடத்தப்படுகிறது. உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடாக இந்திய இருக்கிறது. இணைய நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானைவிட அதிக இணைய வேகத்தை பதிவு செய்துள்ளது.

பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம்

பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம்

உலகளவில் சராசரியாக 46.74 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகம் மற்றும் 12.49 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தை பொறுத்தவரையில் இந்தியா 12.41 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகமும் ஸ்பீடெஸ்டெஸ்ட் குளோபல் அறிக்கைப்படி ஜனவரி 2021-க்கான கணக்கீட்டின்படி இந்தியா 4.76 எம்பிபிஎஸ் பதிவேற்றும் வேகத்தையும் பெற்றிருக்கிறது. இது இந்தியாவின் பின்னடைவு என்பதாகும்.

ஸ்பீடெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ்

இந்தியாவின் அண்டை நாடுகளை ஒப்பிட்டு சிறந்த மற்றும் குறைந்த இணைய வேகத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலை பார்க்கலாம். ஊக்லா ஸ்பீடெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் படி, இந்தியாவைவிட சராசரியாக மூன்று மடங்கு மொபைல் இணைய வேகத்தை மாலத்தீவு பெற்றிருக்கிறது. அந்த பகுதியில் 44.30 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகமும் 13.83 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றிருக்கிறது.

 இரண்டாவது வேகமான மொபைல் இணையம்

அதேபோல் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இரண்டாவது வேகமான மொபைல் இணையத்தை கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டை பொறுத்தவரை ஊக்லா ஸ்பீடெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் படி, பாகிஸ்தான் 17.95 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும், 11.16 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் இரண்டாவது வேகமான இணையத்தை பதிவு செய்துள்ளது.

நேபாளம் மூன்றாவது இடம்

அதேபோல் 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டை பொறுத்தவரை, நேபாளம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஊக்லா அறிக்கைப்படி நேபாளத்தின் சராசரி பதிவிறக்க வேகம் 18.44 எம்பிபிஎஸ் மற்றும் 11.73 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையை விட நேபாளம் அதிவேக இணையத்தை பதிவு செய்துள்ளது.

அடுத்தடுத்து டுவிஸ்ட்- நதியில் பதுக்கப்பட்ட ஆதாரங்கள் மீட்பு-முகேஷ்அம்பானி மிரட்டல் வழக்கில் தொடரும் திருப்பம்அடுத்தடுத்து டுவிஸ்ட்- நதியில் பதுக்கப்பட்ட ஆதாரங்கள் மீட்பு-முகேஷ்அம்பானி மிரட்டல் வழக்கில் தொடரும் திருப்பம்

இலங்கை பிடித்திருக்கும் இடம்

அதேபோல் இலங்கை அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்தியாவை விட இலங்கை அதிவேக இணையத்தை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு ஊக்லா ஸ்பீடெஸ்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, இலங்கை சராசரியாக 17.36 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 8.40 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையம் பெற்றுள்ளது. இந்தியாவை விட இலங்கை சிறந்த இணைய வேகத்தை பதிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த இடம்

அடுத்த இடத்தில் இருக்கும் நாடு பூட்டான். இந்தியாவை விட பூட்டான் அதிவேக இணையத்தை பதிவு செய்துள்ளது. ஊக்லா ஸ்பீடெஸ்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, பூட்டான் 15 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை பெற்றிருக்கிறது.

வங்காளதேச இணைய வேகம்

அடுத்த இடத்தில் இருக்கும் நாடு இந்தியாவைவிட பின்தங்கியிருக்கிறது. ஊக்லா ஸ்பீடெஸ்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் அறிக்கைப்படி, இந்தியாவைவிட பின்தங்கியிருக்கும் நாடு வங்களாதேசம். வங்காளதேச இணைய வேகத்தை பொறுத்தவரையில், 10.57 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும், 7.19 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கடைசி இடம்

அடுத்த இடத்தில் இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான். சார்க் நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளிலையே இணைய வேகத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான். ஊக்லா அறிக்கைப்படி 6.63 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 3.33 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது. அதேபோல் உலகின் மிக குறைவான மொபைல் இணைய வேகத்தை கொண்ட நாடு என்றே இதை குறிப்பிடலாம்.

Best Mobiles in India

English summary
Fastest Internet Speeds: Better and worse Internet Speeds than India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X