Home
News

ஜனவரி 1 முதல் இந்த வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்.! முழு விவரம்.!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் எலக்ட்ரானிக் டோல் சேகரிப்புக்கான திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) பாஸ்டேக் என்று முறையில் நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.

அதிர்வெண் அடையாள

FASTag என்பது அதனுடன் இணைக்கப்பட்ட ப்ரீபெய்ட் கணக்கிலிருந்து நேரடியாகக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆகும்.

வெளிவந்த தகவலின்படி

மேலும் தற்போது வெளிவந்த தகவலின்படி இந்தியாவில் ஜனவரி 1, 2021 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

வகை மோட்டார் வாகனங்களுக்கு

சி.எம்.வி.ஆர் 1989 இன் சட்ட திருத்தங்களின் படி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1-க்கு முன் விற்கப்பட்ட எம் மற்றும் என்வகை மோட்டார் வாகனங்களுக்கு (நான்கு சக்கர வாகனங்கள்) பாஸ்டேக் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

பின்பு அடுத்து இரண்டு

அதேபோல் நாடு முழுக்க பெரும்பாலான பகுதிகளில் பாஸ்டேக் மிக எளிமையாக கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.பின்பு அடுத்து இரண்டு மாதங்களில் ஆன்லைனிலும் பாஸ்டேக் ஐடி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சகம் தெரிவித்து

இதுதவிர நாடு முழுக்க அனைத்து டோல்களிலும் எலெக்டிரானிக் பேமண்ட் முறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் டோல்களில் காத்திருக்கும் நேரம் கண்டிப்பாக குறையும் என கூறப்படுகிறது.

ஐடன்டிஃபிகேஷன் (RFID)

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட் டேக் என்பது. சுங்கச்சாவடியில் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும் இந்த பாஸ்டேக்மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

செய்வது போல உங்கள்

மொபைல் ரீசார்ஜ் செய்வது போல உங்கள் பாஸ்டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது இந்த பாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்

Best Mobiles in India

English summary
FASTags are mandatory for all four-wheelers from January 1: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X