FASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா? அப்போ இதை பண்ணுங்க!

|

பிப்ரவரி 29ம் தேதி வரை, மத்திய அரசு மீண்டும் ஃபாஸ்டேக்கை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. மின்னணு கட்டண வசூலை ஊக்குவிக்கும் முயற்சியில், ஃபாஸ்டேக்கின் பயனர்களுக்கு ரூ.100 மதிப்பிலான கட்டணத்தை இலவசமாக்கியுள்ளது. இந்த சலுகையை அடுத்த 15 நாட்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இலவச ஃபாஸ்டேக்

இலவச ஃபாஸ்டேக்

வாகன உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்கள், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள், பொதுவான சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட விற்பனை இடங்களில் உரிமையாளரின் செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி) மூலம் பிப்ரவரி 29 வரை இலவச ஃபாஸ்டேக்கை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து நுகர்வோருக்கும் இலவசம்

அனைத்து நுகர்வோருக்கும் இலவசம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி ரூ.100 மதிப்புள்ள ஃபாஸ்ட்டேக் கட்டணம் அடுத்த 15 நாட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை, NHAI தங்கள் வாகனத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து நுகர்வோருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!பிஎஸ்என்எல் விடுத்த எச்சரிக்கை.! இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK!

கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்

கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்

என்ஹெச் கட்டண டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டாக் வழியாகப் பயனர் கட்டணத்தின் டிஜிட்டல் சேகரிப்பை மேலும் அதிகரிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) இந்த சலுகையை அறிவித்துள்ளதாக அதன் அறிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயமும் உள்ளது.

இவர்களுக்கு மட்டும் இலவசம் கிடையாது

இவர்களுக்கு மட்டும் இலவசம் கிடையாது

கவனிக்க வேண்டியது, அரசாங்கம் NHAI ஃபாஸ்ட்டேக் கட்டணங்களை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் Paytm , ICICI, HDFC போன்ற வேறு மூன்றாம் தரப்பு வழங்கிய ஃபாஸ்ட்டேக்களுக்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று அர்த்தமில்லை. அரசாங்கம் இல்லாமல் மற்ற தனிநபர் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்கிய அட்டைகளுக்கு இந்த சலுகை கிடையாது.

பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?

காரணம் இதுதான்

காரணம் இதுதான்

ஏனெனில் மூன்றாம் தரப்பு ஃபாஸ்ட்டேக் அட்டைகளுக்கு ரூ.200 கட்டணத்துடன் ரூ.200 பாதுகாப்பு வைப்பையும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு டிசம்பர் மாதத்திலும் அரசாங்கம் ஃபாஸ்டேக்கை இலவசமாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையை இந்திய அரசாங்கம் தற்பொழுது நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
FASTag Users Want To Use Fastag free for the next 15 days? Then Know This First : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X