Home
News

புது FASTag ரூல்ஸ்.. 1 முறை மட்டும் கட்டணம் லைஃப் டைம் டோல் கட்ட தேவையில்லை.. 1 வருடத்திற்கு ரூ.3000 போதும்..

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அனைவரும் குறைந்த செலவில் சுங்கச்சாவடிகளை (Toll Booths) பயன்படுத்த அனுமதிக்கும் இரண்டு முக்கியமான புதிய விதிமுறைகளை (New rules coming for Toll plaza's) விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 1 வருடம் செல்லுபடியாகும் டோல்-பிளாசா பாஸ் (Toll Plaza Pass) மற்றும் லைஃப் டைம் டோல் பிளாசா பாஸ்களை NHAI அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு பாஸ்களின் விலை என்ன? மற்றும் இதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 1000-திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை (Toll Plaza) NHAI பராமரித்து வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த வருடம் ரூ. 50,000 கோடி வரை கட்டணம் வசூலித்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு வாகனம் சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்க (Toll Plaza charges) ஃபாஸ்டேக் செயல்முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புது FASTag ரூல்ஸ்.. 1 முறை மட்டும் கட்டணம் லைஃப் டைம்  கட்டணம் இல்லை

புது FASTag ரூல்ஸ்.. 1 முறை மட்டும் கட்டணம் லைஃப் டைம் டோல் கட்ட தேவையில்லை:

சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் சுங்கக் கட்டணத்தை செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) பெரிதும் பயன்படுகிறது. இருப்பினும், சுங்கவரி கட்டணங்கள் (Toll charges) அதிகமாக இருப்பதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் புகார் அளித்தனர். இதன் விளைவாக NHAI புதிய கட்டண முறையை (New toll plaza payment method) அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

தற்போது NHAI (National Highways Authority of India) டோல் பூத் (Toll booth) அருகில் வசிக்கும் மக்களுக்காக மாதாந்திர பாஸ் (NHAI monthly pass) மற்றும் வருடாந்திர பாஸ்களை (NHAI yearly pass) வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் ஒரே வழியில் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்காக இந்த பிரத்தியேக பாஸ்களை NHAI வழங்க துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 1 மாதம் செல்லுபடியாகும் பாஸ்களுக்கு (1 month pass price) மாதம் ரூ.340 என்ற கட்டணம் சசூலிக்கப்பட்டு வருகிறது.

1 வருட FASTag பாஸ் என்ன விலை? ரூ.3000 மட்டும் இருந்தா போதுமா?

அதேபோல், 1 வருடம் செல்லுபடியாகும் பாஸ்களுக்கு (1 year pass price) ரூ. 4050 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறிப்பிட்ட பகுதில் உள்ள சுங்கச்சாவடியை கடக்க மட்டுமே உதவுகிறது, இதேபோல், இந்தியாவில் உள்ள அணைத்து சுங்கச்சாவடிகளையும் கடக்க அனுமதிக்கும் பாஸ்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற மக்கள் குரலுக்கு பதில் அளிக்க NHAI முயற்சி செய்து வருகிறது.

இதன் விளைவாக புதிய FASTag பாஸ் சேயை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மிகமிக குறைத்த செலவில் இந்த பாஸ்களை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. புதிய விதிமுறைகளின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களை கடக்க அனுமதிக்கும் 1 ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் பிரத்தியேகமான 1 வருட FASTag பாஸ்களை வெறும் ரூ. 3000 விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

FASTag லைப் டைம் பாஸ் விலை எவ்வளவு? எத்தனை ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம்?

இதேபோல், லைப் டைம் பாஸ்களையும் (Toll plaza life time pass) வழங்க NHAI முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த லைப் டைம் பாஸ்கல் 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுமென்றும், இதற்கு ரூ. 30,000 கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கட்டணங்கள் மற்றும் FASTag பாஸ் சேவைகள் (New FASTag monthly and yearly pass coming soon) மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பாஸ்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள FASTag சேவையுடன் ஒருங்கிணைக்கப்படுவதினால், மக்கள் இதற்காக தனியாக எந்த பிரத்தியேகமான அட்டைகளை வாங்க வேண்டியதிருக்காது என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமான FASTag ரீசார்ஜ் போல, FASTag பயனர்கள் அவர்களுக்கு விருப்பமான பாஸ்களை ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டு பயன்படுத்தும் வகையான செயல்பாட்டு முறை நடைமுறைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
FASTag Users New NHAI Rules Coming Soon With 1 Year Pass Costs Rs 3000 and Life Time Pass Costs Rs 30000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X