'ஃபாஸ்டேக்' பயனர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்..

|

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் தொடர்பான ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை தற்பொழுது வெளியிட்டுள்ளது. பாஸ்டேக் பெயரில் நடக்கும் மோசடி பற்றிய இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமான அறிவிப்பு என்றும், பாஸ்டேக் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்த நினைக்கும் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதையும் விளக்கியுள்ளது.

Radio Frequency Identification (RFID) சார்ந்த 'ஃபாஸ்டேக்'

Radio Frequency Identification (RFID) சார்ந்த 'ஃபாஸ்டேக்'

இந்தியா முழுவதும் Radio Frequency Identification (RFID) சார்ந்த 'ஃபாஸ்டேக்' என்ற மின்னணு கட்டண வசூல் திட்டத்தைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது. இதன் அறிமுக சலுகையாக இலவச ஃபாஸ்ட்டேக்குகளை அரசாங்கம் வழங்கிவந்தது. ஆரம்பகட்டத்தில் இலவச ஃபாஸ்ட்டேக்களையும் இந்திய அரசாங்கம் வழங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது, பல தனியார் வங்கிகள் கூட இந்த பாஸ்ட்டேக்கை வழங்கி வருகிறது.

ஃபாஸ்ட்டேக் கட்டண முறை

ஃபாஸ்ட்டேக் கட்டண முறை

இந்த மின்னணு கட்டண வசூல் முறை நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட்டுவிட்டது. நாடுமுழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டண முறை நடைமுறைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் பயனர்களுக்கென்று பிரத்தியேக தனி வழியும் டோல் கேட்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் பயனர்கள் நெரிசல் இல்லாமல் இந்த வழியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சில நேரங்களில் பாஸ்ட்டேக் வரிசைகளிலும் நெரிசல்கள் காணப்படுகிறது.

23 மில்லியன் ஆண்டுகள் கடந்து வந்து பூமியில் விழுந்த சிறுகோள்.. சிறிய சைஸ் பாகம் கொடுத்த புது தகவல்..23 மில்லியன் ஆண்டுகள் கடந்து வந்து பூமியில் விழுந்த சிறுகோள்.. சிறிய சைஸ் பாகம் கொடுத்த புது தகவல்..

ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைந்தால் அபராதம்

ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைந்தால் அபராதம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவின்படி ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழையும் வாகனங்களிடமிருந்து இரட்டை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்பே கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இதற்கான அபராதமும் நாடுமுழுவதும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள ஃபாஸ்டேக் பயனர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

புதிய பாஸ்டேக் அட்டைகளை எங்கு நம்பிக்கையுடன் வாங்கலாம்?

புதிய பாஸ்டேக் அட்டைகளை எங்கு நம்பிக்கையுடன் வாங்கலாம்?

சுங்கச்சாவடியில் தவறிழைப்பவர்களைத் தடுப்பதற்காகவும், தேசிய நெடுஞ்சாலை பயணிகளிடம் ஃபாஸ்டேக் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மின்னணு அட்டைகளை நீங்கள்

புதிய பாஸ்டேக் மின்னணு அட்டைகளை நீங்கள் www.ihmcl.co.in என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வலைத்தளம் வழியாகவும் மற்றும் 'my Fastag' மொபைல் ஆப் வாயிலாகவும் பெறமுடியும்.

'ஆன்லைன்' மூலமாக கிடைக்கும் பாஸ்டேக் அட்டைகள்

'ஆன்லைன்' மூலமாக கிடைக்கும் பாஸ்டேக் அட்டைகள்

இதுதவிர பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பே-வால்லெட் வாயிலாகவும், பாஸ்டேக் அட்டைகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இடங்களில், தனியார் ஏஜெண்டுகள்

இன்னும் சில இடங்களில், தனியார் ஏஜெண்டுகள் மூலம் புதிய பாஸ்டேக் அட்டைகளை 'ஆன்லைன்' மூலமாக உடனே வழங்கப்படும் என்று அதிகளவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றது. இதை நம்பி, ஆன்லைனில் பணம் செலுத்தி புதிய பாஸ்டேக் வாங்க மக்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், இறுதியில் இவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை

இதுதொடர்பாக, பல இடங்களில் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றது. இதை தடுக்கும் விதத்தில் மக்கள் யாரும் நம்பிக்கை இல்லாத தனியார் நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது.

முறைகேடுகள் தொடர்பான புகார்

இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான புகார் அளிக்க மக்கள் அவசர கட்டுப்பாட்டு அறை எண் ஆனா '1033' என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். அதேபோல், etc.nodal@ihmcl.com என்ற வலைத்தளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
FASTag Users Alert: NHAI Announced About New Online Scam That Occurring in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X