FASTag: நவ.15 முதல் புது ரூல் அமல்.. இனி ரூ.100 இல்ல.. ரூ.200 செலுத்தனும்.. 2 மடங்கு டோல் கட்டணம் விதிப்பு!
நவம்பர் 15 முதல் இந்தியாவின் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஃபாஸ்டேக் விதிகளில் பெரிய மாற்றம் வருகிறது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அல்லது செயலிழந்த ஃபாஸ்டேக் உள்ள வாகனங்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இதை எப்படி தவிர்க்கலாம், உங்களிடம் ஃபாஸ்டேக் இருந்தால் அதில் என்ன கவனிக்க வேண்டும், இதுபோன்ற சந்தேகங்களுக்கு விவரங்கள் இதோ.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஆனது டோல் கேட்களில் வாகனங்கள் கியூ கட்டி நிற்பதை குறைக்கவும், 100 சதவீத டிஜிட்டல் டோல் வசூலுக்காகவும், டோல் கேட் வசூலில் சிக்கல்களை தவிர்க்கவும், ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதில் பணத்தை முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட வேண்டும்.

டோல் கேட்களில் வாகனம் நுழையும் போது அந்த பணம் கழித்து கொள்ளப்படும். அதேபோல வேகமாகவும் டோல் கேட்டை கடந்துவிடலாம். ஆனால், இப்போதும் ஃபாஸ்டேக் இல்லாமலேயே வழக்கம்போல கையில் இருக்கும் காசை கொடுத்தும், யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தும் டோல் கேட்களை வாகனவோட்டிகள் கடந்துவருகின்றனர். இவர்களுக்கு கூடுதல் பணம் செலவாக போகிறது.
நவம்பர் 15 முதல் அமல்
ஃபாஸ்டேக் இல்லாமல் டோல் கேட்டில் நுழைந்து, யுபிஐ பரிவர்த்தனை மூலமாக டோல் கட்டினால் 1.25 மடங்கு கொடுக்க வேண்டும். கையில் இருக்கும் ரொக்கப் பணத்தில் டோல் கட்டினால் 2 மடங்கு கொடுக்க வேண்டும். ஃபாஸ்டேக் இருந்தால், வழக்கமான டோல் கட்டணத்தை செலுத்தலாம். இந்த நடைமுறை தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மொத்த டோல் கேட்களுக்கும் அமலாகிறது.
ஃபாஸ்டேக் இல்லாதது மட்டுமல்லாமல், செயலிழந்த ஃபாஸ்டேக் வைத்திருந்தால், அதுவும் கூடுதல் கட்டணத்தை செலுத்த வழிவகுக்கும். ஆகவே, ஃபாஸ்டேக் செயலிழந்துவிட்டதா, காலாவதி ஆகிவிட்டதா அல்லது வேறு வாகனத்தின் எண்ணுக்கு ஃபாஸ்டேக் இணைக்கப்பட்டு இருக்கிறாதா என்பதை வாகனவோட்டிகள் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.
அதேபோல பழைய ஃபாஸ்டேக்கை அப்டேட் செய்து கொள்ளுங்கள். சேதமடைந்து இருந்தால், அதை சரி செய்து கொள்ளுங்கள். இதை செய்யாதபட்சத்தில் நவம்பர் 15ஆம் தேதி முதல் டோல் கேட்களில் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் உங்களிடம் ஃபாஸ்டேக் இல்லையென்றால், ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் பெறும் நடைமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.
FASTag எப்படி அப்ளை செய்வது?
1.ஆன்லைன் - மைஃபாஸ்டேக் ஆப் (MyFASTag App) வழியாக அப்ளை செய்து கொள்ளலாம்.
2.வங்கி / ஏஜென்ட் - எஸ்பிஐ ஃபாஸ்டேக், எச்டிஎப்சி ஃபாஸ்டேக், ஆக்சிஸ் ஃபாஸ்டேக், பேடிஎம் ஃபாஸ்டேக் உள்ளது.
3.டோல் பிளாசா - அனைத்து தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாகளிலும் இருக்கும் ஃபாஸ்டேக் கவுண்டர்களில் பெறலாம்.
ஆன்லைன் மூலம் ஃபாஸ்டேக் பெறுவது எளிதாக இருக்கும். முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் மைஃபாஸ்டேக் ஆப் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மொபைல் நம்பர் கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். உங்களது வாகனத்தின் ஆர்சி புக் விவரங்களை கொடுக்க வேண்டும். அதோடு வாகன போட்டோ, டாக்குமெண்ட்களை அப்லோட் செய்ய வேண்டும்.
அதேபோல ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு விவரங்களுடன் கேஓய்சி இருக்கும். அதையும் முடிக்க வேண்டும். அதன்பிறகு ஆன்லைன் பேமெண்ட் மூலம் ஃபாஸ்டேக் வாலெட்டில் பணத்தை வைத்து கொள்ளலாம். இந்த ஃபாஸ்டேக் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதை எடுத்து டோல் கேட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதே செயல்முறையை பேங்குகள் கொடுக்கின்றன.
எஸ்பிஐ, எச்டிஎப்சி போன்ற பேங்குகள் மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் ஃபாஸ்டேக் அப்ளை செய்யலாம். இதற்கும் ஆன்லைன் நடைமுறையே இருக்கிறது. டோல் பிளாசா மூலம் ஆப்லைனில் அப்ளை செய்யலாம். ஃபாஸ்டேக் கவுண்டருக்கு சென்று, ஆர்சி புக், மொபைல் நம்பர், ஆதார், பான் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








