Home
News

புதிய FASTag வருடாந்திர பாஸ்-க்கு லிமிட்.. 200 ட்ரிப்களுக்கு பின் என்ன ஆகும்?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகம் செய்துள்ள புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் (New FASTag Annual Pass) ஆனது இன்று முதல் (ஆகஸ்ட் 15 ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு "ப்ரீபெய்ட்" தீர்வை வழங்குகிறது.

ரூ.3,000 க்கு கிடைக்கும் இந்த பாஸ் வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 200 டோல் டோல் கிராசிங்குகளுக்கு (200 ட்ரிப்களுக்கு) செல்லுபடி ஆகும் அல்லது ஒரு 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும். இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதற்கு ஏற்ப இதன் வேலிடிட்டி இருக்கும்.

புதிய FASTag வருடாந்திர பாஸ்: 200 ட்ரிப்களுக்கு பின் என்ன ஆகும்?

இந்த இடத்தில் தான் பலருக்கும் ஒரு முக்கியமான கேள்வி எழும் - 200 ட்ரிப்களுக்கு அல்லது 200 டோல் கிராசிங்களுக்கு பிறகு என்ன நடக்கும்? நீங்கள் 200 ட்ரிப்களை முடித்தவுடன் பாஸ்டாக் வருடாந்திர பாஸ் ஆனது தானாகவே வழக்கமான பாஸ்டாக் முறைக்குத் திரும்பும்.

ஒருவேளை நீங்கள் வருடாந்திர பாஸ் சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால், பயனர்கள் கைமுறையாக மீண்டும் விண்ணப்பித்து, மீண்டும் ரூ.3,000 செலுத்தி புதிய வருடாந்திர பாஸ்-ஐ பெறலாம். பின்குறிப்பு: புதிய வருடாந்திர பாஸ்-ல் தானாகவே ரினியூவல் ஆகும் வசதிஎதுவும் இல்லை; பாஸ் வாங்கிய தேதியிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அது காலாவதியாகும்.

மேலும் புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ்க்கான 4 முக்கிய விதிகளும் உள்ளன. ஒன்று - புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் ஆனது தனியார் வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் இரண்டு - புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ்-ஐ ஒருமுறை இதை வாங்கிய பின்னர் மாற்ற முடியாதது மற்றும் இது பதிவு செய்யப்பட்ட ஒரு வாகனத்துடன் மட்டுமே வேலை செய்யும்.

மூன்று - புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ்-ல் ஆட்டோ -ரினியூவல் கிடையாது. அதாவது காலாவதியான பிறகு நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் நான்கு - 200 பயணங்கள் அல்லது 1 வருடம், எது முதலில் வருகிறதோ அதுவரை மட்டுமே புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் செல்லுபடியாகும்.

புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் எங்கெல்லாம் வேலை செய்யும்? எங்கெல்லாம் வேலை செய்யாது? என்எச்ஏஐ நடத்தும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் (எ.கா., டெல்லி-மும்பை விரைவுச் சாலை, மும்பை-நாசிக்) இது வேலை செய்யும். மாநில நெடுஞ்சாலைகள் அல்லது நகராட்சி சாலைகள் (எ.கா., மும்பை-புனே விரைவுச் சாலை, ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலை) ஆகியவைகளில் வேலை செய்யாது.

புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் வாங்குவது எப்படி? முதலில் ராஜ்மார்க் யாத்ரா செயலி அல்லது என்எச்ஏஐ / மோர்த் வலைத்தளத்தை அணுகவும் - உங்கள் வாகன எண் மற்றும் பாஸ்டாக் ஐடி கொண்டு லாக்-இன் செய்யவும். பின்னர் யுபிஐ, பேங்க் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.3,000 ஆன்லைன் வழியாக செலுத்தவும். அவ்வளவு தான் புதிய பாஸ் உங்கள் பாஸ்டாக் உடன் இணைக்கப்பட்டு ஆகஸ்ட் 15 அன்று செயல்படுத்தப்படும்.

இந்த புதிய வருடாந்திர பாஸ் ஆனது கடந்த 2025 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது, முன்னரே குறிப்பிட்டபடி வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரின் கூற்றுப்படி, இந்த திட்டம் ஒருவருக்கொருவர், தங்களுக்கு அருகில் அமைந்துள்ள சுங்க கட்டணச்சாவடிகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதையும், சிங்கிள் பேமண்ட் அமைப்பை அமலுக்கு கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் இந்த பாஸ் உங்கள் தற்போதைய பாஸ்டாக் உடன் இணைக்கப்படும் (அது செயலில் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்). மேலும் இந்த புதிய பாஸ் ஆனது என்எச்ஏஐ மற்றும் எம்ஓஆர்டிஎச் (MoRTH) இன் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மட்டுமே செயல்படும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X