Home
News

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. இனி வங்கி மாற்றினாலும் FASTag ஸ்டிக்கர் மாறாது.. அறிமுகமானது புது வசதி..

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) பெரிதும் பயன்படுகிறது. முன்பு சுங்கச்சாவடிகளை நாம் கடந்து செல்லும்போது வானத்தை நிறுத்தி பணமாகச் செலுத்தி மீதமுள்ள தொகை வாங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டி நிலைமையும் உண்டானது.

குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில் சுங்கச்சாவடிகளிலேயே பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பிறகு ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்த பிறகு இது முற்றிலுமாக மாறிவிட்டது. சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அனைத்து வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருந்து. இது வாகன உரிமையாளரின் வங்கி கணக்கோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. அறிமுகமானது புது FASTag வசதி..

ஆகவே சுங்கச்சாவடி கடந்து செல்லும்போது தானாகவே ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஃபாஸ்டேக் வசதி வந்தது முதல் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது பெருமளவு குறைந்து இருக்கிறது. இதன்மூலம் எரிபொருளும், நேரமும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

இந்நிலையில் ஃபாஸ்டேக் குறித்த முக்கிய தகவல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, ஒரு வங்கியில் இணைக்கப்பட்டிருந்த ஃபாஸ்டேக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டுமெனில், ஏற்கனவே பயன்படுத்திய ஃபாஸ்டேக் கணக்கை முடித்துவிட்டு புதிய ஸ்டிக்கரைப் பெற வேண்டியிருந்தது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டது. தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள அதே ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை அகற்றாமல், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கை மட்டும் மாற்றிக்கொள்ள முடியும். இதன் மூலம் புதிய ஃபாஸ்டேக் வாங்கி மீண்டும் வாகனத்தில் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லாமல், வங்கி மாற்றத்தை எளிதாக மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக இதற்கு ஒன்டேக் (OneTag) என பெயர் வைத்து FASTag portability வசதியை தான் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் (IHMCL) மற்றும் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) இணைந்து இந்த வசதியை உருவாக்கியுள்ளன.

அதுவும் செப்டம்பர் 11-ம் தேதி மும்பையில் நடைபெற்ற Global Fintech Fest நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த ஒன்டேக் வசதியை அறிமுகம் செய்தார். அதேபோல் ஃபாஸ்டேக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் சேவை பிடிக்காமல் வேறு வங்கிக்கு மாற விரும்பினால், பழைய ஃபாஸ்டேக் கணக்கை மூடிவிட்டு புதிய ஃபாஸ்டேக் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பழைய ஸ்டிக்கரை அகற்றுவது, புதிய ஸ்டிக்கரை வாங்குவது, மீண்டும் KYC செய்வது உள்ளிட்ட பல சிரமங்களை வாகன உரிமையாளர்கள் சந்தித்து வந்தனர்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் வகையில், மொபைல் எண்ணை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவது போல, இனி ஃபாஸ்டேக் கணக்கையும் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதற்காக புதிய ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கி வாகனத்தில் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

ஒன்டேக் வசதி மூலம், வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஏற்கனவே ஒட்டியுள்ள ஃபாஸ்டேக்கை அகற்றாமல், அதே Tag ID மற்றும் வாகன பதிவு எண்ணுடன் வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த ஃபாஸ்டேக் போர்ட்டபிளிட்டி செயல்முறையை Rajmargyatra செயலி மூலம் செய்யலாம். இந்த செயலியில் உள்ள ஒன்டேக் வசதியைத் தேர்வு செய்து, முதலில் தங்களுடைய ஃபாஸ்டேக் கணக்கு வேறு வங்கிக்கு மாற்றத் தகுதியானதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. அறிமுகமானது புது FASTag வசதி..

அதன்பின்பு பாதுகாப்பு சரிபார்ப்பு மற்றும் பயனரின் ஒப்புதல் பெறப்படும். தொடர்ந்து, பயனர் விரும்பும் புதிய வங்கியைத் தேர்வு செய்து, அதற்கான பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும், பழைய ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதே ஸ்டிக்கரை தொடர்ந்து பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தை செலுத்தலாம்.

ஃபாஸ்டேக்கை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிய பிறகு, பழைய வங்கியின் FASTag வாலட்டில் உள்ள பணம் மற்றும் நிலுவையில் இருக்கும் பரிவர்த்தனைகளை அந்த வங்கியே கையாளும். பாக்கித் தொகை தொடர்பான தகவல்களுக்கும் பழைய வங்கியைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும். போர்ட்டிங் முடிந்த பிறகு, புதிய ஃபாஸ்டேக்கின் பரிவர்த்தனைகளை மட்டும் புதிய வங்கி நிர்வகிக்கும். முக்கியமாக, பழைய வாலட்டில் இருக்கும் பணம் தானாகவே புதிய வங்கியின் வாலட்டுக்கு மாற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
FASTag Portability Made Easy: Switch Banks Without Changing Your Sticker
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X