கார் ஓனர்களுக்கு ரூ.1500 பாஸ்.. நவ.1 முதல் புது ரூல்ஸ்.. 20 கி.மீ. தான் லிமிட்டு.. முதல்ல இதை தெரிஞ்சிங்கோங்க!
தங்களது வீடுகளுக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு புதிய லோக்கல் பாஸ் விதிகள் (Local Pass Rules) அமலுக்கு வர இருக்கின்றன. வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதால், கார் ஓட்டுநர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் தகுதியுடைய தனியார் வாகன உரிமையாளர்கள், நவம்பர் 1ஆம் தேதி முதல் சலுகை விலையிலான வருடாந்திர ஃபாஸ்டேக் (FASTag) பெற்று கொள்ளலாம். இந்த லோக்கல் பாஸ் மற்ற வாகன உரிமையாளர்களுக்கு கிடைக்கும் விலையை விட மலிவாக இருக்கும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த பாஸ், ஒரு குறிப்பிட்ட சுங்கச்சாவடி மற்றும் வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்காக மட்டுமே பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு செல்லுபடியாகும். செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் (FASTag) உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த லோக்கஸ் பாஸ் வழங்கப்பட்டவுடன், தகுதியுள்ள ஓட்டுநர்கள் ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடியை கடக்கும்போது கட்டணம் செலுத்தாமல், குறிப்பிட்ட சுங்கச்சாவடியை பயன்படுத்தலாம். ஆண்டுக்கான கட்டணம், சுங்கச்சாவடியின் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைகளுக்கு வெளியே ரூ.1,500 ஆக இருக்கிறது.
நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைகளுக்குள் ரூ.3,000 ஆக இருக்கிறது. இந்த சலுகை விலை லோக்கல் பாஸை ஒட்டுமொத்த வாகன உரிமையாளர்களும் வாங்கிவிட முடியாது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும், வணிக நோக்கமற்ற தனியார் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மூடப்பட்ட கட்டண வசூல் முறையை (Closed Toll Collection System) பயன்படுத்தும் நெடுஞ்சாலைகள் அல்லது விரைவுச் சாலைகளில், அல்லது மாற்றுப் பாதையோ அல்லது சேவை சாலையோ பயன்பாட்டிற்கு இருக்கும் இடங்களில், இந்த லோக்கல் பாஸ் பொருந்தாது. வழக்கமாக வாகன ஓட்டிகள் மாதந்தோறும் ரூ.360 கட்டணத்தில் லோக்கல் பாஸை வாங்கலாம்.
இது ஓராண்டுக்கு ரூ.4,320 ஆக இருக்கிறது. இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு இந்த செலவு ரூ.1,500 அல்லது ரூ.3,000 ஆக குறைய இருக்கிறது. நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை பொறுத்தவரை, வழக்கமாக வாங்கும் வருடாந்திர பாஸை விட ரூ.2820 வரையில் கம்மியாக வாங்கி கொள்ள முடியும்.
ஆகவே, இந்த லோக்கல் பாஸை பெறும் தகுதியாக இருக்கும் வாகன உரிமையாளர்கள் முதலில் தங்களது ஃபாஸ்டேக் (FASTag) செயலில் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். அதோபோல அது தங்களது வாகனத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். பிறகு பாஸிற்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ Rajmargyatra Mobile App வழியாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம். ஆன்லைனில் வாங்க தெரியாதவர்கள் அல்லது சிக்கல் இருப்பின், உங்களுக்கு அருகில் உள்ள சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி (Toll Plaza) அலுவலகத்திற்கு நேரடியாக சென்றும் பெறலாம்.
ஆகவே, 20 கீ.மீ தொலைவுக்குள் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அடிக்கடி சுங்கச்சாவடி வழியாக செல்ல வேண்டி இருந்தால், நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து லோக்கல் பாஸ் பெற்று கொள்ளலாம். வணி நோக்கத்துடன் கார்களை ஓட்டினால் இந்த பாஸ் கிடைக்காது. தனிப்பட்ட வாகன தேவைக்கு மட்டுமே இந்த பாஸ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
