FASTag இருக்கா? பிப்.17 முதல் புது ரூல்ஸ்.. டபுள் கட்டணம் வேண்டாமா? அப்போ இதை 60 நிமிடத்திற்குள் செய்யணும்..
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), பிப்ரவரி 17, 2025 ஆம் தேதி முதல், FASTag பயனர்களுக்கான புதிய விதிமுறைகளை (New FASTag rules from February 17, 2025) நடைமுறைப்படுத்துகிறது. டோல் பிளாஸாவுக்குள் (Toll Plaza) நீங்கள் நுழையும் போது, உங்கள் ஃபாஸ்ட்டேக் (FASTag) அட்டையில் போதுமான பேலன்ஸ் (FASTag balance) இல்லையென்றால், பயனர்களுக்கு தங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் வழங்கப்படும். இல்லையெனில், இரு மடங்கு டோல் கட்டணத்தை (double charges in Toll gate) செலுத்த வேண்டும் என்று புதிய FASTaf ரூல்ஸ் தெரிவிக்கிறது.
FASTag என்பது 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தானியங்கி முறையாகும். இது வாகனங்கள் டோல் ப்ளாஸாக்களை நிறுத்தாமல், கட்டணம் செலுத்தி கடந்து செல்ல அனுமதிக்கிறது. இது இணைக்கப்பட்ட முன்பணம் செலுத்தும் கணக்கிலிருந்து டோல் கட்டணத்தை கழிக்கும். இருப்பினும், FASTag அட்டையில் இருக்கும் பேலன்ஸ் தொகையை பராமரிக்க பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள். இதனால் டோல் ப்ளாஸாக்களில் தாமதங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன.

FASTag இருக்கா? பிப்.17 முதல் புது ரூல்ஸ்.. டபுள் கட்டணம் வேண்டாமா?
இதை சரிசெய்ய, NHAI இந்த புதிய விதிமுறையை பிப்ரவரி 17, 2025 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துகிறது. டோல் பிளாஸாவுக்குள் நுழையும் போது, உங்கள் FASTag-ல் போதுமான இருப்பு இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அப்படி, போதிய பேலன்ஸ் இல்லாமல் டோல் கேட்டிற்குள் நுழைந்துவிட்டால் இரு மடங்கு கட்டணங்கள் இதுவரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை மற்றும் விதமாக புதிய விதிமுறை செயல்படுகிறது.
FASTag கணக்கில் இருப்பு இல்லாமல், டோல் பிளாசாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு இனி ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் வழங்கப்படும் என்று புதிய விதிமுறை கூறுகிறது. இப்போது இரட்டிப்பு கட்டணங்களை உடனே வசூலிப்பதற்கு பதிலாக, NHAI உங்களுக்கு 60 நிமிட கால அவகாசத்தை வழங்குகிறது. FASTag பேலன்ஸ் இருப்பு இல்லாமல் டோல் கேட்டில் இருக்கும் வாகனங்களின் FASTag கணக்கு லோ-பேலன்ஸ் கார்டு என்று அடையாளம் குறிக்கப்படும்.
60 நிமிட கால அவகாசம்.. உடனே ரீசார்ஜ் செய்யுங்க:
60 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் ஒரு SMS அல்லது மொபைல் ஆப்ஸ் நோட்டிபிகேஷனை நீங்கள் பெறுவீர்கள். உடனே ரீசார்ஜ் செய்து கட்டணத்தை செலுத்தினால், வழக்கமான டோல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ஒருவேளை 60 நிமிடங்களுக்குள் இதைச் செய்யத் தவறினால், வெளியேறும் போது டோல் கட்டணத்தை இரு மடங்கு செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, உண்மையான டோல் ரூ. 100 ஆக இருந்தால், ஒரு மணி நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், உங்களிடமிருந்து ரூ. 200 வசூலிக்கப்படும். டோல் ப்ளாஸாக்களுக்குள் நுழைவதற்கு முன்பு டிரைவர்கள் போதுமான இருப்புத் தொகையை பராமரிப்பதை உறுதிப்படுத்தி, நெரிசலைக் குறைப்பதே இந்த விதியின் நோக்கமாக இருக்கிறது. இந்த புதிய விதிமுறை அணைத்து டோல்களிலும் பிப்ரவரி 17, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டபுள் கட்டணம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
FASTag பயனர்கள் கூடுதல் கட்டணங்களை தவிர்ப்பதற்கு, பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் வழங்குநரின் மொபைல் செயலி அல்லது வலைத்தளத்தைப் பயன்படுத்தி உங்கள் FASTag இருப்புத் தொகையை எப்போதும் சரிபார்ப்பது பாதுகாப்பானது. அதேபோல், லோ-பேலன்ஸ் இருக்கும் போது தானாகவே மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளும். ஆட்டோமேட்டிக் ரீசார்ஜ் அம்சத்தை ஆக்டிவ் செய்து வைத்துக்கொள்வதும் பாதுகாப்பானது. லோ-பேலன்ஸ் குறித்து SMS அறிவிப்புகள் வந்தால், உடனே ரீசார்ஜ் செய்யவும்.


Click it and Unblock the Notifications