FASTag கதை முடிந்தது.. இனி GPS மூலம் சுங்க கட்டணம் வசூல்.. அதிரடி மாற்றத்திற்கு நீங்க ரெடியா?
ஃபாஸ்ட்டேக் (FASTag) பயனர்களின் கவனத்திற்கு, வரவிருக்கும் மாதங்களில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட விரைவில் ஜிபிஎஸ் (GPS) டோல் கட்டண முறை பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. இது வந்தவுடன் ஃபாஸ்ட்டேக் முறைக்கு மொத்தமாக முட்டுக்கட்டை போடவுள்ளது இந்திய அரசு.
வரவிருக்கும் மாதங்களில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஜிபிஎஸ் (GPS) அடிப்படையிலான கட்டண வசூலை தொடங்க உள்ளது. சாலைகள் அமைச்சகத்தின் செயலாளரான அனுராக் ஜெயின் கருத்துப்படி, வரவிருக்கும் புதிய ஜிபிஎஸ் அமைப்பு நாடு முழுவதும் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் சோதனைக் (testing) கட்டத்திற்கு உட்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) டோலிங், தற்போதைய FASTag முறைக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ளது. ஆம், ஜிபிஎஸ் முறை பயன்பற்றிக்கு வந்தவுடன் ஃபாஸ்ட்டேக் முறை முடக்கம் செய்யப்படும். FASTag என்பது இந்தியாவில் NHAI ஆல் இயக்கப்படும் மின்னணு கட்டண வசூல் அமைப்பாகும். இப்போது பெரும்பாலான வாகனங்களில் இந்த ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர்கள் (FASTag stickers) ஒட்டப்பட்டுள்ளது.
குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் டோலிங் (Global Positioning System tolling):
இது ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்கள், ப்ரீபெய்ட் (prepaid) அல்லது வங்கி சேமிப்புக் கணக்குடன் (saving bank accounts) இணைக்கப்பட்ட அல்லது நேரடியாக டோல் உரிமையாளரிடம் இருந்து கட்டணத்தை செலுத்த முடிந்தது. ஜிபிஎஸ் டோல் அமைப்பின் (GPS toll system) நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு ஒரு விரிவான ஆய்வு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
ஜிபிஎஸ் டோல் கட்டண முறையின் மென்பொருளின் (software) வளர்ச்சி மற்றும் சுங்கவரி வசூலிப்பதற்கான தேவையான தொழில்நுட்பம் (technology) இந்த அம்சத்தில் இருக்கிறது. குறிப்பாக, இதில் உள்ள முக்கிய சிறப்பம்சமே நெடுஞ்சாலைகளில் இனி சுங்கச்சாவடியே (toll gates) தேவைப்படாது. ஜியோபென்சிங் (geo-fencing) செயல்படுத்தி, வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிறுத்தம் செய்யாமல், கட்டணங்களை வசூலிக்க முடியும்.

இந்த புதுமையான அமைப்பின் முதன்மை நோக்கம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பிஸிக்கல் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவதன் (removing toll gates in India) மூலம் சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைப்பதாகும். சில வாகனப் பயனர்கள் (Vehicle users) பயணித்த சரியான தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் என்பதனால், இந்த முறை சிறந்ததாக கருத்தப்படுகிறது.
இருப்பினும், வாகனங்களின் துல்லியமான இருப்பிடத்தை இது ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பதால், தனியுரிமைக் (privacy) கவலைகளை வெளிப்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஜிபிஎஸ் டோல் கட்டண முறையை பைலட் சோதனையாக குறிப்பிட்ட சில இடங்களில் NHAI விரைவில் சோதனை செய்யவுள்ளது. இதற்கான சாப்ட்வேர் இப்போது வளர்ச்சி கட்டத்தில் உள்ளது.
GPS டோல் கட்டண முறை எப்படி செயல்படுகிறது? (How GPS Toll Collections System Works):
இந்த புதிய ஜிபிஎஸ் முறைப்படி, பழைய வாகனங்களில் மக்கள் புதிய ஜிபிஎஸ் கருவியை (GPS device) பொருத்த வேண்டும். புதிய வாகனங்களில் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் சாதனங்களுடன் வருகிறது என்பதனால் தனியாக ஜிபிஎஸ் சாதனங்களை மக்கள் பொறுத்த தேவையில்லை. ஜியோ-ஃபென்சிங் இடங்களுக்குள் வாகனம் உள்நுழைந்து வெளியேறும் பொழுது கட்டணம் தானாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, NHAI மற்றொரு மாற்று அணுகுமுறையையும் ஆய்வு செய்து வருகிறது என்று கூறப்படுகிறது. இதில் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் வாகன நுழைவு மற்றும் வெளியேறும் முறை கண்காணிக்கப்படும். ஆனால், இங்கு GPS சாதனங்களுக்கு பதிலாக, சுங்கவரி வசூல் செய்ய அனுமதிக்கும் தானியங்கி நம்பர் பிளேட் முறையை NHAI பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் பாஸ்ட்டேக் கதை முடியப்போகிறது என்பது மட்டும் தெளிவாகக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








