Home
News

FASTag KYC Update: இறுதி காலக்கெடு தேதி மாறியது.. இன்னும் எக்ஸ்ட்ரா டைம் இருக்கு.. உடனே இப்படி செய்யுங்க..

இரவோடு இரவாக மாறிய FASTag இறுதி காலக்கெடு. ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்ட்டேக் (OneVehicle OneFASTag) திட்டத்திற்கான இறுதி காலக்கெடு மற்றும் புதிய FASTag சேவைக்கான KYC அப்டேட்டிற்கான இறுதிகாலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. FASTag பயனர்கள் கொஞ்சம் நிதானமாக இந்த பதிவை படியுங்கள்.

புதிய தகவலின்படி, ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்ட்டேக் (OneVehicle OneFASTag) திட்டத்திற்கான இறுதி காலக்கெடு மற்றும் புதிய FASTag சேவைக்கான KYC அப்டேட்டை செய்து முடிக்க வழங்கப்பட்ட இறுதி காலக்கெடு பிப்ரவரி 29, 2024 ஆக மாற்றப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த தகவலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ளது.

FASTag KYC Update: இறுதி காலக்கெடு தேதி மாறியது.. இன்னும் டைம் இருக்கு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), ஏற்கனவே FASTag எனப்படும் மின்னணு கட்டண வசூல் அமைப்பை இந்தியா முழுக்க அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த FASTag முறைப்படி, கேஷ்லெஸ் பரிவர்த்தனைகள் மூலம் மிகவும் வேகமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்காமல் குறைந்த நேரத்தில் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்ட்டேக் திட்டம் (OneVehicle OneFASTag Plan):

இருப்பினும், பல FASTag பயனர்களிடம் ஒன்றல்லது, இரண்டிற்கு மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் பொழுது, ஒரே FASTag அட்டையை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி வருவது தவறானது என்று NHAI அறிவித்தது. இதனால், சமீபத்தில் 'ஒரு வாகனம் - ஒரு FASTag' திட்டத்தை NHAI அறிமுகப்படுத்தியது. இதற்காக சில அறிவிப்புகளை NHAI வெளியிட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஃபாஸ்டேக் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது, சுங்கச்சாவடிகளின் வசூல் திறனை அதிகரிப்பது உட்பட பல முக்கியமான நோக்கங்களுக்காக கட்டாய KYC அப்டேட் தேவை என்று NHAI அறிவித்தது. ஆகையால், RBI வழிகாட்டுதல்களின்படி அணைத்து FASTag பயனர்களுக்கு KYC விபரங்களை முடிக்க உத்தரவிடப்பட்டது. மீறுபவர்கள், FASTag சேவை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தது.

FASTag KYC Update: இறுதி காலக்கெடு தேதி மாறியது.. இன்னும் டைம் இருக்கு

KYC அப்டேட்டிற்கான இறுதி காலக்கெடுவாக ஜனவரி 31, 2024 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் அனைத்து FASTag பயனர்களும் தங்கள் Fasttag KYC தகவலை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. Fasttag இல் இருப்பு இருந்தாலும் கணக்கு செயலிழக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இறுதி காலக்கெடு மீண்டும் ஒரு முறை மாற்றப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 29, 2024 ஆம் தேதிக்குள் அணைத்து FASTag பயனர்களும் KYC அப்டேட்டை கட்டாயம் நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று NHAI அறிவித்துள்ளது. இன்னும் உங்கள் FASTag அட்டையை நீங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால், உடனே வாகன ஓட்டுநர் அடையாள அட்டை, வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC), ஆதார் அட்டை அல்லது முகவரி ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளீர்கள்.

FASTAG KYC விபரங்களை அப்டேட் செய்வது எப்படி (How To Update Your FASTag KYC Details):
- FASTAG அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- FASTag உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP மூலம் லாகின் செய்யவும்.
- டாஷ்போர்டு மெனுவை கிளிக் செய்யவும்.
- பின்னர் KYC டேப்பை கிளிக் செய்யவும்.

- KYC அப்டேட்டிற்கு தேவையான தகவலை உள்ளிடவும்.
- பின்னர் இறுதியாக சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் Fasttag KYC அப்டேட் முடிந்தது என்று காண்பிக்கப்படும். இதை வரும் பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டுமென்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
FASTag KYC Update Last Due Date Changed To February 29 How To Update FASTag KYC Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X