Home
News

ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறுது.. கார், ஜீப், வேன் ஓனர்களுக்கு அதிகம் செலவாகும்.. ஃபாஸ்டாக் விலை உயர்வு..

புதிய நிதியாண்டு (2026-27) தொடங்கவிருக்கும் நிலையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஓட்டுநர்களுக்குப் பணவீக்கத்தின் ஒரு சிறிய தாக்கத்தைக் கொடுக்கத் தயாராகியுள்ளது. அதாவது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI ) ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

புதிய விதிமுறை

குறிப்பாக இந்த புதிய விதிமுறை 2026 ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அமலப்படுத்தப்படுகிறது. அதாவது அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் கார் மற்றும் இலகுரக வாகன உரிமையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்டாக் ஆண்டு சந்தா விலை உயர உள்ளது. அதாவது பழைய கட்டணம் ரூ.3000-ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3075 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறுது.. ஃபாஸ்டாக் விலை உயர்வு..

இந்த ஃபாஸ்டாக் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. ரூ.3075 கட்டணத்தைச் செலுத்தினால் ஓராண்டு காலத்திற்குள் அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கலாம். அதுவும் இது வணிக ரீதி அல்லாத சொந்த உபயோக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டண உயர்வுக்கு காரணம் இதுதான்

அதுவும் ஒவ்வொரு ஆண்டும் பண வீக்கத்திற்கு ஏற்ப சுங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான நிதி தேவை, கட்டுமான விலைகளின் உயர்வு மற்றும் இதர செலவுகள் தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். குறிப்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த உயர்வு கணக்கிடப்படுகிறது.

அதேபோல் நீங்கள் ஏற்கனவே ஆண்டு சந்தா வைத்திருப்பவர் என்றால் மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பிப்பதன் மூலம் பழைய விலையிலேயே (ரூ.3,000) பலன்களைப் பெறலாம். இதுதவிர உங்களது FASTag கணக்கில் KYC விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கட்டண உயர்வு அமலுக்கு வரும்போது போதிய பேலன்ஸ் இல்லாமல் இருந்து சுங்கச்சாவடியைக் கடந்தால் அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பாக NHAI வலைத்தளத்தைப் பயன்படுத்தி FASTag வருடாந்திர பாஸை வாங்க முடியும். அதாவது அதிகாரப்பூர்வ NHAI வலைத்தளத்திற்குச் சென்று பதிவு செய்யப்பட்ட விபரங்களுடன் லாகின் செய்யவும். அடுத்து வருடாந்திர பாஸ் செக்ஷனை கண்டறியவும். அதில் வாகனம் மற்றும் FASTag விவரங்களை உள்ளிட்டுப் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் பணம் செலுத்திய பிறகு வாகனத்துடன் தொடர்புடைய FASTag-ல் வருடாந்திர பாஸ் ஆக்டிவாகி இருக்கும்.

இதுதவிர ராஜ்மார்க் யாத்ரா ஆப் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்து, வருடாந்திர பாஸ் செக்ஷனை தேர்ந்தெடுத்து பணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறுது.. ஃபாஸ்டாக் விலை உயர்வு..

மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விலைகள் மற்றும் கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. பணம் செலுத்துவதற்கு முன்பு பயனர்கள் அதிகாரப்பூர்வ தளங்களில் விவரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில நாட்கள் மட்டுமே உள்ளன

இந்த FASTag விலை திருத்தம் அமலுக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பயனர்கள் தற்போதைய ரூ. 3,000 கட்டணத்தை உறுதி செய்வதற்காக தங்களுடைய வருடாந்திர பாஸை முன்கூட்டியே ஆக்டிவேட் அல்லது புதுப்பிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
FASTag annual pass price increases from April 1: check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X