Home
News

புது வருடம் எக்ஸ்ட்ரா செலவு.. கார், ஜீப், வேன் இருக்கா.. இதை பண்ணா ரூ.15-க்கு முடிஞ்சிரும்.. இல்லனா, சிரமம்!

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் (FASTag Annual Pass) ஆனது ரூ.15 விலைக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல் கேட்டை (Toll Gate) கடக்க வைப்பதால், அறிமுகப்படுத்தப்பட்ட 3 மாதங்களுக்குள் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இப்படி 200 முறை டோல் கேட்டை வாகன ஓட்டிகள் கடந்து செல்லலாம்.

இந்த வருடாந்திர பாஸ் வாங்கிய வாகன ஓட்டிகள் அக்டோபர் மாதத்தில் 14 லட்சம் ட்ரிப்களை செய்திருந்தனர். ஆனால், நவம்பர் மாதத்தில் இருந்து சராசரி ட்ரிப்கள் 16 லட்சமாக அதிகரித்துள்ளது. இது மொத்த தேசிய நெடுஞ்சாலை பயணங்களில் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. வருடாந்திர பாஸின் மொத்த பயன்பாட்டில் சுமார் 11 சதவீதத்தை எட்டி இருக்கிறது.

புது வருடம் எக்ஸ்ட்ரா செலவு.. கார், ஜீப், வேன் இருக்கா.. இதை பண்ணா?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் ரூ.3,000 விலைக்கு கிடைத்தது. இந்த ஃபாஸ்டேக் வைத்திருக்கும் வாகன ஓட்டிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல் கேட்களில் 200 ட்ரிப்களை செய்து கொள்ளலாம். ஆகவே, ஒரு முறை டோல் கேட்டை கடந்து செல்ல வெறும் ரூ.15 மட்டுமே செலவாகிறது.

இது வழக்கமான டோல் கேட் கட்டணத்தைவிட மிகவும் மலிவாக கிடைக்கிறது. இதனாலேயே, வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் மும்முரமாக வாங்கி வருகின்றனர். கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு மட்டுமே வருடாந்திர பாஸ் கொடுக்கப்படுகிறது. வணிக வாகனங்கள் மற்றும் டாக்சிகள் போன்ற வாகனங்களுக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை.

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வாங்குவது எப்படி?

1. ராஜ்மார்க்யாத்ரா செயலி (Rajmargyatra app) மூலம் வருடாந்திர பாஸை பெறலாம். இது பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. அதேபோல என்எச்ஏஐ (NHAI) இணைய தளம் மூலமாகவும் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் பெற்று கொள்ளலாம். ராஜ்மார்க்யாத்ரா செயலியை ஓப்பன் செய்து ஆட் பாஸ் (Add Pass) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

2. உங்களது வானத்தின் ஆர்சி புக் விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் கேட்கப்படும். அதேபோல மொபைல் நம்பர், ஆதார் போன்ற விவரங்களும் கேட்கப்படும். இந்த விவரங்களை கொடுத்த பிறகு ஓடிபி (OTP) அனுப்பி வைக்கப்படும். அதை கேட்கும் இடத்தில் கொடுத்த பிறகு உங்களது வாகனம் மீதான வெரிபிகேஷன் செயல்முறை தொடங்கும்.

3. இந்த வெரிபிகேஷன் முடிந்த பிறகு ரூ.3,000 பணத்தை செலுத்த வேண்டும். இதை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் அல்லது நெட்பேங்க் மூலமும் செய்து கொள்ளலாம். இந்த பேமெண்ட் உறுதியான பிறகு உங்களது வாகனத்துக்கான ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். 2025-26 போன்ற வேலிடிட்டி குறிப்பிடப்படும்.

4. இந்த செயல்முறை மற்றும் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் ஆக்டிவேட் 2 மணி நேரத்துக்குள் முடிக்கப்படும். இது தேசிய நெடுஞ்சாலை (National Highway) மற்றும் தேசிய விரைவுச்சாலை (National Expressway) ஆகியவற்றில் செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலைகள் (State Highways), விரைவுச்சாலைகள் (State Expressways) போன்றவற்றில் சாதாரண பாஸ் போலவே செல்லுபடியாகும்.

ஆகவே, கட்டணங்கள் விதிக்கப்படலாம். இந்த ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு 1 வருடத்துக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இதற்குள் 200 ட்ரிப்களை வாகன ஓட்டிகள் செய்து கொள்ளலாம். முன்கூட்டியே முடித்துவிட்டால், மீண்டும் பாஸ் பெற வேண்டி இருக்கும். அதேபோல 1 வருடத்துக்கு மேல் மீதமிருக்கும் ட்ரிப்கள் காலாவதியாகும்.

5. ஒருமுறை ஃபாஸ் பெற்ற பிறகு அதை வேறு வாகனத்துக்கு மாற்ற முடியாது. வாகனத்தின் விண்ட்ஷீல்டில் பாஸ் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த ஃபாஸ்டேக் வாகனத்தின் பதிவு எண் (Vehicle Registration Number) முக்கியமாகும். சேசிஸ் நம்பர் மட்டுமே இருந்தால் போதாது. ஒரு ரவுண்ட் ட்ரிப் இரண்டாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அப் அண்ட் டவுன் போல கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
FASTag Annual Pass 200 Trips at Rs 15 Per Toll Usage Reaches 12 Percent Within 3 Months
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X