17 நிமிடத்தில் 4000mAh பேட்டரியை சார்ஜ் செய்யும் டெக்னாலஜி!

|

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே போகும் நிலையில் ஸ்மார்ட்போன் செயல்பட முக்கிய தேவையான சார்ஜ் ஏற்றும் திறன் வேகமாகிறதா என்றால் அது கேள்விக்குறியே! ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற ஒருசில நிறுவனங்கள் மட்டுமே வேகமாக சார்ஜ் ஏற்றும் திறனுள்ள பேட்டரிகளை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு செல்போன்களில் வைத்துள்ளனர்.

ஆனால் இன்னும்

ஆனால் இன்னும் பல நிறுவனங்கள் இந்த விஷயத்தில் பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சியாமி நிறுவனம் சார்ஜ் ஏற்றும் திறனில் ஒரு புதிய தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்யவுள்ளது

தலைவர் லூ வெப்பிங்

தலைவர் லூ வெப்பிங்

சீன நிறுவனமான சியாமி, மிக வேகமாக பேட்டரியை சார்ஜ் ஏற்றும் புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இந்த டெக்னாலஜி மூலம் 50 வாட் திறனில் மிக வேகமாக மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏற்றிவிடலாம் என்றும் இப்படி ஒரு வசதி வந்துவிட்டால் மொபைல் போன் பயனாளிகளுக்கு சார்ஜ் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த சார்ஜ் செய்யும் திறனை சியாமி நிறுஅனம் ஓப்போ நிறுவனத்தின் சூப்பர் சார்ஜருடன் ஒப்பீடு செய்து நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சியாமி நிறுவனத்தின் தலைவர் லூ வெப்பிங் என்பவர் வேகமாக சார்ஜ் ஏறுவது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு வந்தது ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் முழுத்தகவல்கள்.!விற்பனைக்கு வந்தது ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் முழுத்தகவல்கள்.!

இதுவரை

இதுவரை ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஏற்றுவதில் இந்த அளவுக்கு வேகமாக சார்ஜ் ஏற்றும் திறன் கொண்ட சார்ஜர் வெளியாகவில்லை என்பதும் சியாமியின் இந்த சார்ஜ் தொழில்நுட்பமே உலகின் முதன்மையானதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4000mAh பேட்டரி

கடந்த ஜூன் மாதம் விவோ நிறுவனம் தனது புதிய சார்ஜிங் டெக்னாலஜி குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் 120 திறன் கொண்ட சார்ஜரை மிக வேகமாக சார்ஜ் செய்யும் திறனை நிரூபித்தது. இந்நிறுவனம் அதிவேகமாக சார்ஜ் செய்யும் 100 வாட் சார்ஜ் செய்யும் திறனுள்ள சார்ஜரை அறிமுகம் செய்து, இதன்மூலம் 4000mAh பேட்டரியின் முழு சார்ஜை வெறும் 17 நிமிடங்களில் ஏற்றிவிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் நிருப்பிக்கும் வகையில் 4000mAh பேட்டரியின் பாதி அளவு சார்ஜை வெறும் ஐந்தே நிமிடங்களில் செய்து காட்டியுள்ளது. அதேபோல் 51 முதல் 100 சதவிகித சார்ஜ் செய்வதை எட்டு நிமிடங்களில் முடித்து காட்டியுள்ளது

அதே நேரத்தில்

ஆனால் அதே நேரத்தில் இந்த டெக்னாலஜியுடன் கூடிய சார்ஜரின் விபரங்கள் குறித்தோ இதன் வசதிகள் குறித்தோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் இந்த டெக்னாலஜி அறிமுகமாகும் தேதி குறித்த விபரமும் இல்லை. அனேகமாக அடுத்த ஆண்டு இந்த டெக்னாலஜி அறிமுகம் செய்யப்படலாம் என கருதப்படுகிறது

எனவே இப்போதைக்கு

எனவே இப்போதைக்கு நம் கையில் அதிவேக சார்ஜ் செய்யும் டெக்னாலஜி நம் கையில் இல்லை என்றாலும் மிக விரைவில் இந்த டெக்னாலஜி எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Fast Charger Gets Phone's 4000mAh Battery From 0 To 100% In 17 Mins, But Still Not Fastest Ever : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X