ஒரே ஆண்டில் ரூ.335 கோடி வருமானம்- பட்டையை கிளப்பும் விவசாயி: லைவ் ஸ்ட்ரீம் மூலம் நேரடி விற்பனை!
தொலைதூர மாகாணங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் நகர்ப்புற நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் வகையில் லைவ் ஸ்ட்ரீம்கள் மற்றும் டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பொருட்களை விற்று வருகிறார்கள். சீனாவில் சில காலங்களுக்கு முன்பு வறுமையில் வாடிய விவசாயிகள் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தை பயன்படுத்தி அதிகளவு வருமானம் ஈட்டி வருகின்றனர்.

ரூ.335 கோடி வருவாய்
யுன்னான் மாகாணத்தில் பிறந்தவர் ஜின் குவேய், இவர் பல்வேறு கடன் தொல்லையில் சிக்கி யுன்னானின் லிஜியாங் வீதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு பழங்கள் விற்க தொடங்கியுள்ளார். இந்தநிலையில் இவர் இணையத்தில் Brother Pomegranate என்ற பக்கத்தை தொடங்கி பழங்களுக்கு மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் 7.3 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். மேலும் இதன்மூலம் இவர் 300 மில்லியன் அதாவது 46 மில்லியன் டாலர் இந்திய மதிப்புப்படி ரூ.335 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்கள்
இவரை போலவே பலர் கிராமங்களில் இருந்தபடியே பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை இணையம் மற்றும் செயலி மூலமாக விற்பனை செய்து இணைலாபம் ஈட்டி வருகின்றனர். ஜின் குவேய், ஒருமுறை 6 மில்லியன் யுவான் மதிப்புள்ள மாதுளை பழங்களை 20 நிமிடங்களில் விற்றுள்ளார். இது பலரையும் வியப்படைய வைத்த நிகழ்வாகும்.

15 மடங்கு வருவாய் அதிகரிப்பு
சீனாவில் கிராமப்புற தொழில்முனைவோரின் வளர்ந்து வரும் போக்கு பலரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. தொலைதூர மாகாணங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் லைஸ் ஸ்ட்ரீமக்கள் மற்றும் பைட்-சைஸ் வீடியோ மூலமாக விற்பனை செய்வதன் மூலம், 15 மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது என டிக்டாக் செயலியின் பைட் டான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லைவ் ஸ்ட்ரீமுக்கு 50,000 ஆர்டர்கள்
இதேபோல் மற்றொரு விவசாயி ஆன குவோ செங்செங் இணைய விற்பனையில் பட்டையை கிளப்பியுள்ளார். இவர் தனது 2.5 மில்லியன் டூயின் ரசிகர்களிடம் பயிர்கள் அறுவடை செய்யும் வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து உரையாடுகிறார். இவரது திரையில் உள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அவரது விளை பொருட்களை வாங்கலாம். இதேபோல் முன்னதாக இவர் வீச்சாட் தளத்தில் டென்சென்ட் ஹோல்டிங் லிமிடெட் வணிகர் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு நூறு ஆர்டர்களை பெற்றுள்ளார். தற்போது அவர் ஒரு லைவ் ஸ்ட்ரீமுக்கு 50,000 ஆர்டர்களை எடுத்துக் கொள்கிறார். ஒரு மாதத்திற்கு குறைந்த 9 மில்லியன் யுவான் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

தொற்று பரவல் காரணமாக புலம் பெயரும் தொழிலாளர்கள்
தொற்று நோய் அதிகரிப்பின் காரணமாக 23 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரில் தங்கும் நிலை ஏற்பட்டது. நாட்டின் போக்குவரத்து அமைப்பு நிறுத்தப்பட்டது. விவசாய விளைபொருட்கள் கிடப்பில் போட்டு சேமிக்கும் நிலை ஏற்பட்டது. அதேபோல் நுகர்வோர்களும் வீட்டிலேயே இருந்து அதிகமாக சமைக்கும் நிலை ஏற்பட்டது. ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களுக்கான தேவை அதிகரித்தது. இது சிறுஅளவிலான விவசாயிகளையும் தொழில்முனைவோராக மாறுவதோடு நுகர்வோருக்கு குறைந்த கட்டண முறைக்கும் வழிவகுத்தது.

ஸ்ட்ரீமிங் செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவில் ஒளிபரப்பப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. அலிபாபா குழுமத்தின் டாவோபாவ் லைவில் 100,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2.52 மில்லியன் முறை ஸ்ட்ரீம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 2019-20 ஆம் ஆண்டில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

அதிகரிக்கும் ஆர்டர்கள் மற்றும் ஈர்ப்பான வாடிக்கையாளர்கள்
தங்கள் விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாயிகள் ஜேடி லாஜிஸ்டிக்ஸ் அல்லது அலிபாபாவின் கைனியோ போன்ற பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களை நம்பியிருக்கின்றன. நேரடியாக டெலிவரி செய்வது என்பது பல சிக்கல்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குளிரூட்டும் அம்சம், சேதமடைந்ததாக புகார் அளிக்கும் நுகர்வோர்கள் என பல சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகரிக்கும் ஆர்டர்கள் மற்றும் ஈர்ப்பான வாடிக்கையாளர்கள் லாபங்கள் சிக்கல்களை ஈடு செய்ய உதவுவதாக கூறப்படுகிறது.

2025 ஆண்டில் அதிகளவு அதிகரிக்கும் ஸ்ட்ரீமர்கள்
கிராமப்புற இ-காமர்ஸ் திறமை 2025 ஆண்டில் 3.5 மில்லியன் மக்களாக 61.3% அதிகரிக்கும் என சீன வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். விவசாயிகள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் அதிக மார்ஜின் அடையமுடியும் என கூறப்படுகிறது.
File Images
Source: bloomberg.com
Video Courtesy: Bloomberg Quicktake


Click it and Unblock the Notifications