ஆடு உடலில் மஸ்க் தலை! 30 அடியில் சிலை உருவாக்கிய ரசிகர்கள்.. இதில் இவ்வளவு ரகசியமா?

|

உலகின் பணக்காரர் பட்டியலில் டாப் இடத்தை பிடித்திருக்கும் எலான் மஸ்க்கிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பிற பணக்காரர்களுக்கு வழங்கப்படுவது போன்ற விளக்கம் இவருக்கு தேவையில்லை. காரணம்ஸ ஏதாவது ஒருவகையில் மாத்திற்கு ஒருமுறை உலகளவில் செய்தி வடிவில் உலா வந்துக் கொண்டிருப்பவர் இவர். அதோடு ட்விட்டரில் துடிப்பான இளைஞர்களின் கேள்விக்கு பாகுபாடின்றி பதில் அளிப்பதில் வல்லவர்.

சேட்டைக்காரர் எலான் மஸ்க்

சேட்டைக்காரர் எலான் மஸ்க்

சேட்டைக்காரர் என்று குறிப்பிடுவதற்கு ஏற்பவே இவரது நடவடிக்கையும், செயலும், பதிலும் இருக்கும். பொதுவாக ஒரு பிரபல நிறுவனத்தை ஒருவர் வாங்கும்பட்சத்தில் அதில் மாற்றம் செய்வது வழக்கம். படிப்படியாகவும் சைலண்டாகவும் மாற்றம் செய்வது தான் இயல்பு. ஆனால் இங்கே இருப்பவர் எலான் மஸ்க் அல்லவா. இதிலும் இவரது நடவடிக்கை ஓபனாகவும் அதிரடியாகவும் இருக்கிறது.

ரசிகர்கள் பட்டாளம் அதிகம்

ரசிகர்கள் பட்டாளம் அதிகம்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய உடன் இவர் எடுத்த நடவடிக்கை உலகம் அறிந்த விஷயம் ஆகும். நடவடிக்கை மட்டுமல்ல இவரது கனவும் அப்படி தான் இருக்கிறது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புதல், மனித மூளையில் சிப் பொருத்ததல் போன்று பல்வேறு கனவுகளை கொண்டு செயல்பட்டு வருகிறார். இதனால்தானோ என்னவோ இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

30 அடி நீளமுள்ள எலான் ஆடு சிலை

30 அடி நீளமுள்ள எலான் ஆடு சிலை

இந்த நிலையில் எலான் மஸ்க்கிற்கு பரிசளிக்க முடிவெடுத்த அவரது ரசிகர்கள் மஸ்க் சிலையை வித்தயாசமாக வடிவமைத்து இருக்கின்றனர். இந்த சிலையானது 30 அடி நீளமும் 5 அடி 9 அங்குல உயரமும் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் இந்த சிலையானது அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கிறது. மஸ்க் இன் தலை மற்றும் ஆட்டின் உடல் உடன் இவரது சிலை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஆட்டு உடல் உடன் இருக்கும் எலான் மஸ்க் இன் சிலை ராக்கெட் மீது அமர்ந்தபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மஸ்க்கிற்கு பெரிய பரிசை உருவாக்கிய ரசிகர்கள்

மஸ்க்கிற்கு பெரிய பரிசை உருவாக்கிய ரசிகர்கள்

இந்த சிலை "எலான் ஆடு" என அழைக்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் $6,000,000 ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்புப்படி இந்த சிலையின் விலை (சுமார் ரூ.4.8 கோடி) ஆகும். எலான் மஸ்க்கிற்கு அவரது ரசிகர்கள் ஒரு பெரிய பரிசை தயாரித்து இருக்கின்றனர்.

சிலையை உருவாக்கியது யார்?

சிலையை உருவாக்கியது யார்?

இந்த சிலைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் என்ற இரண்டு கனேடிய சிற்பிகள் இதை உருவாக்கி இருக்கின்றனர். எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் இந்த சிலையை வழங்க திட்டமிட்டிருக்கின்றனர்.

வெற்றிகரமான தோல்வி

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார்.

டெஸ்லா வெற்றி

டெஸ்லா வெற்றி

டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார்.

புகழின் உச்சியில் எலான் மஸ்க்

புகழின் உச்சியில் எலான் மஸ்க்

ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு மோசான முடிவுகளின் காரணமாக டெஸ்லாவை விற்க முடிவு செய்த எலான் மஸ்க், அதே நிறுவனத்தை முன்னேற்றி காண்பித்தார். இப்படி பல புகழ் எலான் மஸ்க்கிற்கு உண்டு.

Best Mobiles in India

English summary
Fans Made 30 Feet Elon Goat Statue at Rs.5 Crore: Elon Musk Head with Goat body! Here the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X