எலான் மஸ்க்கை வம்புக்கு இழுக்கும் பிரபல தமிழ் நடிகர்! சம்பவம் இருக்கு! என்ன சொன்னார் தெரியுமா?

|

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடன் ப்ளூ டிக் சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தார். ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக இருப்பவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலருக்கும் ட்விட்டரில் ப்ளூடிக் அந்தஸ்து வழங்கப்படுவது வழக்கம். இந்த சேவைக்கு திடீரென மஸ்க் கட்டணம் அறிவித்ததும் பலரும் கடுப்பாகி இருக்கின்றனர். இதில் ஒருவராக தனது கருத்தைத் தெரிவித்தவர் தான் இந்த பிரபல தமிழ் நடிகர்.

தொடர் மாற்றங்களை சந்திக்கும் ட்விட்டர்

தொடர் மாற்றங்களை சந்திக்கும் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதலே அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக ட்விட்டரின் சிஇஓ-வாக இருந்த இந்தியரான பராக் அகர்வாலை அவர் பணி நீக்கம் செய்து அறிவித்தார். ட்விட்டரின் தலைமைப் பொறுப்புக்கு புதிய அதிகாரிகளையும் அவர் நியமித்து வருகிறார்.

இதுதான் பிஸ்னஸ் பாஸ்..

இதுதான் பிஸ்னஸ் பாஸ்..

ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க், ட்விட்டரின் ப்ளூ டிக் ஆப்ஷனை பெறுவதற்கு அனைத்து பயனர்களும் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். அதாவது இந்திய மதிப்புப்படி மாதம் ரூ.660 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் பலரும் ஆச்சரியமடைந்தாலும் சிலர் அவரும் அதிகத் தொகை கொடுத்து ட்விட்டரை வாங்கி இருக்கிறார் போட்ட பணத்தை எடுப்பதுதானே பிஸ்னஸ் என குறிப்பிடுகின்றனர்.

வம்புக்கு இழுக்கும் தமிழ் நடிகர்

வம்புக்கு இழுக்கும் தமிழ் நடிகர்

மாதம் ரூ.660 என்பது அதிகத் தொகை என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரபல தமிழ் நடிகரான சிபி சத்யராஜ் எலான் மஸ்க்கை டேக் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். எலான் மஸ்க் Verified Badge கட்டண முறை குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் அதில் ஒருவராக சிபி சத்யராஜ் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் சரி, அந்த கட்டணம் எங்கே?

இதெல்லாம் சரி, அந்த கட்டணம் எங்கே?

விமர்சனங்களை முன்வைக்கும் பலருக்கும் பதிலளிக்கும் வகையில் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். அதில் அனைத்து புகார்தாரர்களுக்கும், உங்கள் புகார்களை தெரிவிக்கலாம் ஆனால் இதற்கு கட்டணம் 8 டாலர் என பதிவிட்டார். இதை டேக் செய்து தான் நடிகர் சிபி சத்யராஜ் ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.

சம்பவம் இருக்கு

எலான் மஸ்க் ட்வீட்-க்கு நடிகர் சிபி சத்யராஜ் அளித்த பதிலில், உங்கள் Gpay number எனக்கு அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் சமீபத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற பதிவிடும் ஒருசில ட்வீட்டிற்கு எலான் மஸ்க் வேடிக்கையாக பதில் அளிப்பது வழக்கம். அதன்படி ஒருவேளை நடிகர் சிபி சத்யராஜ் ட்விட்டிற்கு மஸ்க் பதிலளிக்கும் வகையில் இது மிகப்பெரிய சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பின்வாங்கி மீண்டும் களமிறங்கிய மஸ்க்

முன்னதாக பின்வாங்கி மீண்டும் களமிறங்கிய மஸ்க்

உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வும் ஆன எலான மஸ்க், ட்விட்டரை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். பின் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த தகவலை நிர்வாகம் முறையாக வழங்கவில்லை என மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின் வாங்கினார். மஸ்க் ட்விட்டரை குறைந்த விலையில் வாங்குவதற்காக இப்படி செய்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது.

சரியான நேரத்தில் ட்விட்டரை வாங்கிய மஸ்க்

சரியான நேரத்தில் ட்விட்டரை வாங்கிய மஸ்க்

மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதை அடுத்து அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் மஸ்க் மீண்டும் ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்தார். மறுபுறம் நீதிமன்றமும் அக்டோபர் 27க்குள் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. சரியாக அக்டோபர் 27 மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறைவேற்றி அதை வாங்கியும் இருக்கிறார்.

பறவைக்கு சுதந்திரம் கொடுத்த மஸ்க்

பறவைக்கு சுதந்திரம் கொடுத்த மஸ்க்

ட்விட்டரை நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் அதாவது ரூ.3,52,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மஸ்க் உறுதி செய்தார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் தற்போது முக்கியம் எனவே ட்விட்டரை வாங்கினேன் என மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு காரணமாக குறிப்பிட்டார். அதோடு இனி பறவை சுதந்திரமாக பறக்கும் எனவும் மஸ்க் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Famous Tamil actor who teased Elon Musk: Asking G-Pay Number Directly to Musk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X