கர்நாடக மாநிலம்: ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்தில் ஏ.சி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர். கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மரிய மானஹள்ளியை சேர்ந்தவர் வெங்கட் பிரசாந்த் (வயது 42). அவர் தனது மனைவி சந்திரகலா (38), மகன் ஆத்விக் (6) மகள் பிரேரனா (8) ஆகியோருடன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கினார்.

பின்பு நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென ஏ.சி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. குறிப்பாக வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து ஏரிந்ததுடன் அறைகளில் புகை சூழ்ந்தது. மேலும் இதில் சிக்கி வெங்கட் பிரசாந்த் அவருடைய மனைவி லட்சுமி மற்றும் அந்த இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தீயணைப்பு படையினரும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்பு அந்த 4 பேரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு, விஜயநகர அரசு பொது மருத்துவமனைக்கு பிரதே பிரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல் இந்த
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் ஏசியை வீடுகளில் பயன்படுத்துவோர் அவற்றை அடிக்கடி பராமரிப்பது அவசியம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஏசியை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவற்றின் பரமாரிப்பு சார்ந்த விளக்கங்களை பார்ப்போம்.

குறிப்பாக இதற்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ்பெற்ற முறையான ஸ்டேபிலைசேர் பயன்படுத்த வேண்டும். பின்பு குளிர் காலத்தில் பெரிதாக பயன்படுத்தாத
ஏ.சியை சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்தல் வேண்டும்.

அதேபோல் அதிக மின்சார வாட்ஸ் தாங்கக்கூடிய தரமான பிளக், சுவிட்ச், கேபிள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. மேலும் அறையின் அளிவிற்கு ஏற்ற செயல் திறன் கொண்ட ஏ.சி யை பயன்படுத்துதல் வேண்டும். அதாவது 100 சதுர அடிக்கு 1டன், அதற்கு மேல் ஒன்றரை டன், பெரிய அறைக்கு 2 டன் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஏ.சி பயன்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் விலை குறைந்த மலிவான தரமற்ற ஸ்டேபிலைசேர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் அறையில் ஒரே நேரத்தில் ஏசி-யையும் மின்விசிறியையும் இயக்கக்கூடாது. ஒருவேளை மின்கசிவால் புகை வந்தால் பதட்டமடையாமல் ஜன்னல்,கதவுகளை திறந்துவிட வேண்டும்.

குறிப்பாக ஏசி-யில் ஏதேனும் பிரச்சனை எனத் தோன்றினால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். பின்பு ஏ.சி பொருத்தும் அறையில் சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. அந்த மாதிரி இருந்தால் நீங்கள் அறையில் திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். சூரிய ஒளி அறைக்குள் இருந்தால் ஏ.சி குளிர்ச்சி அடைய சிறிது நேரம் பிடிக்கும். அதோடு கரண்ட் அதிகம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications