Home
News

கிளிக் செஞ்சிடாதீங்க.. எக்காரணத்தை கொண்டும் இந்த 7 WhatsApp மெசேஜ், SMS-களை தொட்டுறாதீங்க.. இல்லனா?

செக்யூரிட்டி நிறுவனமான மெக்கஃபே (McAfee) நடத்திய குளோபல் ஸ்கேம் மெசேஜ் என்கிற ஆய்வானது (Global Scam Message Study) பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின்படி ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் கிட்டத்தட்ட 12 போலி மெசேஜ்களை (Fake Messages) பெறுகிறார்கள்.

மேலும் இந்த ஆய்வானது, வாட்ஸ்அப் (WhatsApp), எஸ்எம்எஸ் (SMS), இமெயில் (email), சோஷியல் மீடியா (Social Media) போன்ற தளங்களின் வழியாக பரவும் போலியான செய்திகளை 82% இந்தியர்கள் கிளிக் செய்து இருக்கிறார்கள் அல்லது இதுபோன்ற மோசடிகளில் சிக்கி இருக்கிறார்கள் என்றும் கூறுகிறது.

இந்த 7 WhatsApp மெசேஜ், SMS-களை கிளிக் செஞ்சிடாதீங்க!

இந்த ஆய்வின் முக்கிய நோக்கமே ஸ்மார்ட்போன் பயனர்களை (Smartphone Users) எச்சரிப்பதே ஆகும். மெக்கஃபேவின் இந்த சமீபத்திய ஆய்வானது, ஒரு ஸ்மார்ட்போனை ஹேக் செய்யும் நோக்கத்தின் கீழ் அல்லது ஆன்லைன் வழியாக பணத்தை திருடும் நோக்கத்தின் கீழ் அனுப்படும் வாட்ஸ்அப் மெசேஜ் அல்லது எஸ்எம்எஸ்களில் இடம்பெறும் 7 ஆபத்தான வரிகளை பட்டியலிட்டுள்ளது.

01. நீங்கள் ஒரு பரிசை வென்றுள்ளீர்கள் (You've won a prize): சம்பந்தமே இல்லாமல்.. வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு இலவச பரிசை வென்று உள்ளீர்கள்.. அதை பெற உடனே குறிப்பிட்ட விவரங்களை பகிரவும் அல்லது கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் என்று கூறும் எல்லா மெசேஜ்களுமே போலியான மெசேஜ்கள் தான். இது உங்களை பற்றிய தகவல்களை அல்லது உங்கள் பணத்தை திருடுவதற்கான நோக்கத்தினை கொண்டுள்ளது.

இந்த 7 WhatsApp மெசேஜ், SMS-களை கிளிக் செஞ்சிடாதீங்க!

02. நெட்பிளிக்ஸ் (அல்லது இதேபோன்ற மற்ற ஓடிடி) சந்தாக்களுக்கான அப்டேட்கள்: ஓடிடி தளங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதால், ஸ்கேமர்கள் நெட்பிளிக்ஸ் அல்லது பிற ஓடிடி சந்தாக்களை சுற்றிய போலி மெசேஜ்களை அனுப்பி ஸ்மார்ட்போன் பயனர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். இலவச சலுகை அல்லது இலவச சந்தா எனக்கூறும் எந்தவொரு மெசேஜையும் கிளிக் செய்ய வேண்டாம்.

03. நீங்கள் வாங்காத ஒரு பொருள் அல்லது கொள்முதல் பற்றிய தகவல்: நீங்கள் ஆர்டர் செய்யாத அல்லது கொள்முதல் செய்யாத ஒரு பொருளை பற்றிய எந்தவொரு அப்டேட்டும் மோசடியே ஆகும். அத்தகைய மெசேஜ்களை கிளிக் செய்யும் பட்சத்தில், அது உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக் செய்யலாம்.

இந்த 7 WhatsApp மெசேஜ், SMS-களை கிளிக் செஞ்சிடாதீங்க!

04. போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அல்லது சலுகைகள் (Fake Job Notifications or Offers): இது மற்றொரு ஆபத்தான மெசேஜ் வகையாகும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், வேலை வாய்ப்புகள் வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் வழியாக வராது. எந்தவொரு தொழில்முறை நிறுவனமும் இதுபோன்ற தளங்களின் வழியாக உங்களை அணுகாது, எனவே 99% இதுவொரு மோசடியாகவே இருக்கும்.

05. யுஆர்எல் உடனான பேங்க் அலெர்ட் செய்திகள் (Bank alert messages with URL): கீழே உள்ள யுஆர்எல் மூலம் கேஒய்சி-ஐ முடிக்குமாறு பயனர்களை கேட்கும் பெரும்பாலான பேங்க் அலெர்ட் மெசேஜ்கள் போலியான மெசேஜ்களாகவே உள்ளன. இது உங்கள் பணத்தை திருடுவதை நோக்கமாக கொண்டிருக்கும்.

06. போலியான மிஸ்டு டெலிவரி அல்லது டெலிவரியில் பிரச்சனை (Fake missed delivery, or delivery problem) போன்ற அறிவிப்பு: நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு டெலிவரி தவறவிட்டது அல்லது டெலிவரியில் சிக்கல் உள்ளது என்பது பற்றிய எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ்களை தப்பித்தவறி கூட தொட வேண்டாம்.

07. அமேசான் செக்யூரிட்டி அலெர்ட் (Amazon security alert) அல்லது அமேசான் அக்கவுண்ட் அப்டேட் தொடர்பான அறிவிப்புகள்: நம்மில் பலரும் அமேசானை பயன்படுத்துகிறோம், அதற்கென அமேசான் அக்கவுண்ட் ஒன்றையும் கொண்டுள்ளோம். அது தொடர்பான பாதுகாப்பு எச்சரிக்கை அல்லது உங்கள் அக்கவுண்டில் அப்டேட் என வரும் மெசேஜ்களை கூட உங்களுக்கான பொறிகளாகும். அதில் சிக்கிவிட வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fake Whatsapp SMS Dont Click 83 Percent Indians Affected Study
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X