வாட்ஸ்அப் மெசேஜ்களை மத்திய அரசு கண்காணிக்கிறதா?- இனி மூன்று டிக்., இரண்டு ப்ளூ, ஒன்று ரெட் டிக்?
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் தகவல்களை மத்திய அரசு கண்காணிப்பதாக தகவல்கள் உலா வருகிறது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் ஒரு மெசேஜ் அனுப்பும் போது., அந்த மெசேஜ் சென்றுவிட்டது என்பதை உறுதி செய்ய ஒரு டிக் காண்பிக்கப்படும். மேலும் அந்த மெசேஜ்சை அவர்கள் படித்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்ய இரண்டு ப்ளூடிக் காண்பிக்கப்படும். அதேபோல் வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் (அமைப்பு)-க்குள் சென்று அக்கவுண்ட் ஆப்ஷனுக்குள் சென்று பிரைவசி தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில் இருக்கும் ரீட் ரிசிப்ட்ஸ் என்ற ஆப்னை ஆஃப் செய்யும் போது நீங்கள் பிறர் அனுப்பிய மெசேஜ்களை படிக்கும் போதும் இரண்டு வெள்ளை டிக் மட்டுமே காண்பிக்கப்படும்.

வாட்ஸ்அப் முறையில் மாற்றம்
மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைவிட தற்போது வாட்ஸ்அப் முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது. அதேபோல் அனுப்பிய மெசேஜ்களுக்கு இரண்டு ப்ளூ டிக் மற்றும் ஒரு ரெட் டிக் காண்பிக்கப்பட்டால் அந்த குறுந்தகவலுக்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் உலா வருகிறது. அதேபோல் மூன்றும் ரெட் டிக் வந்தால் அரசு சட்டப்படி வழக்கு தொடர்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் உரையாடல்கள்
வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிப்பதாகவும், ப்ளூடிக் ரெட் டிக் காண்பிக்கப்படும் என பரவும் தகவலில் துளியும் உண்மை இல்லை எனவும் இதுபோன்ற தகவல் பலமுறை பரவி இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இதுபோன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் இதுபோன்ற போலி செய்திகளை பரப்புவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் உயரிழப்பு ஏற்படும் வரை ஆபத்துகள் இருக்கிறது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரசு கவனிக்கும் வாட்ஸ்அப் உரையாடல்கள்
வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிக்கிறது என பரவும் தகவல் பயனர்களிடையே பெரிதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் ஒருபோதும் மூன்று டிக்களை காட்டவில்லை. பரவும் தகவலில் மூன்று டிக் முறை விரைவில் செயல்படுத்தப்படும் போன்ற பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. பரவும் தகவல் போலியானது எனவும் இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கைவிடப்பட்டுள்ளது. ஒரு தகவலை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக்கும் வரை ஒரு செய்தி அல்லது ஒரு தகவலை நம்ப வேண்டாம் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இந்த விதிகளை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் புதிய விதிகள்
இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளை செயல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பேஸ்புக், கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், திடீர் திருப்பமாக பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

புதிய விதிகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்
மெசேஜிங் செயலிகளை தகவலை முதலில் உருவாக்கியவரை கண்டறிய நிர்பந்திக்கும் விதிகளை, தனியுரிமைக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும், இந்த விதிகள் வாடிக்கையாளர்களின் பிரைவசிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் புதிய விதிகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷனுக்கு விரோதமானது எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








