Fake! உண்மை பரவுது பொய் பறக்குது: Covid XBB அறிகுறி என பரவும் போலி மெசேஜ்.. உண்மை என்ன?

|

சமூகவலைதளங்களில் பல்வேறு உண்மையான மற்றும் பயனுள்ள தகவலை அறிந்துக் கொள்கிறோம். ஆனால் இந்த உண்மை தகவல்களுடன் பல போலி தகவலும் உலா வந்துக் கொண்டிருக்கிறது. எது உண்மை எது பொய் என்று அறிவதே பெரும் சிக்கலமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு போலி தகவல் வாட்ஸ்அப் இல் பரவத் தொடங்கி இருக்கிறது.

கொரோனாவில் இருந்து ஏறத்தாழ மீண்டு வந்து விட்டோம் என்று சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. மீண்டும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொரோனா பரவல் பழைய நிலையை எட்டத் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

உண்மை பரவுது பொய் பறக்குது: Covid XBB அறிகுறி என பரவும் போலி மெசேஜ்!

சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகவும் 5000 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் புதுடெல்லியில் நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பலர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நாடுகளின் நிலவரம் மற்றும் உள்நாட்டு நிலவரம் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகள் படுக்கை வசதிகள், மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவைகள் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் விளக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது எல்லாம் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க மறுபுறம் கொரோனா பரவல் குறித்த போலி தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவத் தொடங்கிவிட்டது. குறிப்பாக வாட்ஸ்அப் இல் இதுகுறித்த போலி செய்திகள் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன் இருக்கும் அனைவரிடமும் கண்டிப்பாக Whatsapp இருக்கிறது. பிரபல செய்தி பகிர்வு தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. எந்தளவிற்கு உண்மையான மற்றும் பயனுள்ள செய்திகள் வாட்ஸ்அப் இல் கிடைக்கிறதோ அந்தளவிற்கு போலி செய்திகளும் வேகமாக பரவுகிறது. அதன்படி தற்போது Omicron இன் XBB துணை வகை டெல்டாவை விட ஆபத்தானது என ஒரு தகவல் பரவி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டெல்டா வைரஸை விட புதிய மாறுபாடு ஆபத்தானது என்று மக்களை பயமுறுத்தும் வகையில் புதிய போலி செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Omicron இன் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட Covid XBB மாறுபாடு ஐந்து மடங்கு ஆபத்தானது எனவும் டெல்டா மாறுபாட்டை விட அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது எனவும் இந்த போலியான WhatsApp செய்தி எச்சரிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் இதன் அறிகுறிகள் இவைதான் எனவும் குறிப்பிட்டு இந்த போலி செய்திகள் பரவி வருகின்றன.

இதுபோன்ற போலி செய்திகளை மக்கள் நம்பவும் வேண்டாம் பிறருக்கு பரப்பவும் வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு தொகுத்து வழங்கும் முறையான வழிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவவேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

வாட்ஸ்அப் நிறுவனமும் இதுபோன்ற போலி தகவல் பரவல்களை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாதந்தோறும் நடவடிக்கை எடுத்து அதுகுறித்த மாதாந்திர இணக்க அறிக்கையையும் வாட்ஸ்அப் வெளியிட்டு வருகிறது. நிறுவனம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்தந்த நேரத்தில் எது பிரபலமாக இருக்கிறதோ அதுகுறித்து போலி செய்திகளும், ஸ்பேம் தகவலும் பரவி வருகிறது. எனவே இதுபோன்ற குறிப்பிட்ட விஷயங்களில் நாமும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

Best Mobiles in India

English summary
Fake messages circulating on WhatsApp as a symptom of Covid XBB: Be careful

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X