இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை "வாட்ஸ்அப்" செயல்படாது., மாதம் ரூ.500 கட்டணம்- உண்மை என்ன?

|

வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த முடியாது என்ற தகவல் பெரிதளவு பரவி வருகிறது. இந்தியாவில் இரவு நேரங்களில் வாட்ஸ்அப் செயல்படாது எனவும் இந்த செயலி இரவு 11:30 மணி முதல் காலை 6:00 மணி வரை பயன்பாட்டில் இருக்காது என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பரவும் செய்தியில் இந்த தகவலை பெற்றவுடன் பார்வேர்டு செய்யவில்லை என்றால் அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் செய்யப்படும் எனவும் கணக்கை மீண்டும் இயக்க வேண்டும் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பரவும் போலி தகவல்

பரவும் போலி தகவல்

இந்த தகவலை மதித்து பார்வேர்ட் செய்தவர்களுக்கு இதே செயலியின் புதிதான பாதுகாப்பானுடன் கூடிய கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும் எனவும் தகவல்கள் குறிப்பிடப்படுகிறது. வாட்ஸ்அப் 23:30 மணி முதல் காலை 6:00 மணி வரை முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் செயலி ஆனது இரவு 11:30 மணி முதல் காலை 6:00 மணி வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கான சேவைகள் நிறுத்தி வைப்பு

பயனர்களுக்கான சேவைகள் நிறுத்தி வைப்பு

பயனர்களுக்கான சேவைகளை நிறுத்தி வைக்க இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இணையதளத்தில் செய்தி பரவி வருகிறது. இதை பகிராமல் இருக்கும் பட்சத்தில் கணக்கு செயலிழக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதை செய்யாமல் தவறும் பட்சத்தில் தங்கள் கணக்கு பயன்பாட்டில் இருக்காது எனவும் கணக்கை மீண்டும் செயல்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

தவறான தகவல்களை பகுப்பாய்வு செய்யும் பிஐபி

தவறான தகவல்களை பகுப்பாய்வு செய்யும் பிஐபி

தவறான தகவல்களை பகுப்பாய்வு செய்யும் பிரஸ் இந்தியா ஆஃப் பீரோ (பிஐபி) மூலம் உண்மை தகவலை வெளியிட்டுள்ளது. இது போலி தகவல் என நிராகரிப்பு செய்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி #WhatsApp இரவு 11:30 முதல் காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்க வேண்டாம் என்ற செய்தியை அனுப்பவில்லை மற்றும் செயல்படுத்த மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் கூறப்படுகிறது.

போலி செய்தி பரவல்

போலி செய்தி பரவல்

டுவிட்டரில் பிஐபி., "#PIBFactCheck: இந்த தகவல் தவறானது எனவும் மத்திய அரசு அத்தகைய உத்தரவை வழங்கவில்லை" என கூறப்படுகிறது. சமூகவலைதளமான வாடஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்கள் அக்டோபர் 4 ஆம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோளாறுகளை சந்தித்ததை அடுத்து இந்த போலி செய்தி பரவி வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய பயன்பாடுகள் சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பவை ஆகும். இந்த செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று செயலிகளும் அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் இருந்து அடுத்த சில மணி நேரங்களுக்கு உலகம் முழுவதும் செயலிழந்த நிலையில் இருந்தது. இது இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வி என வலைதள கண்காணிப்பு குழு தெரிவித்தது.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறை செயலழிந்த தளங்கள்

ஒரே வாரத்தில் இரண்டாவது முறை செயலழிந்த தளங்கள்

அதேபோல் அக்டோபர் 9 ஆம் தேதி சில பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர் இரண்டாவது முறையாக சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. இதை பேஸ்புக் இன்க் உறுதிப்படுத்தியது. சில பயனர்கள் அதன் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை அணுகவதில் சிக்கல் இருந்தது. சமூக வலைதள நிறுவனம் அதன் தரவு மையங்களில் நெட்வொர்க்கின் வழக்கமான பராமரிப்பின் போது ஏற்பட்ட பிழையால் ஆறு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டை அணுக முடியவில்லை என தெரிவித்தனர்.

சிக்கலை சந்தித்த ஏணைய பயனர்கள்

சிக்கலை சந்தித்த ஏணைய பயனர்கள்

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்களை நெட்டிசன்கள் தொடர்ந்து பகிர்ந்தனர். இணைய கண்காணிப்பு குழு டவுன்டெடெக்டர், புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராமில் 36000-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கல்களை சந்தித்தாக அளிக்கப்பட்ட புகார்களை சுட்டிக் காட்டியது. அதேபோல் பேஸ்புக் மெசேஜிங் தளத்தில் 800-க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் பதிவாகியுள்ளதாகவும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Fake Message Spreads through Whatsapp About Whatsapp Prohibited in India at Night time

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X