Home
News

போலீசையே ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த போலி "பேஸ்புக்" ஐபிஎஸ் அதிகாரி.!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பார்கள் என்று ஒரு பிரபல வசனம் தமிழில் உண்டு. இந்த வசனத்திற்கு ஏற்றாற்போல் பல சம்பவங்கள் பல இடங்களில் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

போலீசையே ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த போலி

யாரேனும் ஏமாற்றப்பட்டால் அவர்களை சட்டத்தின் கீழ் நிறுத்த காவல்துறை அதிகாரிகளை நாடுகிறோம். தகுந்த நடவடிக்கை இல்லாத பொது காவல்துறையில் உள்ள உயரதிகாரிகளை நாடுகிறோம். அப்படிப்பட்ட உயரதிகாரியே போலியாக இருக்கும் பட்சத்தில் என்னதான் செய்வது.

போலி உயரதிகாரி

போலி உயரதிகாரி

சாமானியர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தீர்ப்பு வழங்க வேண்டிய காவல்துறை உயரதிகாரியே போலியாக இருந்து, சாமானியர்களை மட்டுமின்றி, காவல்துறை அதிகாரி, அரசாங்கம் என அனைவரையும் பள்ளிபடிப்பைக் கூட முழுதாய் நிறைவேற்றாதவெறும் 20 வயதேநிறைந்த இளைஞன் ஏமாற்றி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்திருப்பது இதுவே முதல் முறை.

டெல்லியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி?

டெல்லியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி?

குஜராத் பகுதியைச் சேர்ந்த அபய் மீனா, வயது 20. ஊருக்குள் எங்குச் செல்வதாக இருந்தாலும் தன்னை டெல்லியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரியாகச் சித்தரித்துக் கொண்டு, மூன்று நட்சத்திரம் பொருந்திய போலி காவல்துறை வாகனத்தில் பல இடங்களுக்குச் சென்று பலரை ஏமாற்றியது மட்டுமில்லாமல், சிறப்பு விருந்தினராகவும் பல விழாக்களில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து ராஜ வாழ்கை வாழ்ந்துள்ளான்.

சிறப்பு நிகழ்ச்சியில் விஐபி

சிறப்பு நிகழ்ச்சியில் விஐபி

இதில் அதிக சுவாரசியம் என்னவென்றால், உண்மையான காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட அதே நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு அருகில் அமர்ந்து உற்சாகமாக போஸ் கொடுத்துப் பல விழாக்களையும் இவன் சிறப்பித்துள்ளான். இன்னும் சொல்லப்போனால் பல தனியார் கல்லூரிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் தன்னம்பிக்கை பேச்சாளராகக் கலந்து பல விழாக்களையும் சிறப்பித்துள்ளான்.

சந்தேகம் வர இதுதான் காரணம்

சந்தேகம் வர இதுதான் காரணம்

இவ்வளவு துணிச்சலாக நம்பிக்கையுடன், சுற்றித் திருந்த இந்த போலி ஐபிஎஸ் அதிகாரியின் மேல், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினருக்குச் இப்பொழுது சந்தேகம் வரக் காரணம் என்ன? முதல் காரணம் அவன் பயன்படுத்தி வந்து மூன்று நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட போலி காவல்துறை வாகனம். இரண்டு அவனின் வயது மற்றும் அவன் பயன்படுத்திய போலி ஐ.பி.எஸ் அடையாள அட்டையிலிருந்த எளிய பிழைகள்.

மூணு ஸ்டார் செஞ்ச வேலை இதுதான்

மூணு ஸ்டார் செஞ்ச வேலை இதுதான்

முதலில் மூன்று நட்சத்திரங்கள் கொண்ட சிறப்பு அந்தஸ்து அரசு வாகனங்கள், டி.ஜி மற்றும் ஏ.டி.ஜி உயரதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். முக்கியமாக 20 வயதுக்குட்பட்ட எந்த காவல்துறை அதிகாரிக்கும், இதுவரை இந்த அந்தஸ்து வழங்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இவன் மீது சந்தேகம் வர முதல் காரணம்.

ஒழுங்கா பள்ளிக்கூடம் போகலான இப்படித்தான் ஆகும்

ஒழுங்கா பள்ளிக்கூடம் போகலான இப்படித்தான் ஆகும்

பிறகு அவன் அடையாள அட்டையில் காணப்பட்ட மிக எளிய பிழைகள், Crime Branch என்பதற்கு Crime Branche என்று தவறான எழுத்துக்களுடன் பதிவிடப்பட்டிருந்திருக்கிறது. அதேபோல் Capital என்பதற்குப் பதிலாக Capitol என்று பிழையுடன் பதியப்பட்டுள்ளதை ஒரு அதிகாரி கவனித்துள்ளார். அதன் பின் எழுந்த சந்தேகத்தின் பெயரில் துவக்கப்பட்ட விசாரணையில், அபய் மீனா ஒரு போலி ஐபிஎஸ் அதிகாரி என்பது உறுதிப்படுத்தப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான்.

பைசா வசூல் செய்து ராஜ வாழ்க்கை

பைசா வசூல் செய்து ராஜ வாழ்க்கை

போலி ஐபிஎஸ் அதிகாரியான இவன் பல கட்டப்பஞ்சாயத்துகளில் தலை நுழைத்து, தீர்ப்பு வழங்குவது போல் பலரிடம் பணத்தை அபகரித்து ஏமாற்றியுள்ளான். பல தங்கும் விடுதி, கிளப் ஹவுஸ், பப் என்று அனைத்து இடங்களிலும் காசு செலவில்லாமல் உல்லாசமாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி பேஸ்புக் பாத்துட்டா இவன நம்புனீங்க!

போலி பேஸ்புக் பாத்துட்டா இவன நம்புனீங்க!

காவல்துறை அதிகாரிகளே பல விழாக்களில் இவனை நம்பியதற்குக் காரணம், இவன் பேஸ்புக் பதிவுகளில், இவன் பதிவு செய்திருந்த சில போலி புகைப்படங்கள் தான், அதேபோல் பல நிகழ்ச்சிகளில் பல மேடைகளில் மற்ற சிறப்பு விருந்தினர்களுடன் இவன் சிறிது பேசிய வீடியோ பதிவுகள் என அனைத்தும் தான் இவனை உண்மையான உயரதிகாரி என்று நம்ப வைத்துள்ளது. எப்படியோ பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல், ஒருவழியாக தற்பொழுது இவனைப் போலி அதிகாரி என அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Fake IPS Officer Arrested In Jaipur By SOC Officers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X