கேமராவுக்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்
ஆன்லைன் பொருட்கள் ஆர்டர் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாறி வருகிறது. முந்தைய காலத்தில், ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நேரில் சென்று அதன் தரம் பார்த்து மற்ற பொருட்களோடு ஒப்பிட்டு வாங்குவது வழக்கம்.

அந்த காலம் மலையேறிவிட்டது
அதேபோல் கடைத்தெருவுக்கு செல்வது என்றால் அது ஒரு தனி மகிழ்ச்சிதான். குடும்பத்தோடு, நண்பர்களோடு கடைத்தெருவுக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு ஏதாவது ஓட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு மகிழ்வோடு வரும் காலம் மலையேறிவிட்டது.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஆன்லைன் டெலிவரி
இந்த காலக்கட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்குவதே பழக்கமாக இருந்து வருகிறது. புகைப்படத்தை பார்த்து மட்டுமே பொருட்கள் வாங்கப்படுகிறது. அதிலும் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடியும் அறிவிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதளவு கவரப்பட்டு ஆன்லைனை நோக்கியே செல்கின்றனர்.

அசல் போன்று போலி
இந்த நிலையில் பிளிப்கார்ட்டில் பொருள் ஆர்டர் செய்த பெங்களூரு வாசி ஒருவருக்கு அசல் போன்றே போலி பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அது உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் 90,000 ரூபாய் மதிப்பிலான பொருள்.

மிகப்பெரிய ஏமாற்றம்
பெங்களூரைச் சேர்ந்த ரஜனி காந்த் குஷ்வா என்பவர் பிளிப்கார்ட்டில் இருந்து ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோவை ஆர்டர் செய்தார். அவர் போனுக்கான முழுத் தொகையையும் (தள்ளுபடியுடன் சுமார் ரூ .93,900) செலுத்தியிருக்கிறார். தனது நீண்ட நாள் கனவான ஐபோனின் வருகைக்கு காத்திருந்த அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

கேமராவிற்கு பதில் ஸ்டிக்கர்
ஐபோன் பாக்ஸ்ஸை திறந்த ஐபோன்னை பார்க்கும்போது இது ஐபோன் அல்ல அசல் மாதிரியான போலி என்பதை கண்டுபிடித்துள்ளார். ஐபோன் ப்ரோ பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா இருப்பது வழக்கம். அதேபோல் இதிலும் மூன்று பின்புற கேமரா இருந்துள்ளது. ஆனால் பின்புறத்தில் ஒரு கேமராவும் மற்ற இரண்டு கேமராவும் ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஐபோன்னில் ஆண்ட்ராய்டு செயலி ரன் ஆகி உள்ளதை கண்டு வியந்துவிட்டார்.

அதிர்ச்சி அடைந்த நபர்
இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ரஜனி, உடனடியாக பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். புகாரை உறுதி செய்த பிளிப்கார்ட் விரைவில் போனை மாற்றி தருவதாக உறுதி அளித்துள்ளது.

வெறும் பெட்டி டெலிவரி
அதேபோல் பிளிப்கார்ட்டில் இந்த மாத தொடக்கத்தில் கண்ணூரைச் சேர்ந்த விஷ்ணு சுரேஷ் என்பவர் ரூ.27000 மதிப்பிலான கேமராவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரி ஆனது வெறும் அட்டைப்பெட்டி அதனுள் கேமரா கெய்ட் புக் மட்டுமே. இதுகுறித்தும் புகார் அளிக்கப்பட்டது.
Source: bgr.in


Click it and Unblock the Notifications