"'இதுதான்" போலி சார்ஜர் கேபிள்: டேட்டாக்கள் திருட்டு-உஷார் மக்களே.!
குறைந்த விலையில் கிடைக்கின்றதே என தரம் குறைந்த சார்ஜ் கேபிள் வாங்குவதால் உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கு ஆபத்து ஏற்படுவது மட்டுமின்றி உங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டு டேட்டாக்களும் திருடு போக வாய்ப்பு உள்ளது என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.

சாதாரண சார்ஜர் கேபிள்
சைபர் பாதுகாப்பின் நிபுணர்களான DEF CON மற்றும் ஒயிட் ஹேட் ஹேக்கர்ஸ் ஆகியவை அளித்துள்ள தகவலின்படி ஆப்பிள் ஐபோன் சார்ஜர் கேபிள் போன்றே காணப்படும் சாதாரண சார்ஜர் கேபிள் ஒன்றின் மூலம் ஹேக்கர்கள் பிறருடைய தகவல்களை திருடுவதாகவும் இந்த சார்ஜர் கேபிள் மூலம் கம்ப்யூட்டரை டேமேஜ் செய்வது உள்பட பல முறைகேடுகளை செய்வதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கேபிளின் உள்பக்கத்தில் ஹேக்கர்கள்
இந்த போலியான கேபிளின் உள்பக்கத்தில் ஹேக்கர்கள் ஒரு சிப் பொருத்தியுள்ளதாகவும், அந்த சிப் மூலம் நமது தகவல்கள் திருடப்படுவதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

லைட்னிங் போலி கேபிள்கள்
இந்த லைட்னிங் போலி கேபிள்கள் பார்ப்பதற்கு நார்மலான கேபிள் போன் தோன்றும், ஆனால் அதன் வேலைகள் ஆபத்தானது. இந்த கேபிளை நீங்கள் உங்கள் மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டருக்கு கனெக்ட் செய்தால் போதும் உடனே ஹேக்கர்கள் உங்கள் போன் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் சிப் மூலம் திருட அதிக வாய்ப்புகள் உள்ளது.

ள் ஹார்ட் டிஸ்க்கையும் டேமேஜ் செய்துவிடும்
அதுமட்டுமின்றி உங்கள் வைஃபையும் ஹேக் செய்து சில ஆபத்தான பைல்களையும் உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்பி உங்கள் ஹார்ட் டிஸ்க்கையும் டேமேஜ் செய்துவிடும் ஆபத்தும் உள்ளது

ஹேக்கர்களால் லாக் செய்ய முடியும்
அதுமட்டுமின்றி சில தகவல்களை உங்கள் ஸ்க்ரீனுக்கு அனுப்பி அதன் மூலம் உங்கள் டேட்டாக்களை திருடுவது மட்டுமின்றி உங்கள் கம்ப்யூட்டரையே ஹேக்கர்களால் லாக் செய்ய முடியும். அந்த கம்ப்யூட்டருக்கு வேறொரு பாஸ்வேர்டை அவர்கள் கிரியேட் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரை உங்களால் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்

சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள்
அதுமட்டுமின்றி இந்த போலியான ஆபத்தான கேபிள் உங்கள் யூஎஸ்பி போர்ட்டையே காலி செய்துவிடும். எனவே தவறான கேபிளை பயன்படுத்தி உங்கள் டேட்டாக்களை இழப்பதில் இருந்து நீங்கள் தப்பித்து கொள்ள வேண்டும். ஹேக்கர்களிடம் இந்த தவறான கேபிளால் மாட்டிக்கொள்ள வேண்டாம். டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யும் போது இதுபோன்ற லைட்னிங் போலி கேபிள்களை பயன்படுத்த வேண்டாம் என சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரிஜினல் கேபிள்களை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க, ஒரிஜினல் லைட்னிங் கேபிள்களை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து வாங்க வேண்டும். அதேபோல் யூஎஸ்பியில் கனெக்ட் செய்யாமல் பெரும்பாலும் வயர்லெஸ் மூலம் கனெக்ட் செய்வதும் நல்லது. ஒருவருடைய பெர்சனல் டேட்டாக்களை ஹேக்கர்கள் ஒரு சின்ன வயர் மூலம் திருடுவதற்கு நாம் இடம் கொடுத்துவிட கூடாது. எனவே அடுத்தமுறை உங்கள் மொபைல் போனுக்கோ அல்லது கம்ப்யூட்டருக்கோ லைட்னிங் கேபிள் வாங்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து ஒரிஜினல் கேபிள்களை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். அதனால் உங்கள் டேட்டாக்கள் மட்டுமின்றி கம்ப்யூட்டருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்


Click it and Unblock the Notifications