உஷார்: போலி வேலைவாய்ப்பு ஏஜென்சிகள்., டார்கெட் இவர்கள்தான்!

|

பிரபல நிறுவனங்களின் பேரில் வேலை வாய்ப்பு அதிக சம்பளம் கொடுப்பதாக கூறி ஏமாற்றும் போலி ஏஜெண்ட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வேலை தேடுபவர்கள் கவனமோடு செயல்பட வேண்டும்.

பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்பு

பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்பு

கொரோனா தாக்கம் நாடுமுழவதும் அச்சத்தை ஏற்படுத்தியது இதன் தாக்கத்தை குறைக்கும் தடுப்பூசி எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. குறிப்பாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உலகளவில் வேலையிழப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது.

சில நிறுவனங்களில் சம்பள பிடிப்பு நடவடிக்கை

சில நிறுவனங்களில் சம்பள பிடிப்பு நடவடிக்கை

இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சில நிறுவனங்களில் சம்பளத்தில் பிடிப்புகளும் செய்யப்படுகிறது. இன்னும் பல நிறுவனங்களில் சில ஊழியர்கள் 40 நாட்கள் வரை பெஞ் செய்யப்படுகிறார்கள். குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மற்றும் சில டிஜிட்டல் துறை நிறுவனங்கள் தனது ஊழியர்களைச் சத்தமின்றி பணிநீக்கம் செய்து வருகிறது. தொடர்ந்து இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது. சில நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் அறிவித்தது.

ஐடி துறை இளைஞர்களை குறிவைத்து மோசடி

ஐடி துறை இளைஞர்களை குறிவைத்து மோசடி

இந்த நிலையில் தற்போது ஐடி துறை இளைஞர்களை குறிவைத்து மோசடி கும்பல் மேற்கொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஐடி கம்பெனியால் வேலையிழப்பை சந்தித்தவர்களை குறி வைத்தும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வாய்ப்பை தேடுபவர்களை குறிவைத்து மோசடி கும்பல்கள் பணம் பறிக்க தொடங்கியிருக்கிறது.

அதிர்ச்சி அளிக்கும் தகவல்

அதிர்ச்சி அளிக்கும் தகவல்

இதுகுறித்து Information Technology Association of Andhra Pradesh என்ற அமைப்பு தலைவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அவர் கூறியது குறித்து பார்க்கலாம். அதில் விசாகப்பட்டினம், காக்கிநாடா போன்ற நகரங்களில் அமைந்துள்ள சில ஐடி கம்பெணிகள் சைபர் க்ரைம் துறையில் புகார் அளித்துள்ளனர். அதில் தங்களது நிறுவனங்களில் பேரில் போலி வேலைவாய்ப்புகள் உருவாக்கும் ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

மகிழ்ச்சியோடு படிங்க: கிராமத்துக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த பிரபல வில்லன் நடிகர்!மகிழ்ச்சியோடு படிங்க: கிராமத்துக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த பிரபல வில்லன் நடிகர்!

வேலைதேடுபவர்களின் விவரங்கள் பதிவிறக்கம்

வேலைதேடுபவர்களின் விவரங்கள் பதிவிறக்கம்

அதன்படியான நடவடிக்கையில், இந்தியாவில் பிரபல வேலைத்தேடும் வலைதளங்களில் வேலைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களது விவரங்களை பதிவிறக்கம் செய்கிறார்கள். பின் தங்களை உண்மையை ஐடி கம்பெனிகள் ப்ளேஸ்மெண்ட் போன்று காண்பித்துக் கொண்டு வேலை வாய்ப்பு கடிதங்களை தயாரித்து வைத்துக் கொள்கிறார்கள்.

ரூ.1000 முதல் ரூ.5000 வரை கட்டணங்கள்

ரூ.1000 முதல் ரூ.5000 வரை கட்டணங்கள்

வேலை தேடுபவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் துறைக்கேற்ப பேசி இந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி வேலை கொடுப்பதாக ஒரு நபருக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.

போலி வேலை வாய்ப்புக்கான கடிதங்கள்

போலி வேலை வாய்ப்புக்கான கடிதங்கள்

போலி வேலை வாய்ப்புக்கான கடிதங்கள் அதாவது ஆஃபர் லெட்டர் கொடுக்கும் சமயத்தில் உண்மையான நேர்காணல்கள் போன்று இன்டர்வியூவை நடத்தி பணத்தை டிஜிட்டல் முறையில் பெற்றுக் கொள்கிறார்கள். இது அனைத்தும் முடிந்து பணம் கிடைத்தவுடன் அவர்களது போன் நம்பர்களை பிளாக் செய்துவிடுகிறார்கள்.

ஏமாற்றுக்காரர்களிடம் பணம் செலுத்த வேண்டாம்

ஏமாற்றுக்காரர்களிடம் பணம் செலுத்த வேண்டாம்

கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் பல்வேறு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. பலர் வேலை இழந்து தவிக்கின்றனர். இருப்பினும் இதுபோன்று ஏமாற்றுக்காரர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என்றும் சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Best Mobiles in India

English summary
பிரபல நிறுவனங்களின் பேரில் வேலை வாய்ப்பு அதிக சம்பளம் கொடுப்பதாக கூறி ஏமாற்றும் போலி ஏஜெண்ட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வேலை தேடுபவர்கள் கவனமோடு செயல்பட வேண்டும். Fake Employment Agencies are Deceiving Many by Claiming to be Hiring

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X